MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • கையில் காசு வேண்டாம்.. கற்பனை மட்டும் போதும்! AI மூலம் நீங்களும் இனி அசத்தலான டிசைனர் ஆகலாம்!

கையில் காசு வேண்டாம்.. கற்பனை மட்டும் போதும்! AI மூலம் நீங்களும் இனி அசத்தலான டிசைனர் ஆகலாம்!

AI Image Generators உங்களின் வெறும் கற்பனையை வார்த்தைகளாக மாற்றி, AI மூலம் எப்படி இலவசமாகப் புகைப்படங்களை உருவாக்குவது? முழுமையான வழிகாட்டுதல் இதோ.நீங்களும் இனி அசத்தலான டிசைனர் ஆகலாம்!

2 Min read
Author : Suresh Manthiram
Published : Mar 02 2026, 06:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
AI Image Generators கற்பனைக்கு உயிர் கொடுக்கும் AI தொழில்நுட்பம்
Image Credit : Gemini

AI Image Generators கற்பனைக்கு உயிர் கொடுக்கும் AI தொழில்நுட்பம்

உங்களுக்குள் பல பிரம்மாண்டமான கற்பனைகள் இருக்கலாம். ஆனால், அவற்றை ஒரு ஓவியமாகவோ அல்லது டிஜிட்டல் படமாகவோ (Digital Art) மாற்றும் திறனோ, டிசைனிங் மென்பொருட்களின் (Design Software) அறிவோ இல்லாமல் இருக்கலாம். இனி அந்தக் கவலை வேண்டாம்! உங்களின் வெறும் கற்பனையை, தட்டச்சு செய்யும் வார்த்தைகள் மூலம் கண்முன் நிறுத்துகிறது 'AI Image Generator' எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்.

கிராஃபிக் டிசைனர்கள் பல மணிநேரம் அல்லது நாட்கள் செலவழித்து உருவாக்கும் ஒரு புகைப்படத்தை, இந்த AI தொழில்நுட்பம் ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் இலவசமாக உருவாக்கித் தருகிறது. பிளாகர்கள் (Bloggers), மார்க்கெட்டிங் செய்பவர்கள், சிறு குறு தொழில் முனைவோர் என அனைவருக்கும் இது மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். இதற்காக எந்தவொரு விலையுயர்ந்த மென்பொருளையும் நீங்கள் பதிவிறக்கம் செய்யத் தேவையில்லை.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
எந்த AI டூலை பயன்படுத்துவது?
Image Credit : google

எந்த AI டூலை பயன்படுத்துவது?

தொடக்க நிலையில் இருப்பவர்களுக்கு, பயன்படுத்த எளிதான அதேசமயம் சிறப்பான முடிவுகளைத் தரும் ஒரு AI டூல் அவசியம். இதற்கு 'Photoeditorai.io' போன்ற இணையதளங்கள் சிறந்த தேர்வாக அமைகின்றன. இதில் உள்ள 'Text-to-Image' வசதி மூலம், நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதை வெறும் டெக்ஸ்ட் (Text) ஆகக் கொடுத்தால் போதும்; அது ஒரு அழகிய புகைப்படமாக மாறிவிடும்.

இதுதவிர, 'Image-to-Image' என்ற இன்னொரு அட்டகாசமான வசதியும் உள்ளது. அதாவது, உங்களிடம் ஏற்கனவே உள்ள ஒரு சாதாரண புகைப்படத்தை அப்லோட் செய்து, அதனை எந்த மாதிரியான ஸ்டைலில் (உதாரணமாக: கார்ட்டூன், நியான், ஆயில் பெயிண்டிங்) மாற்ற வேண்டும் என்று கட்டளையிட்டால், AI அதை அப்படியே செய்து கொடுக்கும்.

35
புகைப்படத்தை உருவாக்குவது எப்படி? (4 எளிய படிகள்)
Image Credit : google

புகைப்படத்தை உருவாக்குவது எப்படி? (4 எளிய படிகள்)

படி 1: சரியான 'ப்ராம்ப்ட்' (Prompt) கொடுப்பது

AI-க்கு நீங்கள் கொடுக்கும் கட்டளைதான் 'Prompt'. இது எவ்வளவு தெளிவாக இருக்கிறதோ, அவ்வளவு துல்லியமாக புகைப்படம் கிடைக்கும். வெறுமனே "ஒரு கார்" என்று சொல்வதற்குப் பதிலாக, "1960-களின் மாடல் சிவப்பு நிற வின்டேஜ் கார், சூரிய அஸ்தமனத்தின் போது கடற்கரைச் சாலையில் செல்கிறது" என்று தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

படி 2: ஸ்டைலைத் தேர்ந்தெடுத்தல் (Choose Your Style)

உங்களுக்குத் தேவையான புகைப்படம் எதார்த்தமானதாக (Photorealistic) இருக்க வேண்டுமா? அல்லது கார்ட்டூன், வாட்டர்கலர் பெயிண்டிங், 3D ரெண்டர் போன்ற ஸ்டைலில் இருக்க வேண்டுமா? என்பதை ப்ராம்ப்ட்டிலேயே குறிப்பிட வேண்டும். மேலும், படத்தின் அளவையும் (Aspect Ratio) நீங்கள் தேர்வு செய்துகொள்ளலாம்.

45
புகைப்படத்தை உருவாக்குவது எப்படி? (4 எளிய படிகள்)
Image Credit : google

புகைப்படத்தை உருவாக்குவது எப்படி? (4 எளிய படிகள்)

படி 3: உருவாக்குதல் மற்றும் மெருகேற்றுதல் (Generate and Refine)

விவரங்களை உள்ளீடு செய்த பின் 'Generate' பட்டனை அழுத்தினால், சில நொடிகளில் படம் தயாராகிவிடும். முதல் முறையிலேயே நீங்கள் நினைத்த படம் கிடைக்காமல் போகலாம். அதில் என்ன மாற்றம் வேண்டும் (உதாரணமாக: வெளிச்சம், நிறம்) என்பதை மீண்டும் ப்ராம்ப்ட்டில் மாற்றி அமைத்து, சரியான புகைப்படம் கிடைக்கும் வரை முயற்சிக்கலாம்.

படி 4: பதிவிறக்கம் செய்து பயன்படுத்துதல் (Download)

உங்களுக்குத் திருப்தியான புகைப்படம் கிடைத்தவுடன், அதை High-quality தரத்தில் இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். இதனை உங்களின் சமூக வலைத்தளங்கள், வலைப்பதிவுகள் (Blogs) அல்லது விளம்பரப் பணிகளுக்கு எவ்விதத் தடையுமின்றிப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

55
தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய வார்த்தைகள்:
Image Credit : google

தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய வார்த்தைகள்:

• Prompt: AI-க்கு நீங்கள் கொடுக்கும் கட்டளை.

• Negative Prompt: படத்தில் என்னென்ன விஷயங்கள் 'இருக்கக் கூடாது' என்று கட்டளையிடுவது (உதாரணமாக: கட்டடங்கள் வேண்டாம்).

• Resolution: படத்தின் அளவு மற்றும் துல்லியம் (உதாரணமாக: 1024x1024).

இனி எதற்காகக் காத்திருக்கிறீர்கள்? உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு, விதவிதமான AI புகைப்படங்களை இப்போதே உருவாக்கத் தொடங்குங்கள்!

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்நுட்பம்
 
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
2nd TEST • SA vs AUS
Result
SASA
425/9
AUSAUS
99 & 295
SA beat AUS by 31 runs
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
02:00 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
அன்று C2H, இன்று ஓடிடி... 11 ஆண்டுகளுக்கு பின் வெளியான சேரனின் 'ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை' படம் எப்படி இருக்கு?
Recommended image2
10,100mAh பேட்டரி, 200MP கேமரா: டூயல் ஃபேன் கூலிங், 100W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் களமிறங்கிய ஹானர் வின் 2 ஸ்மார்ட்போன்!
Recommended image3
நீலக்கடலில் ஆச்சரியம்: ஓமன் கடற்கரையில் துள்ளிக்குதித்த அரிய வகை இளஞ்சிவப்பு டால்பின்கள்!
Related Stories
Recommended image1
வெறும் கூலிங் கிளாஸ் இல்லை.. கேமரா, ஏஐ (AI) என மிரட்டும் மெட்டாவின் ஸ்மார்ட் கிளாஸ்கள் இந்தியாவில் அறிமுகம்!
Recommended image2
கேமர்கள் மற்றும் கிரியேட்டர்களுக்கு செம நியூஸ்! AI தொழில்நுட்பத்துடன் மிரட்ட வரும் புதிய ASUS 2026 லேப்டாப்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved