MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • அடுத்த 'ப்ளூ வேல்' ஆபத்து? 3 பிஞ்சுகளை பலிவாங்கிய 'கொரியன் லவ் கேம்' - பெற்றோர்களே உஷார்!

அடுத்த 'ப்ளூ வேல்' ஆபத்து? 3 பிஞ்சுகளை பலிவாங்கிய 'கொரியன் லவ் கேம்' - பெற்றோர்களே உஷார்!

Online Games காசியாபாத்தில் 3 சகோதரிகள் ஆன்லைன் கேம் விபரீதத்தால் உயிரிழந்த சோகம். குழந்தைகள் விளையாடக்கூடாத ஆபத்தான கேம்கள் மற்றும் பெற்றோர்களுக்கான பாதுகாப்பு குறிப்புகள் இங்கே.

2 Min read
Author : Suresh Manthiram
Published : Feb 05 2026, 07:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Korean
Image Credit : gemini

Korean

டெல்லியை அடுத்துள்ள காசியாபாத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் (12, 14, 16 வயது) 9-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், இவர்கள் ஒரு குறிப்பிட்ட 'கொரியன்' ஆன்லைன் விளையாட்டுக்கு (Korean Task-based Game) அடிமையாகி இருந்தது தெரியவந்துள்ளது. "அப்பா எங்களை மன்னிச்சிடுங்க, எங்களால் கொரியாவை விட்டு இருக்க முடியாது" என அவர்கள் எழுதி வைத்திருந்த கடிதம், ஆன்லைன் மோகம் எந்த அளவிற்கு பிஞ்சு மனங்களை பாதித்துள்ளது என்பதை காட்டுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
உயிரை பறிக்கும் 'கொரியன் லவ் கேம்' (Korean Love Game)
Image Credit : Getty

உயிரை பறிக்கும் 'கொரியன் லவ் கேம்' (Korean Love Game)

இந்த சிறுமிகள் விளையாடியதாகக் கூறப்படும் விளையாட்டு, பிரபலமான 'ப்ளூ வேல்' (Blue Whale) போன்ற ஒரு டாஸ்க் அடிப்படையிலான கேம் ஆகும். இதில் மெய்நிகர் (Virtual) காதலன் அல்லது கதாபாத்திரங்களுடன் பேசுவது போலவும், அவர்கள் கொடுக்கும் கட்டளைகளை நிறைவேற்றுவது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சாதாரணமாகத் தெரியும் இந்த விளையாட்டுகள், போகப்போக ஆபத்தான கட்டளைகளை வழங்கி, இறுதியில் குழந்தைகளை தற்கொலைக்கு தூண்டும் வகையில் உள்ளன. தங்களை கொரிய இளவரசிகளாகவே பாவித்துக்கொண்ட இந்த சிறுமிகள், நிஜ உலகத்தை மறந்து விபரீத முடிவை எடுத்துள்ளனர்.

Related Articles

Related image1
கதறி அழும் விசாலாட்சி; ஆறுதல் சொல்லும் மருமகள்; குணசேகரின் கேம் இஸ் ஓவர் என்று பேசும் ஜனனி: எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்!
Related image2
லேப்டாப் திட்டம் கேம் சேஞ்சர்.. இதுதான் அழிக்க முடியாத சொத்து.. மாணவர்களுக்கு உதயநிதி அட்வைஸ்!
35
குழந்தைகள் விளையாடக்கூடாத மற்ற ஆபத்தான கேம்கள்
Image Credit : social media

குழந்தைகள் விளையாடக்கூடாத மற்ற ஆபத்தான கேம்கள்

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மொபைலில் கீழ்க்கண்ட ஆபத்தான செயலிகள் அல்லது விளையாட்டுகள் உள்ளனவா என்பதை உடனடியாக கவனிக்க வேண்டும்:

1. ப்ளூ வேல் சேலஞ்ச் (Blue Whale Challenge): 50 நாட்களில் 50 ஆபத்தான கட்டளைகளைக் கொண்டது.

2. மோமோ சேலஞ்ச் (Momo Challenge): பயமுறுத்தும் முகத்துடன் வரும் மெசேஜ்கள் மூலம் குழந்தைகளை மிரட்டும் விளையாட்டு.

3. ஃபயர் ஃபேரி (Fire Fairy): கேஸ் அடுப்பை ஆன் செய்வது போன்ற ஆபத்தான செயல்களை செய்யத் தூண்டும் கேம்.

4. பிளாக் அவுட் சேலஞ்ச் (Blackout Challenge): மூச்சடைக்கும் வரை கழுத்தை நெரித்துக் கொள்ளும் விபரீத 'டிக்டாக்' சவால்.

45
பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய எச்சரிக்கை அறிகுறிகள்
Image Credit : Google

பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய எச்சரிக்கை அறிகுறிகள்

உங்கள் குழந்தைகள் ஆன்லைன் கேம்களில் மூழ்கியிருப்பதை எப்படி கண்டுபிடிப்பது?

• நீண்ட நேரம் தனிமையில் இருப்பது அல்லது அறைக்கதவை பூட்டிக் கொள்வது.

• மொபைல் திரையை மறைப்பது அல்லது நீங்கள் வரும்போது சட்டென்று செயலியை மாற்றுவது.

• தூக்கமின்மை, பசியின்மை மற்றும் படிப்பில் கவனம் குறைவது.

• நிஜ உலக நண்பர்களிடமிருந்து விலகி, ஆன்லைன் நண்பர்களுடன் மட்டுமே பேசுவது.

55
பெற்றோர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள் (Digital Parenting)
Image Credit : our own

பெற்றோர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள் (Digital Parenting)

இனி ஒரு உயிர் போகாமல் இருக்க பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

• Google Family Link போன்ற செயலிகள் மூலம் குழந்தைகளின் மொபைல் பயன்பாட்டைக் கண்காணிக்கவும்.

• குழந்தைகளிடம் மனம் விட்டுப் பேசுங்கள்; ஆன்லைன் உலகின் ஆபத்துகளைப் புரிய வையுங்கள்.

• இரவு நேரங்களில் மொபைல் பயன்பாட்டைத் தவிர்க்கச் செய்யுங்கள்.

• கேமிங் உலகிற்கு மாற்றாக, ஓவியம், விளையாட்டு போன்ற ஆக்கப்பூர்வமான செயல்களில் அவர்களை ஈடுபடுத்துங்கள்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்நுட்பம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ.8,999-க்கு மிலிட்டரி கிரேட் மொபைல்.. கீழே விழுந்தாலும் பயமில்லை.. 100 நாள் வரைக்கும் சலுகை வேற இருக்கு
Recommended image2
Recharge Plan Under Rs 200: ரூ.200-க்குள் பெஸ்ட் ரீசார்ஜ் எது? ஜியோ vs ஏர்டெல் - எந்த பிளான் சிறந்தது தெரியுமா?
Recommended image3
WhatsApp Call Recording: வாட்ஸ்அப் கால்களை ரெக்கார்டு செய்யலாமா? பலருக்கும் தெரியாத ரகசியம்!
Related Stories
Recommended image1
கதறி அழும் விசாலாட்சி; ஆறுதல் சொல்லும் மருமகள்; குணசேகரின் கேம் இஸ் ஓவர் என்று பேசும் ஜனனி: எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்!
Recommended image2
லேப்டாப் திட்டம் கேம் சேஞ்சர்.. இதுதான் அழிக்க முடியாத சொத்து.. மாணவர்களுக்கு உதயநிதி அட்வைஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved