MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • பிஎஸ்என்எல் 4ஜி குறித்து குட்நியூஸ்! 75,000 டவர்கள்! இன்டர்நெட் ஸ்பீடு தெறிக்கப் போகுது!

பிஎஸ்என்எல் 4ஜி குறித்து குட்நியூஸ்! 75,000 டவர்கள்! இன்டர்நெட் ஸ்பீடு தெறிக்கப் போகுது!

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக 4ஜி குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : Mar 13 2025, 08:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

BSNL 4G Important update: மத்திய அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் மலிவு விலையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு போட்டியாக 4ஜி சேவையை முழுமையாக கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதன் 4G நெட்வொர்க்கை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் 1,00,000 புதிய 4G மொபைல் டவர்களை அமைக்க ஒரு லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
பிஎஸ்என்எல் 4G சேவை

பிஎஸ்என்எல் 4G சேவை

பிஎஸ்என்எல் 4G சேவை இப்போது 75,000க்கும் மேற்பட்ட இடங்களில் செயல்பட்டு வருவதாக அந்நிறுவனம் சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல் மலிவு விலையில் திட்டங்களை வழங்கி வந்தாலும் இன்டர்நெட் ஸ்பீடு அதிகம் இல்லாததால் பலரும் அதில் இருந்து வெளியேறி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. 2024 டிசம்பருக்கான TRAI இன் சமீபத்திய அறிக்கையின்படி, BSNL சுமார் 3,22,000 வாடிக்கையாளர்களை இழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாத இறுதிக்குள், BSNL நிறுவனத்தில் சுமார் 91.7 மில்லியன் சந்தாதாரர்கள் இருந்தனர். பல வாடிக்கையாளர்கள் அடிக்கடி ஏற்படும் அழைப்பு துண்டிப்புகள் மற்றும் நெட்வொர்க் சிக்கல்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். அரசு இந்தப் பிரச்சினைகளை அங்கீகரித்து, BSNL நிறுவனத்தின் நெட்வொர்க் நம்பகத்தன்மையை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் பயனர்களுக்கு வேகமான இணையம் மற்றும் சிறந்த சேவையை வழங்க நிறுவனம் அதன் உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்துள்ளது. 

அதிவேக இணைய சேவை: ஏர்டெல்லை தொடர்ந்து ஜியோவுடன் கைகோர்க்கும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்

34
பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள்

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள்

அதாவது மின் தடைகளின் போதும் சேவைகள் இயங்குவதை உறுதி செய்வதற்காக அவர்கள் 30,000 புதிய காப்பு பேட்டரிகளையும் நிறுவியுள்ளனர். மேலும் அவர்களின் நெட்வொர்க்கை ஆதரிக்க 15,000 க்கும் மேற்பட்ட மின் உற்பத்தி நிலையங்கள் இப்போது செயல்பாட்டில் உள்ளன. இந்த முயற்சிகள் இருந்தபோதிலும், வாடிக்கையாளர் தக்கவைப்பில் BSNL சவால்களை எதிர்கொள்கிறது. இது நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மட்டும் சுமார் 300,000 சந்தாதாரர்களை இழக்க வழிவகுத்தது.

44
பிஎஸ்என்எல் பிளான்கள்

பிஎஸ்என்எல் பிளான்கள்

நாடு முழுவதும் உள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் கிராமங்களிலும் 4ஜி டவர்கள் நிறுவப்பட உள்ளன. இந்தியாவின் முக்கியமான 15 நகரங்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை கொண்டு வர உள்ளதால் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் சுனில் மிட்டலின் ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் கடும் சவாலை எதிர்கொள்ள இருக்கின்றன. பிஎஸ்என்எல்லின் மேம்பட்ட டவர்கள் மூலம் ஹை ஸ்பீடு இன்டர்நெட் கிடைக்கும். 4ஜி சேவை முழுவமையாக வரும்போது ஏர்டெல், ஜியோவில் இருந்து ஏராளமான வாடிக்கையாளர்கள்  பிஎஸ்என்எல் பக்கம் சாய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் எக்ஸ் உலகில் ஒரு புதிய புரட்சி! கமண்ட்களுக்கு பதிலளிக்கு Grok AI!

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Flipkart-ல் iPhone 17 Pro Max- க்கு அதிரடி தள்ளுபடி!
Recommended image2
HMD Vibe 2 5G : பட்ஜெட் விலையில் 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. HMD Vibe 2 மொபைலுக்கு இந்தியாவே வெயிட்டிங்
Recommended image3
Amazon Sale : 8000mAh பேட்டரி, 50MP கேமரா.. Nord CE6 இப்போது தள்ளுபடியில்.. ஆர்டர் குவியுது
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved