- Home
- டெக்னாலஜி
- இந்த விலைக்கு பின்புற டிஸ்ப்ளே போனா.. 50MP கேமரா + AMOLED ஸ்கிரீன்.. Blaze Duo 3 டிசைன் கில்லாடி
இந்த விலைக்கு பின்புற டிஸ்ப்ளே போனா.. 50MP கேமரா + AMOLED ஸ்கிரீன்.. Blaze Duo 3 டிசைன் கில்லாடி
லாவா நிறுவனம் தனது புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனான "Lava Blaze Duo 3"-ஐ ஜனவரி 19 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. இது நோட்டிஃபிகேஷன்கள் மற்றும் செல்ஃபிக்களுக்கு பயன்படும்.

லாவா பிளேஸ் டியோ 3
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் குறைந்த விலையில் புதிய மாடலை கொண்டு வர தயாராக உள்ளது லாவா. நிறுவனத்தின் அடுத்த பட்ஜெட் போன் “Lava Blaze Duo 3” என்ற பெயரில் அறிமுகமாகவுள்ளது. இதன் வடிவமைப்பை அமேசான் தளத்தில் வெளியிட்டு டீசர் காட்டியுள்ள லாவா, இந்த புதிய போனை ஜனவரி 19 அன்று அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. விலை குறைவாக இருந்தாலும், புதுமையான அம்சங்களை வழங்கும் மாடலாக இது பேசப்படுகிறது.
டீசரில் காணப்பட்ட தகவலின்படி, Lava Blaze Duo 3-ல் பின்புறம் பிளாட் பேனல் வடிவமைப்பு உள்ளது. முக்கிய கேமரா மாட்யூலுக்கு அருகில் ஒரு சிறிய இரண்டாவது பின்புற டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. கடிகாரம் போன்ற தோற்றம் கொண்ட இந்த ஸ்கிரீன் மூலம் நோட்டிஃபிகேஷன்களைப் பார்க்கவும், பாடல்களை கட்டுப்படுத்தவும், சில ஆப்ஸ்களை இயக்கவும் முடியும் என கூறப்படுகிறது. மேலும் பின்புற கேமராவை பயன்படுத்தி செல்ஃபி எடுக்கும் வசதியும் இதில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லாவா பிளேஸ் டியோ 3 அம்சங்கள்
கேமரா அம்சங்களைப் பொறுத்தவரை, இந்த போனில் டூயல் ரியர் கேமரா அமைப்பு வழங்கப்படும். இதில் குறைந்தது ஒரு சென்சார் 50MP தீர்மானம் கொண்டதாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. கேமரா லென்ஸ்கள் செங்குத்தாக அமைக்கப்பட்டுள்ளன. முன்புறத்தில் 8MP செல்ஃபி கேமரா கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. விலை வரம்பில் "கேமரா + புதிய டிஸ்ப்ளே" காம்போ இந்த போனுக்கு கூடுதல் கவனம் ஈர்க்கிறது.
சிப்செட் மற்றும் மற்ற முக்கிய அம்சங்களில், Lava Blaze Duo 3 Android 15 அடிப்படையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 6.6 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே மற்றும் 1,000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் இருக்கலாம். பின்புற இரண்டாவது திரை 1.6 இன்ச் அளவில் இருக்கும். இது MediaTek Dimensity 7060, 6GB RAM, 128GB UFS 3.1 ஸ்டோரேஜ் உடன் வரலாம். கூடுதலாக 5,000mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 5G, Bluetooth 5.2, GPS போன்ற இணைப்பு வசதிகளும் வழங்கப்படும். மேலும் 7.55mm தடிமனுடன் IP64 ரேட்டிங்கும் இதில் இடம் பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

