ஆஃபர் என்ற பெயரில் ஆப்பு வைத்த Flipkart.. வாடிக்கையாளர்கள் பெரும் ஏமாற்றம்!
பிளிப்கார்ட்டில் அதிகளவிலான சலுகைகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஆர்டர் செய்யப்பட்ட பொருட்கள் ரத்தானதால், வாடிக்கையாளர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல்ஸ் செப்டம்பர் 23 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ப்ளஸ் மெம்பர்களுக்கு ஒரு நாள் முன்னரே ஆஃபர்களை நிறுவனம் வழங்க தொடங்கியது.
முன்னதாக, சிறப்பு விற்பனை குறித்து எக்கச்சக்க விளம்பரங்கள் செய்தது. குறிப்பாக இதன்படி ஐ ஃபோன் 13 இன் விலையானது 50,000 ரூபாய் என அறிவித்து இருந்தது. இதற்காக பல வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் எதிர் பார்த்து இருந்தனர்.இந்த ஆஃபர் நள்ளிரவு 12 மணியளவில் தொடங்கியது.தொடங்கிய அரை மணி நேரத்தில் இதன் விலை கிடு கிடுவென உயர்ந்தது. இறுதியில் இதன் விலையை 56,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
Flipkart
அனைவரும் ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல்ஸ் தொடங்கிய நாளில் இருந்து அதாவது செப்டம்பர் 23 இலிருந்து செப்டம்பர் 30 வரை இதனை 49,000 ரூபாய் விலையில் வாங்கலாம் என்று திட்டமிட்டு இருந்த நிலையில், தற்பொழுது அனைவரும் மிகுந்த ஏமாற்றத்தை அடைந்துள்ளனர்.
இந்த சூழலில் ப்ளஸ் மெம்பர்களாவது பயனடைந்து இருக்கலாம் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில், அவர்களின் ஆடர்கள் ரத்து செய்யபடுவதாக டிவிட்டரில் செய்திகள் ஸ்க்ரீன் ஷாட்டுகளுடன் புகார்கள் எழுந்துள்ளன
50,000 ரூபாய்க்கு குறைவான ஆர்டர்கள் அனைத்தும் அடுத்தடுத்து ரத்து செய்ய படுவதாக கூற படுகின்றது. இதற்கு காரணம் என்ன என்று கேட்டால் ஃபிளிப்கார்ட் தரப்பில் தெளிவான விளக்கம் இல்லாமல், பேமெண்ட்டில் பிழை ஏற்பட்டதாக கூறியுள்ளன.
Flipkart Big Billion Days
நீங்கள் ஆர்டர் செய்த ஸ்மார்ட்போன் லாஜிஸ்டிக்ஸில் திருடு போய் விட்டது , உங்களுடைய ஆர்டர் முறையாக வரவில்லை என பல காரணங்கள் பிளிப்கார்ட் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் #BoycottFlipkart என்ற முழக்கம் தான் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இதனை நெட்டிசன்கள் கடுமையாக மீம்ஸ்கள் போட்டு கலாய்க்கின்றனர். ஆஃபர் என்ற பெயரில் ஆப்பு வைத்து விட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர்.