Instagram: இனிமே Reels-ஐ ஈசியா டவுன்லோட் பண்ணலாம்..! Instagram வெளியிட்ட செம அப்டேட்
இன்ஸ்டாகிராமில் இப்போது ரீல்களை டவுன்லோட் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் இப்போது ஷார்ட்ஸ் வீடியோக்களைப் பகிர மிகவும் பிரபலமான தளங்களில் ஒன்றாக மாறியுள்ளது. அதாவது, ரீல்ஸ். Meta-க்குச் சொந்தமான இது, உலகளவில் சுமார் 2.35 பில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது. மேலும் இந்தியாவில் மட்டும் மில்லியன் கணக்கான படைப்பாளிகள் ஒவ்வொரு நாளும் சராசரியாக ஆறு மில்லியன் ரீல்களை பதிவிடுவதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், இன்றுவரை பயனர்கள் தங்கள் ரீல்களைப் பதிவிறக்கம் செய்வதற்கான வசதியை வழங்கவில்லை. ஆனால் இனி அந்த கவலை இல்லை. இன்ஸ்டாகிராம் ஒரு புதிய அம்சத்தை வெளியிடுகிறது. இது பயனர்களை பொது கணக்குகளிலிருந்து ரீல்களைப் பதிவிறக்க அனுமதிக்கும்.
இன்ஸ்டாகிராமின் தலைவரான ஆடம் மொசெரி, “அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பயனர்கள் இப்போது மற்றவர்கள் இடுகையிட்ட ரீல்களை பதிவிறக்கம் செய்து தங்கள் கேமரா ரோலில் சேமிக்கலாம்” என்று சமீபத்திய ஒளிபரப்பில் அறிவித்துள்ளார். இந்த சேமித்த ரீல்களை பயன்பாட்டிற்கு வெளியேயும் பகிரலாம்.
WhatsApp-ன் 5 சீக்ரெட் அம்சங்கள் உங்களுக்கு தெரியுமா.? தெரிஞ்சா அசந்துடுவீங்க
இந்த வழியில், தங்கள் ரீல்களை தங்களைப் பின்தொடர்பவர்கள் அல்லது பிறரால் பதிவிறக்கம் செய்ய விரும்பாத நபர்கள் அதைத் தடுக்கலாம். ரீல்களைப் பதிவிறக்க பயனர்கள் தாங்கள் பதிவிறக்க விரும்பும் ரீலைத் திறக்க வேண்டும். Tap on the share icon தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு பதிவிறக்கம் செய்யலாம்.
பதிவிறக்கம் செய்யப்பட்ட ரீல்ஸில் வாட்டர்மார்க் இருக்குமா என்பதை மொசெரி குறிப்பிடவில்லை. இந்த அம்சம் தற்போது அமெரிக்காவில் மட்டுமே உள்ளது. இது இந்தியா உட்பட உலகம் முழுவதும் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இந்திய பயனர்கள் ரீல்களை நம்பாமல் பதிவிறக்கம் செய்யலாம்.