- Home
- டெக்னாலஜி
- எங்கிருந்தாலும் டிவி, கீசர், லைட் ஆன்/ஆஃப் செய்யலாம்! எப்படி தெரியுமா? இந்த ஒரு பிளக் போதும்!
எங்கிருந்தாலும் டிவி, கீசர், லைட் ஆன்/ஆஃப் செய்யலாம்! எப்படி தெரியுமா? இந்த ஒரு பிளக் போதும்!
Smart Plug: இந்த 10A வைஃபை ஸ்மார்ட் பிளக், உங்கள் வீட்டு சாதனங்களை மொபைல் ஆப் மற்றும் வாய்ஸ் கண்ட்ரோல் மூலம் இயக்க உதவுகிறது. இதன் மூலம் மின்சாரத்தையும் சேமிக்க முடியும்.

ஸ்மார்ட் பிளக்
இந்த ஸ்மார்ட் பிளக் 10A பவர் திறன் கொண்டது. அதனால் அதிக பவர் தேவைப்படும் சாதனங்களையும் பாதுகாப்பாக பயன்படுத்தலாம். இந்த பிளக் மூலமா டிவி, ஹீட்டர், எலெக்ட்ரிக் கெட்டில், ஃபேன் என பல பொருட்களை இயக்கலாம். இது ஃபயர்ப்ரூஃப் WPC சான்றிதழ் பெற்ற மெட்டீரியல் மற்றும் பாலிகார்பனேட் (PC) கொண்டு தயாரிக்கப்பட்டது. அதனால் நீண்ட காலம் உழைக்கும்.
மொபைல் ஆப், வாய்ஸ் கண்ட்ரோல் సౌకర్యం
இந்த ஸ்மார்ட் பிளக்கோட முக்கிய சிறப்பு அம்சம் ஆப் மற்றும் வாய்ஸ் கண்ட்ரோல்தான். உங்க ஸ்மார்ட்போன் ஆப் மூலமா எங்க இருந்து வேண்டுமானாலும் சாதனங்களை ஆன் அல்லது ஆஃப் செய்யலாம். அதுமட்டுமில்லாமல் இது Amazon Alexa மற்றும் Google Assistant-ஐயும் சப்போர்ட் செய்யும். இதனால் உங்கள் வாய்ஸ் கமெண்ட்ஸ் மூலமாவே வீட்டு எலெக்ட்ரானிக் பொருட்களை இயக்கலாம்.
டைமர் அம்சங்கள்
இந்த ஸ்மார்ட் பிளக்கில் ஸ்மார்ட் ஷெட்யூல் மற்றும் டைமர் அம்சங்கள் உள்ளன. உங்கள் தேவைக்கு ஏற்ற மாதிரி, சாதனங்கள் எப்போது வேண்டுமானாலும் ஆன்/ஆஃப் செய்வதையே நீங்களே செட் செய்து கொள்ளலாம். உதாரணமாக காலையில் நீங்க எழுந்திருக்கும் முன்பே கீசர் ஆன் செய்ய வேண்டும் அல்லது ராத்திரி ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு லைட்ஸ் ஆஃப் செய்ய செட் செய்து கொள்ளலாம். இதனால் மின்சார விரயத்தையும் குறைக்க முடியும்.
ஸ்மார்ட் பிளக்கில் மல்டி-யூசர்
இந்த ஸ்மார்ட் பிளக்கில் மல்டி-யூசர் மற்றும் குரூப் கண்ட்ரோல் அம்சம் உள்ளன. இதனால் இந்த பிளக்கோட கண்ட்ரோலை உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் ஷேர் செய்து கொள்ளலாம். அவர்களும் அவர்களது மொபைல் மூலமாக சாதனங்களை கண்ட்ரோல் செய்ய முடியும். ஒரே நேரத்தில் பல சாதனங்களை ஒரு குரூப்பா கண்ட்ரோல் செய்ய வசதி உள்ளது. இது ஸ்மார்ட் ஹோம் மேனேஜ்மென்ட்டை இன்னும் சுலபமாக்கும்.
ஓவர்லோட் பாதுகாப்பு
இந்த ஸ்மார்ட் பிளக்கில் ரொம்ப காம்பாக்ட்டான, அழகான டிசைன்களில் வருகிறது. இதில் ஆட்டோமேட்டிக் டைமர், ஓவர்லோட் பாதுகாப்பு, பவர் சர்ஜ் ஏற்படும்போது ஆட்டோமேட்டிக் ஷட்-டவுன், ஃபயர் ப்ரூஃப் மெட்டீரியல்னு பல பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன. இது உங்கள் வீட்டு சாதனங்களை மின்சார விபத்துகளில் இருந்து பாதுகாக்கும். மொத்தத்தில் இந்த Lifelong 10A WiFi Smart Plug உங்க சாதாரண எலெக்ட்ரானிக் சாதனங்களை ஸ்மார்ட்டா மாற்ற ஒரு சரியான கேட்ஜெட்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

