MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • இப்படி எல்லாம் பண்ணாதீங்க... மொபைஸ் ஸ்கிரீன் போயிடும்!

இப்படி எல்லாம் பண்ணாதீங்க... மொபைஸ் ஸ்கிரீன் போயிடும்!

உங்கள் தொலைபேசி திரையைத் தவறாகச் சுத்தம் செய்வது நிமிடங்களில் அதை சேதப்படுத்தும்! இந்தத் தவறுகளை அறியாமல் ஒருபோதும் செய்யாதீர்கள்.  

4 Min read
Author : Dinesh TG
| Updated : Sep 05 2024, 12:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

செல்போன் இப்போது ஒவ்வொருவரின் 3வது கரமாக மாறியுள்ளது என்றால் மிகையல்ல. ஆடையில்லா மனிதன் அரைமனிதன் என்று அழைக்கபடுவதைப் போல் இன்று மொபைல் போன் இல்லாத மனிதர்களே இல்லை எனலாம். பள்ளி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மொபைல் போன் வைத்துள்ளனர். நாளுக்கு நாள் புதுப்புது போன் விற்பனைக்கு வந்துகொண்டேதான் இருகிறது. அத்தனையும் மக்கள் வாங்கிகொண்டேதான் இருக்கிறார்கள்.

ஒரு மொபைல் போன் வாங்கியுடன், அதற்கு ஏற்ற டெம்பர் கிளாஸ், மொபைல் பவுச் போன்றவற்ற போட மறப்பதில்லை. ஏனென்றால் அவை மொபைல்கள் கீழே விழுவதிலிருந்து உடையாமல் காக்கும் என்பதால். எந்த மொபைல் போன் பார்த்தாலும் நம்மை முதலில் கவர்வது டிஸ்பிளேக்கள் தான். அதன் ஒளி அமைப்புகள் மற்றும் அதன் வண்ணங்கள் எப்படி பிரதிபளிக்கிறது என்பதே அதன் தரத்தையும் நிர்ணயிக்கின்றன.

செல்போன் டிஸ்பிளே பல வகைகள் உள்ளன, ஒவ்வொன்றும் தனித்துவமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன. சில முக்கியமான டிஸ்பிளே வகைகள் மற்றும் அவற்றின் அம்சங்கள் குறித்து பார்ப்போம்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

1. LCD (Liquid Crystal Display)

மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் டிஸ்பிளே வகை. பின்புலத்தில் (backlight) ஒரு வெள்ளை ஒளியைப் பயன்படுத்தி, திரையில் உள்ள ஒவ்வொரு பிக்சலையும் வெளிச்சம் காட்டுகிறது. சாதாரணமாக, TN (Twisted Nematic) மற்றும் IPS (In-Plane Switching) என இரண்டு பிரிவுகளாக இருக்கும்.

IPS LCD தரமான வண்ணங்களையும் சிறந்த பார்வை கோணத்தையும் வழங்குகிறது. மிகச் செல்வாக்கான வண்ணங்கள் அல்லது மென்மையான ஒளிப்பிழைகள் தேவையான இடங்களில் பயன்படுகிறது.

2. OLED (Organic Light Emitting Diode):

ஒவ்வொரு பிக்சலும் தனது சொந்த ஒளியை உற்பத்தி செய்யும், பின்புல ஒளி தேவையில்லை. கறுப்பு வண்ணங்கள் மிக ஆழமாகவும், வண்ணங்கள் மிகவும் சத்தமானதாகவும் இருக்கும். சிறந்த கண்டராஸ்ட் விகிதம், பின்புல ஒளியில்லாததால் ஆற்றல் நுகர்வு குறைவாக இருக்கும். பிரீமியம் செல்போன்களில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் டிஸ்பிளே இது.

3. AMOLED (Active Matrix Organic Light Emitting Diode):

OLED டிஸ்பிளேவின் மேம்பட்ட பதிப்பாகும்.ஒவ்வொரு பிக்சலுக்கும் தனித்தனி ட்ரான்ஸிஸ்டர்களின் தொகுப்பு, இது வேகமாக செயல்படக்கூடியதாக இருக்கும். மிகச் சிறந்த வண்ணங்களும், அதிக எதிர்மறைத் தரமும் உள்ளது.
கூடுதலாக, மென்மையான மற்றும் வளைந்து குலுங்கும் டிஸ்பிளேக்களாக வடிவமைக்க முடியும். உயர்தர செல்போன்களில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

35

4. Retina Display:

Apple உருவாக்கிய ஒரு LCD டிஸ்பிளே தொழில்நுட்பம். பிக்சல்கள் மேல் தெளிவு உள்ளதால், தரமான படங்களை அளிக்கிறது. பொதுவாக கண்களை எரிச்சலோடு காட்டாமல் மிகவும் தெளிவான படங்களை வழங்குகிறது. iPhone மற்றும் iPad போன்ற Apple சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது.

5. Super AMOLED:

AMOLED டிஸ்பிளேவின் மேம்பட்ட பதிப்பு. மேலதிக திறமையான ஒளியையும் மென்மையான அனுபவத்தையும் வழங்குகிறது. சூரிய ஒளியில் கூட தெளிவான பார்வையை வழங்குகிறது. Samsung உட்பட பல நிறுவனங்களின் உயர்தர மாடல்களில் பயன்படுத்தப்படுகிறது.

6. TFT LCD (Thin-Film Transistor Liquid Crystal Display):

குறைந்த விலையுள்ள LCD வகை. நல்ல வண்ண தரத்துடன் கூடிய தீர்மானம். குறைந்த செலவில் தயாரிக்க முடியும். குறைந்த செலவிலான மற்றும் நடுத்தர வகை செல்போன்களில் பயன்படுத்தப்படுகிறது.

7. Foldable Display

ஒரு புதிய தொழில்நுட்பம், இது டிஸ்பிளே வளைந்து கொடுக்கும் திறனுடையது. OLED அல்லது AMOLED தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. பெரிய திரைகள் இவ்வாறு கட்டமைக்கப்படலாம், இன்னும் சிறிய சாதனமாக மடக்கிப் பயன்படுத்தலாம். புதிய ஜெனரேஷன் மடிப்பு செல்போன்களில் பயன்படுத்தப்படுகிறது.

45

மொபைல் போனை எவ்வளவுதான் பார்த்து பார்த்து பயன்படுத்தினாலும், முறையற்ற முறையில் சுத்தம் செய்வது உங்கள் செல்போனை சேதப்படுத்தும். உங்கள் மொபைல் போனை சுத்தம் செய்வதற்கான சரியான வழியை அறிந்து கொள்வது மிக முக்கியம்.

மொபைல் ஸ்கீரனை தூய்மைபடுத்த பயன்படும் பொருட்கள்

மைக்ரோஃபைபர் துணி (Microfiber Cloth)
சிறிது தண்ணீர் அல்லது ஸ்கிரீன் கிளீனர் (ஆரம்பத்தில் தண்ணீர் மட்டும் போதும்).
காப்டன் டேப் (Scotch Tape)

மைக்ரோஃபைபர் துணி (Microfiber Cloth)

உங்கள் மொபைல் போனின் திரையைச் சுத்தம் செய்ய ஃபைபர் பஞ்சைப் பயன்படுத்தவும். இந்த துணி மிக மென்மையாக இருப்பதால், இது மொபைல் திரை மீது இலகுவாக செயல்பட்டு, சிராய்ப்புக்கான ஆபத்தைக் குறைக்கிறது மற்றும் மொபைல் போனிற்கு ஏற்படும் சேதத்தைத் தவிர்க்கிறது. சாதாரண துணிகளைப் பயன்படுத்த வேண்டாம்.

துணியை சிறிதளவு ஈரமாக்கவும்

துணியை வெறும் தண்ணீரால் சிறிது ஈரமாக்கவும். அதிகமாக ஈரமாகக் கூடாது. அல்லது ஸ்கிரீன் கிளீனர் இருப்பின் அதைப் பயன்படுத்தவும்.

டிஸ்பிளேவை மெதுவாகத் துடைக்கவும்

டிஸ்பிளே மீது மெதுவாக தடவவும், அதிக அழுத்தம் தராமல் இருப்பதை கவனத்தில் கொள்ளவும். சுழல்படியாக, மேலிருந்து கீழே சுத்தம் செய்ய வேண்டும்.

உலர்ந்த மைக்ரோஃபைபர் துணியால் மீண்டும் துடைக்கவும்

ஈரப்பதம் மிச்சமுள்ள பட்சத்தில், டிஸ்பிளே முழுமையாக காய்ந்துவிட்டது என்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்ய வேண்டும்.

55

தடிவடிவம் உள்ள அழுக்குகளுக்கு

கடினமான அழுக்குகளை நீக்க காப்டன் டேப்பைப் பயன்படுத்தலாம். சிக்கலான இடங்களில் அழுக்குகளை அகற்ற சிறிதளவு காப்டன் டேப்பைப் பயன்படுத்தி, மெதுவாக அந்த இடங்களை சுத்தம் செய்யலாம்.

நீர் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்து

உங்கள் தொலைபேசித் திரையை தண்ணீரில் துடைப்பது திடீரென சேதப்படுத்தும். எனவே, உங்கள் தொலைபேசியை சுத்தம் செய்ய நீங்கள் ஒருபோதும் தண்ணீரைப் பயன்படுத்தக்கூடாது.

சானிடைசர்கள் வேண்டாம்

டெட்டால் போன்ற கிருமிநாசினிகளில் பென்சீன் என்ற வேதிப் பொருள் உள்ளது. எனவே டெட்டாலால் தொலைபேசித் திரையை சுத்தம் செய்ய வேண்டாம். இது தொலைபேசித் திரை மற்றும் உடலுக்கு சேதம் விளைவிக்கும்.

டூத்பேஸ்ட் பயன்படுத்தலாம்

ஏதும் இல்லாத பட்சத்தில் ஒரு பஞ்சில் சிறிது பற்பசையைத் (டூத் பேஸ்ட்) தடவி தேய்த்து சுத்தம் செய்யலாம். இது தொலைபேசியின் மேற்பரப்பில் இருந்து அழுக்கு மற்றும் கறைகளை அகற்ற உதவும். இதைத் தவிர, பாக்டீரியா எதிர்ப்பு லிக்கியூட் போன்றவை மொபைல் போன் சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தலாம் நன்மை பயக்கும்.

எச்சரிக்கை:

டிஸ்பிளே மீது நேரடியாக நீரைக் கொண்டு சுத்தம் செய்யக்கூடாது. கடினமான வேதிப்பொருட்களை பயன்படுத்த வேண்டாம்.மைக்ரோஃபைபர் துணியைக் கொண்டு சுத்தம் செய்வுடன் மாற்று துணிகளை பயன்படுத்த கூடாது. இந்த முறைகளைப் பின்பற்றினால், உங்கள் மொபைல் டிஸ்பிளே சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

DT
Dinesh TG
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nokia 2360 Flip: ஸ்மார்ட்போன் வேண்டாம்.. பட்டன் போன் போதும்! புதிய நோக்கியா மடிக்கக்கூடிய போன் அறிமுகம்
Recommended image2
Best Diwali Gifts: தீபாவளி டெக் கிஃப்ட்ஸ்: ரூ.1,000 முதல் பட்ஜெட்டில் கிடைக்கும் டாப் 6 கேட்ஜெட்டுகள்!
Recommended image3
DSLR தோத்து போயிடும்... 200MP கேமரா, 7 ஆண்டுகள் அப்டேட்: இந்திய சந்தையை மிரட்ட வரும் மோட்டோரோலா சிக்னேச்சர் 27
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved