MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • ஜியோவின் அசுர வளர்ச்சி.. ஆகஸ்டில் மட்டும் இத்தனை லட்சம் புதிய வாடிக்கையாளர்களா? ஏர்டெல் நிலை என்ன?

ஜியோவின் அசுர வளர்ச்சி.. ஆகஸ்டில் மட்டும் இத்தனை லட்சம் புதிய வாடிக்கையாளர்களா? ஏர்டெல் நிலை என்ன?

Jio vs Airtel: ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ரிலையன்ஸ் ஜியோ 24 லட்சம் புது மொபைல் கஸ்டமர்களை சேர்த்து முதலிடத்தில் உள்ளதாக ட்ராய் ரிப்போர்ட் சொல்கிறது. ஏர்டெல், வோடபோன் ஐடியாவும் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.

2 Min read
Author : Rayar A
Published : Sep 29 2026, 06:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இந்திய டெலிகாம் துறையில் ஜியோ ஆதிக்கம்
Image Credit : chatgpt

இந்திய டெலிகாம் துறையில் ஜியோ ஆதிக்கம்

இந்திய டெலிகாம் துறையில் ஆகஸ்ட் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. சுமார் 24 லட்சம் புதிய மொபைல் வாடிக்கையாளர்களைச் சேர்த்து ஜியோ முதலிடத்தில் உள்ளதாக இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த அறிக்கையின்படி, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 24 லட்சம் (2.4 மில்லியன்) வயர்லெஸ் மொபைல் வாடிக்கையாளர்களை ஜியோ சேர்த்துள்ளது. இது மற்ற நிறுவனங்களை விட மிக அதிகமாகும். பார்தி ஏர்டெல் 21 லட்சம் (2.1 மில்லியன்) பேரையும், வோடபோன் ஐடியா சுமார் 5.1 லட்சம் பேரையும், பிஎஸ்என்எல் (BSNL) சுமார் 4.9 லட்சம் பேரையும் புதியதாக சேர்த்துள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
Image Credit : Asianet News

வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆகஸ்ட் மாதத்தில் ஒட்டுமொத்த வயர்லெஸ் மொபைல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சுமார் 55 லட்சம் (5.5 மில்லியன்) அதிகரித்துள்ளது. இதனால் மாத முடிவில் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 129 கோடியாக (1.29 பில்லியன்) உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 87 வாடிக்கையாளர்களையும், எம்டிஎன்எல் (MTNL) சுமார் 5,900 வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளதாக TRAI தரவுகள் காட்டுகின்றன.

இந்தியாவின் பிராட்பேண்ட் சந்தையும் தொடர்ந்து நல்ல வளர்ச்சியைப் பெற்று வருகிறது. ஜூலை மாதத்தில் 109 கோடியாக (1.09 பில்லியன்) இருந்த மொத்த பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, ஆகஸ்ட் மாதத்தில் 110 கோடியாக (1.10 பில்லியன்) அதிகரித்துள்ளது. இது 0.61 சதவீத மாதாந்திர வளர்ச்சியாகும்.

34
இதிலும் ஜியோ தான் நம்பர் 1
Image Credit : Google

இதிலும் ஜியோ தான் நம்பர் 1

ஆகஸ்ட் மாத முடிவில் 53.8 கோடி (538.03 மில்லியன்) வாடிக்கையாளர்களுடன் பிராட்பேண்ட் சேவையிலும் ஜியோதான் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. ஏர்டெல் 38.6 கோடி (386.39 மில்லியன்), வோடபோன் ஐடியா 13 கோடி (130.88 மில்லியன்), பிஎஸ்என்எல் 2.7 கோடி (27.82 மில்லியன்) வாடிக்கையாளர்களுடன் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. டாப் 5 பிராட்பேண்ட் நிறுவனங்கள் மட்டுமே மொத்த சந்தையில் 98.58 சதவீதத்தைப் பிடித்துள்ளன.

பிராட்பேண்ட் இணைப்பிற்கு பயன்படும் பிக்சட் வயர்லெஸ் அக்சஸ் (FWA) பிரிவிலும் ஜியோ தொடர்ந்து புதிய வாடிக்கையாளர்களைச் சேர்த்து வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் 1,48,870 5G FWA வாடிக்கையாளர்களைச் சேர்த்ததன் மூலம், அதன் மொத்த 5G FWA வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 94.2 லட்சமாக (9.42 மில்லியன்) உயர்ந்துள்ளது.

44
ஏர்டெல் எப்படி?
Image Credit : Asianet News

ஏர்டெல் எப்படி?

UBR அடிப்படையிலான FWA வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் இந்த மாதத்தில் 2,29,659 அதிகரித்து 53.7 லட்சமாக (5.37 மில்லியன்) மாறியுள்ளது. மொத்தமாகப் பார்த்தால், ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சுமார் 3.8 லட்சம் FWA இணைப்புகளை ஜியோ வழங்கியுள்ளது.

இதே மாதத்தில் ஏர்டெல் 96,339 5G FWA வாடிக்கையாளர்களைச் சேர்த்துள்ளது. இதை வைத்துப் பார்த்தால், ஏர்டெல்லை விட நான்கு மடங்கு அதிக FWA இணைப்புகளை ஜியோ வழங்கியுள்ளது. ஆகஸ்ட் மாத முடிவில் இந்தியாவின் மொத்த FWA வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 1.88 கோடியாக (18.82 மில்லியன்) உள்ளது. இதில் 1.34 கோடி (13.45 மில்லியன்) 5G FWA இணைப்புகளும், 53.7 லட்சம் (5.37 மில்லியன்) UBR FWA இணைப்புகளும் அடங்கும்.

பிக்சட்-வயர்டு பிராட்பேண்ட் சேவையிலும் ஜியோதான் முன்னிலையில் உள்ளது. ஏர்டெல் 1.14 கோடி (11.44 மில்லியன்) வாடிக்கையாளர்களை வைத்துள்ள நிலையில், ஜியோ 1.48 கோடி (14.81 மில்லியன்) வாடிக்கையாளர்களுடன் முதலிடத்தில் இருப்பதாக TRAI தரவுகள் தெரிவிக்கின்றன.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜியோ சிறந்த ரீசார்ஜ் திட்டம்
ஏர்டெல்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ.10,000 போதும்.. சூப்பர் கேமரா, நீண்ட பேட்டரி லைஃப் கொண்ட டாப் 5 ஸ்மார்ட்போன்கள் லிஸ்ட் இதோ!
Recommended image2
ஜியோ, ஏர்டெல், விஐ வாடிக்கையாளர்களே... இனி 28 நாள், 84 நாள் ரீ-ஜார்ஜ் பேக் எல்லாம் கிடையாது; ட்ராய் அதிரடி!
Recommended image3
Alchemy : ஈயத்தை தங்கமாக மாற்றிய விஞ்ஞானிகள்! அப்படியானால் ரசவாதம் உண்மையா?
Related Stories
Recommended image1
ஜியோ, ஏர்டெல், விஐ வாடிக்கையாளர்களே... இனி 28 நாள், 84 நாள் ரீ-ஜார்ஜ் பேக் எல்லாம் கிடையாது; ட்ராய் அதிரடி!
Recommended image2
TRAI New Rules: மொபைல் ரீசார்ஜில் பெரிய மாற்றம்.. ஜியோ, ஏர்டெல், விஐ வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved