அமெரிக்காவில் விலை அதிகரிப்பு.. iPhone 17 சீரிஸ் விலை தாறுமாறு.. எவ்வளவு?
ஐபோன் 17 தொடரின் அடிப்படை மாடல், ஏர், ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் ஆகியவற்றின் விலை மற்றும் புதிய சிப், கேமரா, டிஸ்ப்ளே போன்ற அம்சங்கள் விளக்கப்பட்டுள்ளன.

ஐபோன் 17 சீரிஸ் விலை
ஐபோன் 17 அடிப்படை மாடலுக்கு அமெரிக்காவில் 799 டாலர் (ரூ.70,000) விலை இருக்கும் என ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது. பிரீமியம் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸின் விலை 1,200 டாலர் (ரூ.1,05,000) வரை இருக்கலாம். இதுவரை இல்லாத அளவு அதிக விலையுள்ள ஐபோனாக இது இருக்கும். பிளஸ் மாடலுக்குப் பதிலாக வரும் ஐபோன் 17 ஏர் 900 டாலர் (ரூ.79,000) விலையில் வரலாம். ஐபோன் 17 ப்ரோவின் விலை 1,099 டாலர் (ரூ.96,500) ஆக இருக்கலாம்.
ஐபோன் 17
இந்தியாவில் ஐபோன் 17 அடிப்படை மாடலின் விலை ரூ.79,990-ல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிளஸ் மாடலுக்குப் பதிலாக வரும் ஐபோன் 17 ஏர் ரூ.99,990 மற்றும் ஐபோன் 17 ப்ரோ ரூ.1,24,990 விலையில் வரலாம். ரூ.1,59,990 முதல் ரூ.1,64,990 வரை விலையுள்ள ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆப்பிளின் விலையுயர்ந்த ஐபோனாக இருக்கலாம். ஐபோன் 17 அடிப்படை மாடல் புதிய A19 சிப் மற்றும் iOS 26-ல் இயங்கும்.
ஐபோன் 17 அம்சங்கள்
இதில் 6.1 இன்ச் OLED டிஸ்ப்ளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், புதிய வடிவமைப்பு மற்றும் நிறங்கள் இருக்கும். 48MP பிரைமரி கேமரா, 24MP செல்ஃபி கேமரா இதில் இடம்பெறும். ப்ரோ மாடலுக்கு அதிகம் செலவு செய்ய விரும்பாதவர்களுக்கு ஏற்றது. 5.5 மிமீ தடிமனுடன் மெல்லிய ஐபோனாக ஐபோன் 17 ஏர் வரும். 6.6 இன்ச் OLED டிஸ்ப்ளே, A19 சிப், லேசான பிரீமியம் வடிவமைப்பு, 48MP பின்புற கேமரா, 24MP முன்புற கேமரா இதில் இடம்பெறும். ஸ்டைலான, மெல்லிய ஃபோன்களை விரும்புவோருக்கானது.
ஐபோன் 17 மொபைல்
A19 ப்ரோ சிப் (3nm தொழில்நுட்பம்), 12GB RAM உடன் ஐபோன் 17 ப்ரோ வரும். டைனமிக் ஐலேண்ட், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.3 இன்ச் ப்ரோமோஷன் OLED டிஸ்ப்ளே இதில் இடம்பெறும். 48MP பிரதான, 48MP அல்ட்ரா-வைட், 48MP டெலிஃபோட்டோ லென்ஸ் கொண்ட டிரிபிள் கேமரா அமைப்பு, மேம்பட்ட பேட்டரி ஆயுள் இதன் சிறப்பம்சங்கள். அதிக செயல்திறன் கொண்ட ஃபோனை விரும்புவோருக்கானது.
ஆப்பிள் இந்திய விலை
6.9 இன்ச் ப்ரோமோஷன் OLED டிஸ்ப்ளே, A19 ப்ரோ சிப், 12GB RAM உடன் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் வரும். மேம்பட்ட டிரிபிள் 48MP லென்ஸ் கேமரா அமைப்பு, 10x ஆப்டிகல் ஜூம் வரை பெரிஸ்கோப் ஜூம் லென்ஸ், மேம்படுத்தப்பட்ட பேட்டரி மற்றும் குளிரூட்டும் அமைப்பு இதன் சிறப்பம்சங்கள். மேம்பட்ட வயர்லெஸ் இணைப்புக்காக புதிய ஆண்டெனா அமைப்பை ஆப்பிள் அறிமுகப்படுத்தும் என மஜின் பூ தெரிவிக்கிறார். கருப்பு, வெள்ளை, ஸ்டீல் கிரே, பச்சை, ஊதா, வெளிர் நீலம் போன்ற நிறங்களில் இது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடிப்படை ஐபோன் மாடல் கருப்பு, வெள்ளை, சாம்பல், அடர் நீலம், ஆரஞ்சு போன்ற நிறங்களில் வரலாம்.