குரல் மூலம் ரயில் டிக்கெட் புக் செய்யலாம்! இந்திய ரயில்வேயில் AI தொழில்நுட்பம்!
IRCTC Ticket Booking using AI chatbot: ஐ.ஆர்.சி.டி.சி., குரல் கட்டளைகள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. AskDisha 2.0 என்ற AI சாட்பாட் மூலம், வாய்மொழியாக விவரங்களைச் சொல்லி டிக்கெட் புக் செய்யலாம்.

ரயில்களில் பயணம் செய்வதற்காக ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் டிக்கெட் புக்கிங் செயல்முறையை எளிதாக்க, ஐ.ஆர்.சி.டி.சி புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், எதையும் டைப் செய்யாமல், கிளிக் செய்யாமல் குரல் கட்டளைகள் மூலமே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி அறிமுகமாகி இருக்கிறது. இது எப்படி வேலை செய்கிறது என்று பாரக்கலாம்.
Train Ticket Rules
இந்திய ரயில்வே ஐஆர்சிடிசி செயலியில் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்த, AI சாட்பாட் சேவையைத் தொடங்கியுள்ளது. இந்த சாட்பாட் உதவியுடன், எதையும் டைப் செய்யாமல், கிளிக் செய்யாமல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். தேவையான அனைத்து விவரங்களும் குரல் மூலம் பதிவுசெய்து டிக்கெட்டுகளை புக் செய்யலாம்.
ரயில் பயணிகளின் வசதியை மேம்படுத்த, IRCTC வெர்சுவல் வாய்ஸ் அசிஸ்டெண்டான AskDisha 2.0 என்ற புதிய வசதியைத் தொடங்கியுள்ளது. இது ஒரு AI சேவையாகும். இதன் உதவியுடன் வாய்ஸ் கமாண்ட் மூலம் டிக்கெட் புக்கிங் செய்யும் வசதி நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த முறையில் டிக்கெட் புக் செய்ய ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது மொபைல் அப்ளிகேஷனில் AskDisha சாட்பாட் உடன் உரையாட வேண்டும். எக்ஸ் கணக்கு அல்லது வாட்ஸ்அப் மூலமாகவும் AskDISHA சாட்பாட் உடன் உரையாட முடியும். ஒருமுறை சாட்பாட் உடன் உங்கள் கணக்கு இணைக்கப்பட்டதும், "டிக்கெட் புக்" போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும். சாட்பாட் உங்களிடம் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விவரங்களைக் கேட்கும்.
அப்போது, டிக்கெட் முன்பதிவுக்குத் தேவையான தகவல்களை வாய்மொழியாகக் கொடுக்க வேண்டும். புறப்படும் நிலையம், சேருமிடம் நிலையம், பயணத் தேதி மற்றும் நீங்கள் எந்த வகுப்பில் பயணிக்க விரும்புகிறீர்கள் போன்ற தகவல்களைச் சொல்ல வேண்டும். நீங்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், சாட்பாட் கிடைக்கக்கூடிய ரயில்களின் பட்டியலைக் காண்பிக்கும். அதிலிருந்து நீங்கள் விரும்பும் ரயில், வகுப்பு மற்றும் இருக்கையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
உங்கள் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் மற்றும் பெட்டியின் விவரங்களை சாட்பாட் சரிபார்க்கும். தகவல் சரியாக இருந்தால், டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்கான கட்டண முறையை சாட்பாட் உங்களுக்குச் சொல்லும். பணம் செலுத்த UPI, கிரெடிட்/டெபிட் கார்டு, நெட் பேங்கிங் ஆகியவற்றில் விரும்பமான ஒன்றைத் தேர்ந்தெடுத்து பணம் செலுத்தலாம். பணம் செலுத்திய பிறகு, உங்கள் ஈமெயில் அல்லது மொபைல் எண்ணுக்கு ஈ-டிக்கெட் அனுப்பப்படும். டிக்கெட் முன்பதிவு செய்வது மட்டுமல்லாமல், புக் செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்யவும் இந்த சாட்போட்டை பயன்படுத்தலாம்.