- Home
- டெக்னாலஜி
- இனி ரூ.21-க்கு ரீசார்ஜ் செய்யலாம்.. ஜியோ பிளான்களில் அதிரடி மாற்றம்.. முழு விவரம் உள்ளே!
இனி ரூ.21-க்கு ரீசார்ஜ் செய்யலாம்.. ஜியோ பிளான்களில் அதிரடி மாற்றம்.. முழு விவரம் உள்ளே!
Jio New 4G Feature Phone Plans: ஜியோ நிறுவனம் தனது ரீசார்ஜ் பிளான்களில் அதிரடி மாற்றத்தை செய்துள்ளது. இனி ரூ.21-க்கு ரீசார்ஜ் செய்யலாம். இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ரீசார்ஜ் பிளான்களை மாற்றிய ஜியோ
இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, தனது மலிவு விலை ஜியோபாரத் (JioBharat) மற்றும் ஜியோபோன் (JioPhone) பிளான்களில் பெரிய மாற்றத்தைச் செய்துள்ளது. TRAI எனப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவின் பேரில், ஜியோ தனது திட்டங்களை மாற்றி அமைத்துள்ளது. இதன் காரணமாக, பழைய ஜியோபோன் பிளான்கள் இப்போது முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளன.
மாற்றத்தின் பின்னணியில் டிராய்
குறிப்பிட்ட சில டிவைஸ்களுக்கு மட்டும் ஒரு பிளான் கொடுப்பது வெளிப்படைத்தன்மை இல்லாதது மற்றும் ஒருதலைப்பட்சமானது என்று TRAI ஆட்சேபனை தெரிவித்திருந்தது. இந்த பின்னணியில்தான் ஜியோ தனது பிளான்களின் பெயரை மாற்றியுள்ளது. 'ஜியோபாரத் பிளான்' என்பது இப்போது "4G ஃபீச்சர் போன் பிளான்" என்றும், டேட்டா ஆட்-ஆன் பிளான்கள் "4G ஃபீச்சர் போன் ஆட்-ஆன்" என்றும் மாற்றப்பட்டுள்ளன.
புதிய 4G ஃபீச்சர் போன் பிளான்கள் அமல்
ரூ.123 பிளான்
இந்த ரூ.123 பிளானில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 0.5 GB டேட்டா (மொத்தம் 14 GB), 300 SMS கிடைக்கும். வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
ரூ.234 பிளான்
ரூ.234 பிளானில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 0.5 GB டேட்டா (மொத்தம் 28 GB), 300 SMS ஆகியவை கிடைக்கும். இதன் வேலிடிட்டி 56 நாட்கள்.
ரூ.369 பிளான்
இந்த பிளானில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் உண்டு. தினமும் 0.5 GB டேட்டா மொத்தம் 42 GBடேட்டா உங்களுக்கு கிடைக்கும். 300 SMS உண்டு. இதன் வேலிடிட்டி 84 நாட்கள் .
ரூ.1234 பிளான்
சலுகைகள்: அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 0.5 GB டேட்டா (மொத்தம் 168 GB), 300 SMS. வேலிடிட்டி: 336 நாட்கள் ஆகும்.
4G ஃபீச்சர் போன் டேட்டா ஆட்-ஆன் பிளான்கள்
ரூ.26: 2GB டேட்டா (28 நாட்கள் வேலிடிட்டி)
ரூ.62: 6GB டேட்டா (28 நாட்கள் வேலிடிட்டி)
ரூ.86: தினமும் 0.5GB டேட்டா (மொத்தம் 14GB, 28 நாட்கள்).
ரூ.122: தினமும் 1GB டேட்டா (மொத்தம் 28GB, 28 நாட்கள்)
ரூ.182: தினமும் 2GB டேட்டா (மொத்தம் 56GB, 28 நாட்கள்)
இனி 21 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யலாம்
புதிதாக 4G ஃபீச்சர் போன் வாங்கும் வாடிக்கையாளர்கள், முதல் ரீசார்ஜாக 21 ரூபாய்க்கு செய்துகொள்ளலாம். இதில் அன்லிமிடெட் கால்கள், தினமும் 0.5 GB டேட்டா மற்றும் 15 SMS கிடைக்கும். ஆனால் இதன் வேலிடிட்டி 4 நாட்கள் மட்டுமே. பட்டன் கீபேட் உள்ள, ஜியோ 4G LTE-VoLTE சேவையை சப்போர்ட் செய்யும் போன்கள்தான் '4G ஃபீச்சர் போன்' என்று ஜியோ நிறுவனம் கூறுகிறது. இதற்கு முன்பு ஜியோபோன் பயனர்களுக்கு இருந்த மிக மலிவான ரூ.91 பிளான் இப்போது கிடையாது. அதற்கு பதிலாக, வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ.123 பிளானைத்தான் தேர்வு செய்ய வேண்டும். இதன் மூலம், ஆரம்ப நிலை பிளானின் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

