MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • ஸ்மார்ட்வாட்ச் பயன்படுத்தினால்.. புற்றுநோய் வருமா? வெளியான ஆய்வு முடிவுகள்!

ஸ்மார்ட்வாட்ச் பயன்படுத்தினால்.. புற்றுநோய் வருமா? வெளியான ஆய்வு முடிவுகள்!

ஒரு காலத்தில் நேரத்தைப் பார்ப்பதற்கு மட்டுமே கைக்கடிகாரங்கள் இருந்தன. இப்போது ஸ்மார்ட்வாட்ச்களில் தொலைபேசி அழைப்புகளிலிருந்து சமூக ஊடகங்கள் வரை அனைத்தும் செய்ய முடியும். ஆனால், நவநாகரீகமாக இருக்கும் இந்த கைக்கடிகாரங்கள் அதாவது வாட்ச் ஆனது உடல்நலத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஒரு புதிய ஆய்வு கூறுகிறது.

1 Min read
Author : Raghupati R
Published : Dec 24 2024, 12:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Smartwatch Health Risks

Smartwatch Health Risks

நாளுக்கு நாள் ஸ்மார்ட்வாட்ச் பயனர்கள் அதிகரித்து வருகின்றனர். ஆனால், நவநாகரீகத்தை உணர்த்தும் ஸ்மார்ட்வாட்ச்கள் புற்றுநோய்க்கு காரணமாகலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? புதிய ஆய்வில் இந்த அதிர்ச்சியூட்டும் தவகல் வெளியாகியுள்ளது. ஸ்மார்ட்வாட்ச்களில் உள்ள பாலிஃப்ளோரோ அல்கைல், பெர்ஃப்ளோரோஹெக்ஸனோயிக் அமிலங்கள் உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று இந்த அறிக்கை கூறுகிறது.

25
Smart Watches

Smart Watches

பாலிஃப்ளோரோ அல்கைல் ரசாயனம் ஒட்டாத பாத்திரங்கள், அழகுசாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. இவை உடலில் எளிதில் கரையாது. இதனால் இனப்பெருக்க பிரச்சனைகள், புற்றுநோய் வரலாம். தூக்கல் புற்றுநோய், புரோஸ்டேட், சிறுநீரகம், விதைப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம்.

35
Smartwatch Bands

Smartwatch Bands

ஸ்மார்ட்வாட்ச்சிலிருந்து ரசாயனங்கள் சருமத்தில் உறிஞ்சப்படுகின்றன. இதனால் தோல் பிரச்சனைகள் வரலாம். 22 பிராண்டுகளின் கைக்கடிகாரங்களைப் பரிசோதித்து இந்தத் தகவல் பெறப்பட்டுள்ளது. நீண்ட நேரம் கைக்கடிகாரம் அணிபவர்களுக்கு ஆபத்து அதிகம் என்று அறிக்கை கூறுகிறது.

45
Chemicals in smartwatch bands

Chemicals in smartwatch bands

விலையுயர்ந்த ஸ்மார்ட்வாட்ச்களில் இந்த ரசாயனங்களின் அளவு அதிகமாக இருக்கும். 30 டாலருக்கும் அதிகமான விலையுள்ள ஸ்மார்ட்வாட்ச்களில் ஃப்ளோரின் அதிகமாக இருக்கும். எனவே வாட்ச் வாங்குவதற்கு முன் அதில் என்ன இருக்கிறது என்று சரிபார்க்கவும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

55
PFAS Dangers

PFAS Dangers

ஸ்மார்ட்வாட்ச்களின் நிறம் மங்காமல் இருக்க இந்த ரசாயனங்களைப் பயன்படுத்துகிறார்கள். 68% கைக்கடிகாரங்களில் இந்த ரசாயனங்கள் உள்ளன. ஃப்ளோரோஎலாஸ்டோமர் உள்ள பல்ட்டுகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று நிறுவனங்கள் கூறியுள்ளன. எனவே ஸ்மார்ட்வாட்ச்களை வாங்கும் போது கவனத்துடன் வாங்க வேண்டும் என்றும், நீண்ட நேரம் ஸ்மார்ட்வாட்ச்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

பட்ஜெட் விலையில் விற்கக்கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்; முழு லிஸ்ட் இதோ!

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
புற்றுநோய்
ஆரோக்கியம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஜியோ-வே மிரண்டு போய்டுவாங்க..! ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள 'Unlimited' 4G. 5G மெகா பிளான்..!
Recommended image2
உங்கள் வாட்ஸ்அப் முடங்கப்போகிறதா? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய புதிய 'SIM' விதிமுறை!
Recommended image3
உஷார்! பேஸ்புக்கில் பரவும் 'ChiChi Call' வீடியோ.. ஒரு க்ளிக் செய்தால் உங்கள் பேங்க் அக்கவுண்ட் காலி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved