MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • ஐபோன் 15 ஆர்டர் செய்தவருக்கு டம்மியைக் கொடுத்து ஏமாற்றிய ஆப்பிள் ஸ்டோர்!

ஐபோன் 15 ஆர்டர் செய்தவருக்கு டம்மியைக் கொடுத்து ஏமாற்றிய ஆப்பிள் ஸ்டோர்!

சமீபத்தில் வெளியான புதிய ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மொபைலை ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் ஆர்டர் செய்தவருக்கு ஒரு டம்மி மொபைல் டெலிவரி செய்யப்பட்டிருக்கிறது.

1 Min read
Author : SG Balan
Published : Nov 16 2023, 12:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
iPhone 15 from Apple Store

iPhone 15 from Apple Store

ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து நேரடியாக ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மொபைலை ஆர்டர் செய்த ஒருவருக்கு ஒரு டம்மி மொபைல் டெலிவரி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதிய ஐபோனை ஆர்டர் செய்தவருக்குத்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
iPhone 15 Pro Max

iPhone 15 Pro Max

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் Reddit  தளத்தில் புகாரை முன்வைத்து புலம்பி இருக்கிறார். ஆன்லைனில் ஆப்பிள் ஸ்டோரில் இருந்து நேரடியாக எதையும் ஆர்டர் செய்வதற்கு திட்டமிட்டுள்ளவர்களுக்கு எச்சரிக்கையாக அந்தப் பதிவை வெளியிட்டுள்ளார். ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து மொபைல் டெலிவரி செய்யப்பட்டுவிட்டதாக ஈமெயில் வந்திருப்பதாகவும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.

35
iPhone 15 fake phone

iPhone 15 fake phone

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் பார்சலைத் திறந்தவுடன் ஏதோ தவறு இருப்பதாக உணர்ந்துள்ளார். மொபைலின் ஏற்கெனவே ஸ்கிரீன் ப்ரொடெக்டர் ஒட்டப்பட்டிருப்பதை முதலில் கவனித்துள்ளார். பார்த்தவுடன் இது OLED ஸ்கிரீன் இல்லை என்று தெரிந்துவிட்டது.

45
iPhone delivery fraud

iPhone delivery fraud

மொபைலை ஆன் செய்த பிறகு கிடைத்திருப்பது ஐபோன் அல்ல என்பதை உணர்ந்துள்ளார். மொபைலில் டிக்டாக், பேஸ்புக், யூடியூப் போன்ற அப்ளிகேஷன்கள் ஏற்கெனவே இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனக்கு கிடைத்துள்ளது ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் அல்ல என்று தெரிந்துவிட்டால், தனது ஆப்பிள் ஐடியை அதில் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டார்.

55
iPhone delivery scam

iPhone delivery scam

இது குறித்து ஆப்பிள் நிறுவனத்திடம் புகார் ஒன்றையும் பதிவு செய்துள்ளார். புகாரை ஏற்றுக்கொண்ட ஆப்பிள் நிறுவனம் விரைவில் அனுப்பப்பட்ட டம்மி மொபைலைத் திரும்பப் பெற்றுக்கொண்டு ஒரிஜினல் ஐபோன் 15 மொபைலை அனுப்புவதாக உறுதி அளித்துள்ளது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
ஐபோன்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Jio Voice Only Plans: அன்லிமிடெட் வாய்ஸ் கால், 300 எஸ்.எம்.எஸ்: ஜியோவின் 4 புதிய மலிவு விலை பிளான்ஸ்!
Recommended image2
Nokia 2360 Flip: ஸ்மார்ட்போன் வேண்டாம்.. பட்டன் போன் போதும்! புதிய நோக்கியா மடிக்கக்கூடிய போன் அறிமுகம்
Recommended image3
Best Diwali Gifts: தீபாவளி டெக் கிஃப்ட்ஸ்: ரூ.1,000 முதல் பட்ஜெட்டில் கிடைக்கும் டாப் 6 கேட்ஜெட்டுகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved