- Home
- டெக்னாலஜி
- Jio Rs 55 Plan: வெறும் ரூ.55 செலவில் 1000+ லைவ் டிவி சேனல்கள்! ஜியோவின் புதிய பிளான் சூப்பர்!
Jio Rs 55 Plan: வெறும் ரூ.55 செலவில் 1000+ லைவ் டிவி சேனல்கள்! ஜியோவின் புதிய பிளான் சூப்பர்!
Jio Rs 55 Plan: மொபைலிலேயே லைவ் டிவி சேனல்களை பார்க்க விரும்பும் ஜியோ பயனர்களுக்கு புதிய சலுகையை ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது. வெறும் ரூ.55-க்கு கிடைக்கும் இந்த திட்டத்தில் 1,000-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களை அணுக முடியும்.

ஜியோ ரூ.55 பிளான்
இந்த புதிய ஜியோடிவி ப்ரோ பேக்கின் விலை ரூ.55. இதை ஆக்டிவேட் செய்த 30 நாட்களுக்கு, ஜியோடிவி செயலியில் 1,000-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களைப் பார்க்கலாம். இதில் 150-க்கும் மேற்பட்ட பிரீமியம் சேனல்களும் அடங்கும். பொழுதுபோக்கு, சினிமா, செய்திகள், குழந்தைகள் நிகழ்ச்சிகள், லைஃப்ஸ்டைல் மற்றும் பிராந்திய சேனல்கள் என அனைத்தும் ஒரே பிளானில் கிடைக்கிறது.
ஜியோடிவி ப்ரோ
இந்த பிளானில் ஜியோஸ்டார், சோனி என்டர்டெயின்மென்ட், சன் டிவி நெட்வொர்க், வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி, மற்றும் ஈடிவி நெட்வொர்க்கின் பல முக்கிய சேனல்கள் உள்ளன. ஸ்டார் பிளஸ் எச்டி, கலர்ஸ் எச்டி, சோனி என்டர்டெயின்மென்ட் டெலிவிஷன் எச்டி, சோனி எஸ்ஏபி எச்டி, டிஸ்கவரி, அனிமல் பிளானட் போன்ற சேனல்களுடன், தமிழ் உள்ளிட்ட பல மாநில மொழி சேனல்களும் இதில் கிடைக்கும். ஆனால், ஜியோஸ்டார் மற்றும் சோனி குழுமத்தின் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் இந்த பேக்கில் இல்லை.
ஜியோ என்டர்டெயின்மென்ட் பேக்
முதலில், ரூ.55 ஜியோடிவி ப்ரோ பேக்கிற்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். பிறகு, ஜியோடிவி செயலியைத் திறந்து, உங்கள் ஜியோ மொபைல் எண்ணுடன் லாகின் செய்தால் போதும், சேவைகள் உடனடியாகத் தொடங்கிவிடும். இதற்கு வேறு எந்த ஆக்டிவேஷன் முறையும் தேவையில்லை. ஜியோ ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் என இரண்டு பயனர்களும் இந்த பிளானைப் பயன்படுத்தலாம். இந்த ரீசார்ஜ் திட்டம் பொழுதுபோக்கு சேவைகளுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் வாய்ஸ் கால்ஸ், எஸ்எம்எஸ் அல்லது டேட்டா பலன்கள் எதுவும் கிடையாது.
ஜியோ லைவ் டிவி
இந்த சேவைகளைப் பயன்படுத்த, உங்களிடம் ஆக்டிவாக இருக்கும் ஜியோ மொபைல் இணைப்பு இருப்பது கட்டாயம். ஒரு ஜியோடிவி கணக்கை ஒரு மொபைலில் மட்டுமே பயன்படுத்த முடியும். ரூ.55 ஜியோடிவி ப்ரோ பேக் தற்போது மைஜியோ ஆப், ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அனைத்து ஆன்லைன், ஆஃப்லைன் ஜியோ ரீசார்ஜ் மையங்களிலும் கிடைக்கிறது. பயனர்கள் இந்த பிளானை முன்கூட்டியே ஒன்றுக்கு மேற்பட்ட முறை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஒரு பேக்கின் வேலிடிட்டி முடிந்ததும், அடுத்த பேக் தானாகவே ஆக்டிவேட் ஆகிவிடும்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

