தொடங்குகிறது ஜெமினி சகாப்தம்! சாட் ஜிபிடியை காலி செய்யப்போகும் புதிய AI மாடல் கூகுள் ஜெமினி!
உலகளாவிய AI தொழில்நுட்ப போட்டியில் கூகுள் முன்னேறி வருகிறது. அந்நிறுவனம் தனது ஜெமினி மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.
Google Gemini AI Model
உலகளாவிய AI தொழில்நுட்ப போட்டியில் கூகுள் முன்னேறி வருகிறது. அந்நிறுவனம் தனது ஜெமினி மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த AI மாடல் கூகுளின் பார்ட் என்ற சாட்போட்டை மேலும் மேம்படுத்துகிறது. பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் இது பயன்படுத்தப்படுகிறது.
Google Gemini AI Model
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியில் இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்றும் கூகுளின் புதிய சகாப்தத்திற்கு தொடக்கமாக இருக்கும் என்றும் கூகுள் AI பிரிவான Google DeepMind இன் தலைமை நிர்வாக அதிகாரி டெமிஸ் ஹசாபிஸ் சொல்கிறார்.
Google Gemini AI Model
"இது ஜெமினி சகாப்தத்தின் ஆரம்பம்" என்று கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கூறினார். இந்தத் தொழில்நுட்பம் மக்களுக்கும் சமூகத்திற்கும் மகத்தான நன்மைகளைத் தரும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
Google Gemini AI Model
ஜெமினி என்பது எல்.எல்.எம். (LLM) எனப்படும் பெரிய அளவிலான தரவுகளை பயன்படுத்தி செயல்பாடுகளை மேற்கொள்ள கற்றுக்கொள்ளும் மாடல் ஆகும். இது டிஜிட்டல் புத்தகங்கள், விக்கிப்பீடியா கட்டுரைகள் உள்ளிட்ட ஏராளமான தரவுகளை பகுப்பாய்வு செய்கிறது.
Google Gemini AI Model
ஜெமினி மூலம் கூகுள் பார்ட் (Bard) மேலும் சிறப்பாக இயங்கும் என்று கூகுள் கூறியுள்ளது. பிக்சல் 8 ப்ரோவில், ஜெமினி பயன்படுகிறது. வாட்ஸ்அப்பில் தொடங்கி, மெசேஜிங் சேவைகளில் தானியங்கி பதில்களை வழங்கவும் ஜெமனி பயன்படும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.
கூகுள் ஜெமினியின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷன்களை வரவிருக்கும் மாதங்களில் கூகுள் வெளியிட உள்ளது. ஜெமினியின் உதவியுடன் இயங்கும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளையும் வெளியிடப் போகிறது.
கூகுள் கடந்த மே மாதம் நடந்த கூகுள் I/O 2023 டெவலப்பர்கள் மாநாட்டில் ஜெமினி பற்றி அறிவித்தது. புதிய கூகுள் டீப் மைண்ட் பிரிவு ஜெமினியை உருவாக்கத் தொடங்கியுள்ளதாக அறிவித்தது.