MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • ஒரு நல்ல ஸ்மார்ட் டிவியை எப்படி வாங்குவது? இந்த '5' அம்சங்களை பார்த்தால் போதும்! முழு விவரம்!

ஒரு நல்ல ஸ்மார்ட் டிவியை எப்படி வாங்குவது? இந்த '5' அம்சங்களை பார்த்தால் போதும்! முழு விவரம்!

குறைந்த விலையில் கிடைக்கிறது என்று வாங்கப்படும் ஸ்மார்ட் டிவிகள் பல்வேறு பிரச்சனையை ஏற்படுத்துகின்றன. இதனால் ஒரு நல்ல ஸ்மார்ட் டிவியை எப்படி வாங்குவது? என்பது குறித்து இந்த செய்தியில் காணலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Jan 21 2025, 11:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Smart TV'S

Smart TV'S

இந்தியாவில் ப்ளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் அதிகரித்து விட்டன. இந்த நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை இழுக்க போட்டி போட்டு தள்ளுபடியை வாரி வழங்கி வருவதால் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள், ஹெட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. அதுவும் இப்போது பிரபலமான பிராண்ட்களின் ஸ்மார்ட் டிவிகள் கூட ரூ.10,000 விலைக்குள் கிடைக்கிறது.

நீங்கள் 32 இன்ஸ் ஸ்மார்ட் டிவிகள் முதல் 65 இன்ச் ஸ்மார்ட் டிவிகள் வரை 10 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் வாங்கிக் கொள்ள முடியும். இப்படி குறைவான விலையில் கிடைக்கும் ஸ்மார்ட் டிவிகளில் ஒரு சில டிவிகள் தான் நல்ல தரத்துடன் நீடித்து உழைக்கின்றன. பெரும்பாலான ஸ்மார்ட் டிவிகள் அவற்றை வாங்கிய சில நாட்களில் வேலையை காட்டி விடுகின்றன. டிஸ்பிளே பிரச்சனை, ஒளிபரப்பு பிரச்சனை, சவுண்ட் பிரச்ச்னை என குறைந்த விலை ஸ்மார்ட் டிவிகளில் ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் கூறப்படுகின்றன.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
How to buy good smart TV?

How to buy good smart TV?

ஸ்மார்ட் டிவியை வாங்கும்போது தள்ளுபடிகளில் மட்டுமே கவனம் செலுத்தாமல் டிவிகளின் அம்சங்களை நன்றாக கவனித்து வாங்கினால் மேற்கண்ட பிரச்சனை எழாது. ஸ்மார்ட் டிவிகள் வாங்குவதற்கு நீங்கள் எந்தெந்த அம்சங்களை ஆராய வேண்டும் என்பது குறித்து இந்த செய்தியில் நான் விளக்கமாக கூறுகிறேன்.

டிஸ்பிளே பேனல்: ஒரு ஸ்மார்ட் டிவிக்கு மூல ஆதாரமே டிஸ்பிளே தான். ஏனெனில் டிஸ்பிளே நன்றாக இருந்தால் தான் தரமான, துல்லியமான ஒளிபரப்பை பெற முடியும். ஆகவே ஸ்மார்ட் டிவி வாங்குவதற்கு முன்பு  அந்த டிவியின் டிஸ்பிளே என்ன? என்பதை கவனிக்க வேண்டியது அவசியம். நீங்கள் வாங்கும் டிவியில்  LCD, TFT, AMOLED, OLED, IPS அல்லது QLEDஆகிய டிஸ்பிளே பேனல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். ஒளிபரப்பு 4K அல்லது அல்ட்ரா HD தரம் கொண்டதாக இருக்க வேண்டும். 

JIO வாடிக்கையாளர்களுக்கு ஷாக்; பிரபலமான ரீசார்ஜ் பிளான் விலையை உயர்த்திய ஜியோ; முழு விவரம்!

34
Budget Price Smart TV

Budget Price Smart TV

சவுண்ட் சிஸ்டம்: ஸ்மார்ட் டிவிகளில் சவுண்ட் நன்றாக இருந்தால் தெளிவான சவுண்ட் கிடைத்து பாடல்களை, திரைப்படங்களை ரசிக்க முடியும். ஆகவே நீங்கள் வாங்கும் டிவியில் நல்ல சவுண்ட் சிஸ்டம் இருக்கிறதா? என்று செக் செய்யுங்கள் ஒரு நல்ல ஆடியோ அனுபவத்திற்கு ஸ்மார்ட் டிவியில் குறைந்தது 30W ஒலி வெளியீடு இருப்பதை உறுதி செய்யுங்கள்.

இணைப்பு ஆப்ஷன்கள் (Connectivity options): இன்று பெரும்பாலான ஸ்மார்ட் டிவிகள் USB சாதனங்களை நம்பியிருப்பதால் நீங்கள் வாங்கும் டிவியில் 2-3 HDMI மற்றும் USB போர்ட்கள் இருப்பதை உறுதிசெய்யவும்.

ரேம் மற்றும் ஸ்டோரேஜ்: ஸ்மார்ட் டிவியில் அதிக ரேம் மற்றும் ஸ்டோரேஜ் இருந்தால் சிறப்பாக செயல்படும். நீங்கள் விரும்பிய சீரியல், பாடல்களை சேமித்து வைக்க குறைந்தபட்சம் 32GB ஸ்டோரேஜ் கொண்ட டிவியை தேர்வு செய்யுங்கள்.

44
Low Price Smart TV

Low Price Smart TV

வாரன்ட்டி மற்றும் அப்டேட்: ஸ்மார்ட் டிவி வாங்குவதற்கு முன்பாக அது எவ்வளவு வாரன்ட்டி கொடுக்கிறது என்று பார்ப்பது மிக அவசியம். ஏனெனில் வாரன்ட்டி இருந்தால் தான் டிவியில் ஏதும் பிரச்சினை ஏற்பட்டால் நிறுவனங்களிடம் நீங்கள் முறையிட முடியும்.  இதேபோல் ஸ்மார்ட் டிவிகளிலும் புதுப்புது அப்டேட்கள் செய்யப்படுவதால் லேட்டஸ் அப்டேட் செய்யப்பட்ட ஸ்மார்ட் டிவிகளை வாங்குவது சிறந்தது.

நீங்கள் ஸ்மார்ட் டிவிக்கு வாங்குவதற்கு மேற்கண்ட அம்சங்களை பார்த்தால் நல்ல தரமான டிவியை உங்களால் வாங்க முடியும். இதன்மூலம் பணத்தை சேமிப்பது மட்டுமினறி, தேவையற்ற பிரச்சனைகள் வராமலும் தடுக்க முடியும்.

ஜியோ சிம் வச்சிருக்கீங்களா? டேட்டாவை வாரி வழங்கும் பிளான்கள்; 84 நாள் வேலிடிட்டி; மிஸ் பண்ணாதீங்க!

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தொழில்நுட்பம்
 
3rd TEST • SA vs AUS
Live
SASA
(129.0 ov) 329 & 367/9
AUSAUS
429
Day 4 - Session 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
இருளிலிருந்து உருவான பிரபஞ்சம்: 1,300 கோடி ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்ன? ஹப்பிள் தொலைநோக்கி வெளியிட்ட உண்மை!
Recommended image2
40 மணி நேரம் பேட்டரி, 1வருட இலவச சப்ஸ்கிரிப்ஷன்: அறிமுகமானது 'நாய்ஸ் பட்ஸ் ஆர்1 கானா எடிஷன்'!
Recommended image3
பி.எஸ்.என்.எல் ரூ.1499 vs ரூ.1999: 300 நாட்களுக்கு மேல் வேலிடிட்டி தரும் திட்டங்களில் எது பெஸ்ட்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved