MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • கூட்டம் தாங்கல.. பிளான் சேஞ்ச்! இந்தியா AI மாநாடு நீட்டிப்பு.. எப்போ வரைக்கும் தெரியுமா?

கூட்டம் தாங்கல.. பிளான் சேஞ்ச்! இந்தியா AI மாநாடு நீட்டிப்பு.. எப்போ வரைக்கும் தெரியுமா?

AI Impact Summit மக்கள் அமோக வரவேற்பை அடுத்து இந்தியா AI உச்சி மாநாடு 2026 பிப்ரவரி 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிய கால அட்டவணை மற்றும் அனுமதி விவரங்களை இங்கே காணுங்கள்.

2 Min read
Author : Suresh Manthiram
Published : Feb 18 2026, 10:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
AI Impact Summit
Image Credit : Gemini

AI Impact Summit

டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் 'இந்தியா AI இம்பாக்ட் உச்சி மாநாடு 2026' (India AI Impact Summit 2026), பொதுமக்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. தொழில்நுட்ப ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்களின் கூட்டம் அலைமோதுவதால், இந்த மாநாட்டை மேலும் ஒரு நாள் நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பிப்ரவரி 20-ம் தேதியுடன் முடிவடைய இருந்த இந்த மாநாடு, தற்போது பிப்ரவரி 21-ம் தேதி வரை நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

25
புதிய கால அட்டவணை என்ன?
Image Credit : Asianet News

புதிய கால அட்டவணை என்ன?

பார்வையாளர்களின் வசதிக்காகக் கண்காட்சி நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மாலை 6 மணியுடன் முடிவடைய இருந்த நிலையில், இனி இரவு 8 மணி வரை மாநாடு திறந்திருக்கும்.

• பிப்ரவரி 19 (வியாழன்): உயர்மட்ட நிகழ்வுகள் காரணமாகப் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

• பிப்ரவரி 20 மற்றும் 21 (வெள்ளி & சனி): பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு முழு அனுமதி வழங்கப்படும்.

Related Articles

Related image1
AI பொருளாதாரம்: பெண்களைத் தடுக்கும் 'நேவிகேஷன் கேப்' (Navigation Gap) பற்றித் தெரியுமா?
Related image2
இனி கண்ணாடி பார்த்தால் போதும்.. நோயை புட்டு புட்டு வைக்கும் Jioவின் Aarogya AI கிளீனிக்..!
35
இளைஞர்களின் படையெடுப்பு
Image Credit : X

இளைஞர்களின் படையெடுப்பு

மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், "இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த மாநாட்டிற்குப் பதிவு செய்துள்ளனர். இதில் 2.5 லட்சம் பேர் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்பது மகிழ்ச்சிக்குரியது. இது இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) மீதான ஆர்வத்தைக் காட்டுகிறது" என்றார். சுந்தர் பிச்சை (Google), பில் கேட்ஸ் (Microsoft) போன்ற உலகத் தலைவர்கள் பங்கேற்றது இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

45
பதிவு செய்வது எப்படி?
Image Credit : X

பதிவு செய்வது எப்படி?

நாடு முழுவதிலும் இருந்து மக்கள் குவிந்ததால், ஆன்லைன் பதிவுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. "தளத்தின் கொள்ளளவை விட அதிகமானோர் ஆர்வம் காட்டுவதால், பதிவுகள் நிரம்பிவிட்டன (Oversubscribed)" என்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பிப்ரவரி 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நேரில் வருபவர்களுக்கு அனுமதி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

55
மூன்று சூத்திரங்கள்
Image Credit : Carnegie India

மூன்று சூத்திரங்கள்

பிரதமர் மோடி தொடங்கி வைத்த இந்த மாநாடு, "மக்கள், கிரகம் மற்றும் முன்னேற்றம்" (People, Planet, and Progress) என்ற மூன்று முக்கியக் கொள்கைகளை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. 110 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் புதிய கண்டுபிடிப்புகளை இங்கே காட்சிப்படுத்தியுள்ளனர். தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்நுட்பம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
அமெரிக்காவையே மிஞ்சப்போகும் இந்தியா? சுந்தர் பிச்சை போட்ட பலே பிளான்.. மோடி ஹேப்பி!"
Recommended image2
ஜியோ, ஏர்டெலுக்கு செக்.. ரூ.200 கூட இல்ல.. 30 நாள் வேலிடிட்டியுடன் டேட்டா மழை.. அசத்தும் BSNL
Recommended image3
இனி கண்ணாடி பார்த்தால் போதும்.. நோயை புட்டு புட்டு வைக்கும் Jioவின் Aarogya AI கிளீனிக்..!
Related Stories
Recommended image1
AI பொருளாதாரம்: பெண்களைத் தடுக்கும் 'நேவிகேஷன் கேப்' (Navigation Gap) பற்றித் தெரியுமா?
Recommended image2
இனி கண்ணாடி பார்த்தால் போதும்.. நோயை புட்டு புட்டு வைக்கும் Jioவின் Aarogya AI கிளீனிக்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved