MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • போடு.!! மாதம் ரூ.2.7 லட்சம் வருமானம்.. ஃபேஸ்புக் அறிவித்த புதிய திட்டம்.!

போடு.!! மாதம் ரூ.2.7 லட்சம் வருமானம்.. ஃபேஸ்புக் அறிவித்த புதிய திட்டம்.!

மெட்டா நிறுவனம் 'கிரியேட்டர் ஃபாஸ்ட் டிராக்' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது மற்ற தளங்களில் உள்ள கிரியேட்டர்களை ஃபேஸ்புக்கிற்கு ஈர்க்கும் நோக்கம் கொண்டது. மாதம் ரூ.2.7 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.

1 Min read
Author : Raghupati R
Published : Mar 20 2026, 05:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
ஃபேஸ்புக் மூலம் வருமானம்
Image Credit : Google

ஃபேஸ்புக் மூலம் வருமானம்

கலிஃபோர்னியாவில் தலைமையகம் கொண்ட மெட்டா நிறுவனம், ஃபேஸ்புக்கில் அதிகமான கன்டென்ட் கிரியேட்டர்களை ஈர்க்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம், டிக்டாக், யூடியூப் போன்ற தளங்களில் ஆக்டிவாக உள்ளவர்கள், ஃபேஸ்புக்கில் உள்ளடக்கம் பகிர்ந்தால் நல்ல வருமானம் பெறலாம் என நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். இந்த முயற்சி, கிரியேட்டர்களை மீண்டும் ஃபேஸ்புக்கிற்கு திரும்பச் செய்வதே முக்கிய நோக்கமாக உள்ளது. இந்த புதிய திட்டம் ‘கிரியேட்டர் ஃபாஸ்ட் டிராக்’ என அறியப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
23
மாதம் 3,000 டாலர்
Image Credit : Asianet News

மாதம் 3,000 டாலர்

இதில் சேர்வதற்கு, மற்ற சமூக வலைத்தளங்களில் குறைந்தது 20,000 பின்தொடர்பவர்கள் இருக்க வேண்டும். தகுதி பெற்றவர்களுக்கு ஆரம்பமாக 100 டாலர் (சுமார் ரூ.9,000) வரை வழங்கப்படும். இதன் மூலம் சிறிய அளவிலான கிரியேட்டர்களும் வருமானம் பெறும் வாய்ப்பு பெறுகின்றனர். பின்தொடர்பவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வருமானமும் அதிகரிக்கும். ஒரு லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளவர்களுக்கு மாதம் சுமார் 1,000 டாலர் (ரூ.90,000க்கும் மேல்) கிடைக்கும். மேலும், 10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட பின்தொடர்பவர்கள் இருந்தால் மாதம் 3,000 டாலர் (ரூ.2.7 லட்சம் வரை) சம்பாதிக்க முடியும். ஆனால், இந்த வருமானத்தைப் பெற தொடர்ந்து செயல்பாடு அவசியம்.

Related Articles

Related image1
சுடு தண்ணீர் பட்டாலும் ஒன்னும் ஆகாது! மிரட்டலான IP69 பாதுகாப்புடன் புதிய ஓப்போ போன் அறிமுகம்!
Related image2
ஜிம்முக்கு போறீங்களா? இனி மொபைல் தேவையில்லை! கார்மின் வாட்ச்சிலேயே வாட்ஸ்அப் வந்தாச்சு!
33
கிரியேட்டர்களுக்கு அதிக ரீச்
Image Credit : Getty

கிரியேட்டர்களுக்கு அதிக ரீச்

30 நாட்களில் குறைந்தது 15 ஒரிஜினல் ரீல்கள், 10 நாட்களாவது இடைவெளியில் பதிவிட வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இந்த ஊக்கத் தொகை மூன்று மாதங்கள் மட்டுமே வழங்கப்படும். அதன் பிறகு, ஃபேஸ்புக்கின் பிற வருமான திட்டங்களில் சேர வாய்ப்பு இருக்கும். மேலும், ‘குவாலிஃபைடு வியூஸ்’ என்ற புதிய அளவீட்டின் மூலம், உண்மையான பார்வைகள் அடிப்படையில் வருமானம் கணக்கிடப்படும். கிரியேட்டர்களுக்கு அதிக ரீச் கிடைக்க மெட்டா உதவுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
முகநூல் (Mukanool)
தொழில்நுட்பம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
7000mAh Battery Phone: 3 நாள் சார்ஜ் + 7000mAh பேட்டரி.. சார்ஜர் தேவையில்லை.. மோட்டோரோலாவின் புதிய போன் அசத்துது
Recommended image2
Insurance: மொபைல் உடைந்தால் லட்சங்கள் செலவா? விலையுயர்ந்த எலெக்ட்ரானிக் பொருட்களை பாதுகாக்கும் ஸ்மார்ட் ட்ரிக்!
Recommended image3
Realme Watch S5 : ஒருமுறை சார்ஜ் போட்டா 20 நாள் தாங்கும்.. ரியல்மி வாட்ச் S5 விலை எவ்வளவு? அம்சங்கள் இதோ
Related Stories
Recommended image1
சுடு தண்ணீர் பட்டாலும் ஒன்னும் ஆகாது! மிரட்டலான IP69 பாதுகாப்புடன் புதிய ஓப்போ போன் அறிமுகம்!
Recommended image2
ஜிம்முக்கு போறீங்களா? இனி மொபைல் தேவையில்லை! கார்மின் வாட்ச்சிலேயே வாட்ஸ்அப் வந்தாச்சு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved