வரலாறு காணாத விலை சரிவு.. ஐபோன் 16 ப்ரோ வாங்க செம சான்ஸ்.!!
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில், ஐபோன் 16 ப்ரோ மாடலுக்கு மிகப்பெரிய விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மூலம் இதை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.

ஐபோன் 16 ப்ரோ தள்ளுபடி
ஆப்பிள் ரசிகர்களுக்கு இது மிகச் சிறந்த சந்தர்ப்பமாக அமைந்துள்ளது. பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில், கடந்த ஆண்டு வெளியான ஐபோன் 16 ப்ரோ மாடலுக்கு வரலாற்றில் இல்லாத அளவுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு ரூ.1,09,999 இருந்த 128GB மாடல் தற்போது ரூ.85,999 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
பிக் பில்லியன் டேஸ்
இதனுடன், Flipkart Axis, SBI கார்டுகள் மூலம் கூடுதல் ரூ.4,000 தள்ளுபடி கிடைக்கும். மேலும், எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மூலம் பழைய போனுக்கு அதிகபட்சம் ரூ.43,850 வரை பெறலாம். இதன் மூலம், சில வாடிக்கையாளர்கள் ஐபோன் 16 ப்ரோவை ரூ.60,000 அல்லது அதற்கும் குறைவாக வாங்கும் வாய்ப்பு பெறுகின்றனர்.
மற்ற ஸ்மார்ட்போன்களுக்கும் சலுகை
பிக் பில்லியன் டேஸ் 2025 விற்பனையில் ஐபோன்களுடன் சேர்ந்து சாம்சங் கேலக்ஸி S24 அல்ட்ரா, ரியல்மி P4 5G, மோட்டோரோலா எட்ஜ் 60 ஃபியூஷன் போன்ற பிரபல ஸ்மார்ட்போன்களுக்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.