உடனே டெலீட் பண்ணுங்க! இந்த 3 ஆப் உங்க போன்ல இருந்தா ஆபத்து - மத்திய அரசு எச்சரிக்கை!
Android AnyDesk, TeamViewer போன்ற ஸ்கிரீன் ஷேரிங் செயலிகள் மூலம் பண மோசடி நடப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. உடனே அவற்றை நீக்குங்கள்.

Android தவிர்க்க முடியாத ஸ்மார்ட்போன்
இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாடு என்பது நம் வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டது. வங்கி பரிவர்த்தனைகள் (Banking), ஷாப்பிங், அலுவலகப் பணிகள் என அனைத்தும் மொபைல் மூலமாகவே நடைபெறுகின்றன. ஆனால், ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க, ஆன்லைன் மோசடிகள் (Online Fraud), ஸ்பேம் அழைப்புகள் மற்றும் சைபர் குற்றங்களும் பன்மடங்கு பெருகிவிட்டன. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, மத்திய அரசு அவ்வப்போது பாதுகாப்பு எச்சரிக்கைகளை வெளியிட்டு வருகிறது.
மத்திய அரசின் அவசர எச்சரிக்கை
சமீபத்தில், இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (I4C) ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி, ஸ்கிரீன் ஷேரிங் (Screen-sharing) மற்றும் ரிமோட் அக்சஸ் (Remote Access) செயலிகள் சாதாரண பயனர்களுக்கு மிகவும் ஆபத்தானவை என்று தெரிவித்துள்ளது. சைபர் குற்றவாளிகள் இந்த செயலிகளைப் பயன்படுத்தி, பயனர்களின் போனை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து மோசடியில் ஈடுபடுகின்றனர்.
எந்த 3 செயலிகள்?
மோசடிக்கு அதிகம் பயன்படுத்தப்படும் கீழ்க்கண்ட மூன்று பிரபலமான ஸ்கிரீன் ஷேரிங் செயலிகளை உடனடியாக நீக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது:
1. AnyDesk
2. TeamViewer
3. QuickSupport
இந்த செயலிகள் உண்மையில் தொழில்நுட்ப உதவிக்காக (Technical Support) உருவாக்கப்பட்டவை என்றாலும், தற்போது இவை பண மோசடிக்குத் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன.
மோசடி நடப்பது எப்படி?
வங்கி அதிகாரி, கஸ்டமர் கேர் அல்லது அரசு ஊழியர் போல பேசும் மோசடிக்காரர்கள், உங்களை நம்ப வைத்து இந்த செயலிகளை டவுன்லோட் செய்ய வைப்பார்கள். நீங்கள் ஒருமுறை இந்த செயலியை இன்ஸ்டால் செய்து, அவர்கள் கேட்கும் 'கோடு' (Code) அல்லது அனுமதியை கொடுத்துவிட்டால் போதும்; உங்கள் போன் முழுவதுமாக அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிடும். இதன் மூலம் அவர்களால்:
• உங்கள் வங்கிப் பரிவர்த்தனைகளைக் கண்காணிக்க முடியும்.
• OTP மற்றும் பாஸ்வேர்டுகளைத் திருட முடியும்.
• உங்கள் மெசேஜ், கேலரி போட்டோக்களை பார்க்க முடியும்.
• உங்களுக்கே தெரியாமல் உங்கள் கணக்கிலிருந்து பணத்தை மாற்ற முடியும்.
தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
இந்த ஆபத்திலிருந்து தப்பிக்க பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்:
• தேவையில்லாத ஸ்கிரீன் ஷேரிங் செயலிகளை உடனே அன்இன்ஸ்டால் (Uninstall) செய்யுங்கள்.
• யார் சொன்னாலும், தெரியாத நபரின் அறிவுறுத்தலின் பேரில் எந்த ஆப்பையும் இன்ஸ்டால் செய்யாதீர்கள்.
• ஒரு செயலியை இன்ஸ்டால் செய்யும் முன் அது என்னென்ன அனுமதிகளை (Permissions) கேட்கிறது என்பதை கவனியுங்கள்.
• OTP அல்லது தனிப்பட்ட தகவல்களை யாருடனும் பகிராதீர்கள்.
பாதிக்கப்பட்டால் 1930!
ஒருவேளை நீங்கள் சைபர் மோசடியில் சிக்கி பணத்தை இழந்தால், உடனடியாக 1930 என்ற தேசிய சைபர் கிரைம் ஹெல்ப்லைன் எண்ணை அழையுங்கள். அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளியுங்கள். விரைவாக செயல்பட்டால் இழந்த பணத்தை மீட்க வாய்ப்புள்ளது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.
