3 மாதம் ரீசார்ஜ் செய்தால் 1 மாதம் இலவசம்.. ரூ.555 மட்டும் போதும்.. ஜியோ அதிரடி பிளான்
ரிலையன்ஸ் ஜியோ தனது ஹோம் பிராட்பேண்ட் பயனர்களுக்கு ஒரு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகையின் கீழ், மூன்று மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்தால், கூடுதலாக ஒரு மாத சேவை இலவசமாக வழங்கப்படுகிறது.

ஜியோ ரூ.555 பிளான்
ரிலையன்ஸ் ஜியோ தனது பயனர்களை கவரும் வகையில் புதிய பிராட்பேண்ட் சலுகையை அறிவித்துள்ளது. ‘ஜியோ ஹோம் பிராட்பேண்ட்’ திட்டங்களில் இந்த சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. மூன்று மாத ரீசார்ஜ் செய்தால் கூடுதலாக ஒரு மாத சேவை இலவசமாக கிடைக்கும். அதாவது, மூன்று மாத கட்டணத்தில் நான்கு மாதங்கள் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கிறது.
ஜியோ ஹோம் பிராட்பேண்ட்
ஜியோ ஹோம் பிராட்பேண்ட் என்பது சாதாரண இணைய இணைப்பு மட்டும் அல்ல. இது முழுமையான டிஜிட்டல் எக்ஸ்பீரியன்ஸை வழங்கும் ஒருங்கிணைந்த சேவையாகும். இதில் பிராட்பேண்ட் இணையத்துடன் நேரடி டிவி சேனல்கள், பல ஓடிடி ஆப்ஸ் மற்றும் எண்டர்டெயின்மென்ட் வசதிகள் அனைத்தும் ஒரே பிளானில் கிடைக்கும்.
ஜியோ ஃபைபர் திட்டங்கள்
இந்த சலுகையின் கீழ், ஆரம்ப நிலை திட்டமாக ரூ.555 பிளான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாதத்திற்கு 1000GB டேட்டா, 30 Mbps வேகம், 800-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்கள் மற்றும் 10 முதல் 12 ஓடிடி ஆப்ஸ் வரை வழங்கப்படுகின்றன. இதனால் குறைந்த விலையில் அதிக வசதிகள் பெற முடிகிறது.
ஜியோ பிராட்பேண்ட் ஆஃபர்
மேலும் அதிக வேகம் விரும்புபவர்களுக்கு ரூ.833 மற்றும் ரூ.1111 என்ற இரண்டு திட்டங்களும் உள்ளன. ரூ.833 பிளானில் 100 Mbps வேகத்துடன் 1000GB டேட்டா, கால் வசதி மற்றும் ஓடிடி சேவைகள் வழங்கப்படுகின்றன. ரூ.1111 பிளானில் இதே வேகத்துடன் கூடுதலாக 16 ஓடிடி ஆப்ஸ்கள் வரை சந்தா கிடைக்கிறது.
ஜியோ புதிய ஆஃபர்
இந்த அனைத்து திட்டங்களுக்கும் மூன்று மாத ரீசார்ஜ் செய்தால் ஒரு மாதம் கூடுதல் செல்லுபடியாக வழங்கப்படுகிறது. வேலை, படிப்பு, பொழுதுபோக்கு என அனைத்திற்கும் ஒரே தீர்வாக இருக்கும் இந்த ஜியோ பிராட்பேண்ட், வீட்டிலிருந்தே முழுமையான டிஜிட்டல் அனுபவத்தை வழங்குகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

