சினிமா, சீரிஸ் பார்த்துட்டே இருக்கலாம்.! ரூ.100-க்கே கிடைக்கும் ஹாட்ஸ்டார் பிளான்
ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ ஆகிய நிறுவனங்கள் ரூ.100 முதல் ரூ.151 வரை மலிவு விலையில் ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன் டேட்டா பிளான்களை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த திட்டத்தின் சலுகைகளை விரிவாக பார்க்கலாம்.

ஜியோ ஹாட்ஸ்டார் பிளான்
சினிமா – சீரீஸ் பார்க்க வீட்டிலிருந்தபடியே OTT-க்கு சப்ஸ்கிரைப் செய்யலாம்னு பலர் நினைப்பாங்க. ஆனா பிளான்ஸ் விலை அதிகம்னா, பலர் அதையே விட்டு விடுவாங்க. இப்போ உங்களுக்காக ஜியோ ஹாட்ஸ்டார் பிளான் ரூ.100-க்கு வந்திருக்கு. இதில் சினிமா நிகழ்ச்சிகள் மட்டும் இல்லாம, டேட்டாவும் சேர்ந்து கிடைக்குது.
ஏர்டெல் ரூ.100 பிளான்
ஏர்டெல் வழங்கும் இந்த டேட்டா பிளான் 30 நாட்கள் வரை வாலிடிட்டியோட வரும். இதில் உங்களுக்கு 5ஜிபி ஹைஸ்பீட் டேட்டா கிடைக்கும். ஆனால் கவனிக்கணும் விஷயம், இந்த பிளான்ல கால், எஸ்எம்எஸ் நன்மை கிடையாது. இது முழுக்க டேட்டா பிளான்தான்.
ஜியோ ரூ.100 பிளான்
ரிலையன்ஸ் ஜியோவின் இந்த பிளான் தான் ஹைலைட். ஏனெனில் இதுலவும் 5GB டேட்டா கிடைக்கும். ஆனால் ரூ.100-க்கு 30 நாட்களுக்கே இல்ல, நேரடியாக 90 நாட்கள் ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன் உங்க மொபைல், டிவி எதுல வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதாவது, மூன்று மாத ஹாட்ஸ்டார் ரூ.100-க்கே.
விஐ ரூ.151 பிளான்
வோடபோன்-ஐடியா (Vi) பிளான் சற்று அதிக விலை, ரூ.151. ஆனாலும் இதுவும் 90 நாட்கள் வரை ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷனோட வரும். இதோட சிறப்பு என்னன்னா, 4GB டேட்டா கூட சேர்த்து தருது.
90 நாள் ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன்
இந்த பிளான்ஸ்ல எதுவும் தனியாக வேலை செய்யாது. உங்க நம்பர்ல ஏற்கனவே ஒரு பிரைமரி பிளான் ஆக்டிவா இருக்கணும். அதோடுதான் இந்த ஹாட்ஸ்டார் டேட்டா பிளான்ஸ்ல நன்மைகள் கிடைக்கும். கால், எஸ்எம்எஸ் பேனிபிட் எதுவும் இதில் சேர்க்கப்படவில்லை. மூன்று மாத ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன் ஒரே ரூ.100-க்கே கிடைப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சலுகை ஆகும்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

