MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • 70% வரை தள்ளுபடி.. பாதி விலையில் 65 இன்ச் 4K டிவி கிடைக்குது.. ஆர்டர் போடுங்க

70% வரை தள்ளுபடி.. பாதி விலையில் 65 இன்ச் 4K டிவி கிடைக்குது.. ஆர்டர் போடுங்க

ப்ளிப்கார்ட்டில் 65 இன்ச் 4K ஸ்மார்ட் டிவிகளுக்கு மாபெரும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி பிராண்டுகளின் டிவிகள், 71% வரை தள்ளுபடியுடன், பேங்க் ஆஃபர்கள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளுடன் கிடைக்கின்றன.

2 Min read
Author : Raghupati R
Published : May 02 2026, 02:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
65 இன்ச் 4K டிவிகள் தள்ளுபடி விலையில்
Image Credit : Amazon.in

65 இன்ச் 4K டிவிகள் தள்ளுபடி விலையில்

வீட்டிலேயே தியேட்டர் அனுபவம் கிடைக்க வேண்டும் என்ற ஆசை இப்போது பலருக்கும் உள்ளது. குறிப்பாக, பெரிய ஸ்கிரீன், 4K குவாலிட்டி, டால்பி சவுண்ட் போன்ற அம்சங்களுடன் படம் பார்க்க வேண்டும் என்றால், 65 இன்ச் ஸ்மார்ட் டிவி தான் சரியான தேர்வு. அதற்கேற்ற நேரமாக, ப்ளிப்கார்ட் தளத்தில் பெரிய தள்ளுபடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எல்ஜி, சாம்சங், மோட்டோரோலா, டிசிஎல் போன்ற முன்னணி பிராண்டுகளின் டிவிகள் இப்போது குறைந்த விலையில் கிடைக்கின்றன.

25
டிவி ஆஃபர்கள்
Image Credit : Asianet News

டிவி ஆஃபர்கள்

இந்த ஆஃபரில் முக்கியமாக 65 இன்ச் 4K ஸ்மார்ட் LED டிவிகள் அதிக கவனம் ஈர்க்கின்றன. விலையிலேயே பெரிய குறைப்பு மட்டுமல்ல, பேங்க் ஆஃபர்கள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இதனால், பழைய டிவியை மாற்றி புதிய டிவியை மிகவும் குறைந்த செலவில் வாங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த ஆஃபர், பெரிய ஸ்கிரீன் டிவி வாங்க நினைப்பவர்களுக்கு சரியான சந்தர்ப்பம் உள்ளது.

Related Articles

Related image1
ரூ.10 லட்சம் லோன்… திருப்பிச் செலுத்த வேண்டியது குறைவு! கூட்டுறவு வங்கி புதிய சலுகை
Related image2
ஜியோவின் மெகா ஹிட் சலுகை: ரூ.149-க்கு ரீசார்ஜ் செஞ்சா 3 மாசம் ஹாட்ஸ்டார் ஃப்ரீ..!
35
டிசிஎல்
Image Credit : Asianet News

டிசிஎல்

டிசிஎல் நிறுவனத்தின் 65 இன்ச் 4K ஸ்மார்ட் டிவி இந்த ஆஃபரில் மிகப் பெரிய டீலாக உள்ளது. உண்மையான விலை ரூ.1,20,990 இருந்தாலும், தற்போது இது ரூ.34,998-க்கு விற்கப்படுகிறது. அதாவது சுமார் 71% தள்ளுபடி. கூகிள் டிவி பிளாட்ஃபார்மில் இயங்கும் இந்த டிவி, டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மாஸ் ஆதரவு கொண்டது. 24W ஸ்பீக்கர் வசதியுடன் OTT ஆப்களில் குவாலிட்டியான அனுபவம் கிடைக்கும்.

45
மோட்டோரோலா
Image Credit : Asianet News

மோட்டோரோலா

மேலும், மோட்டோரோலா 65 இன்ச் 4K QLED ஸ்மார்ட் டிவியும் கவனிக்க வேண்டிய ஒன்று. ரூ.88,399 இருந்த விலை தற்போது ரூ.43,499-ஆக குறைக்கப்பட்டுள்ளது. 48W ஸ்பீக்கர்கள், Google TV ஆதரவு ஆகியவை இதன் சிறப்பம்சங்கள். இதற்கு ரூ.4,320 வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் வழங்கப்படுகிறது. பழைய டிவியை மாற்றி, புதிய மாடலை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.

55
பிலிப்ஸ்
Image Credit : Asianet News

பிலிப்ஸ்

மேலும், பிலிப்ஸ் மற்றும் சாம்சங் நிறுவனங்களின் 65 இன்ச் டிவிகளும் இந்த ஆஃபரில் இடம் பெற்றுள்ளன. பிலிப்ஸ் டிவி ரூ.49,999-க்கு கிடைக்கிறது; Dolby Vision, Dolby Atmos ஆதரவு மற்றும் 30W ஸ்பீக்கர் கொண்டது. சாம்சங் டிவி ரூ.62,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது, Tizen OS மற்றும் 2 ஆண்டு வாரண்டி போன்ற அம்சங்களுடன் வருகிறது. மொத்தத்தில், இந்த ஆஃபர் பெரிய திரையில் திரைப்பட அனுபவத்தை வீட்டிலேயே அனுபவிக்க விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக உள்ளது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நுட்பக் கருவி
தள்ளுபடிகள்
Flipkart
சலுகைகள்
தொழில்நுட்பம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
இவ்வளவு கம்மி விலையில் 7000mAh பேட்டரியா? OPPO K14 5G இந்தியாவில் அதிரடி லாஞ்ச்!
Recommended image2
பவர்ஃபுல் பேட்டரி.. மிரட்டலான சிப்செட்.. கெத்தாக களமிறங்கும் Oppo Reno 16 Pro
Recommended image3
AC Buying Guide: பில்லையும் குறைக்கலாம்... குளுகுளுன்னு இருக்கலாம்.. சரியான ஏசியை தேர்வு செய்ய டிப்ஸ்!
Related Stories
Recommended image1
ரூ.10 லட்சம் லோன்… திருப்பிச் செலுத்த வேண்டியது குறைவு! கூட்டுறவு வங்கி புதிய சலுகை
Recommended image2
ஜியோவின் மெகா ஹிட் சலுகை: ரூ.149-க்கு ரீசார்ஜ் செஞ்சா 3 மாசம் ஹாட்ஸ்டார் ஃப்ரீ..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved