₹7,359-க்கு 32 இன்ச் Smart TV! டீல் பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க!
ரூ.10,000-க்குள் 32 இன்ச் ஸ்மார்ட் டிவி வாங்க Flipkart மற்றும் Amazon-ல் எது சிறந்த தளம் என்பதை இந்த கட்டுரை ஒப்பிடுகிறது. வாங்குவதற்கு முன் விலை, பிராண்டு மற்றும் ரிவ்யூக்களை ஒப்பிடுவது அவசியம்.

குறைந்த விலை ஸ்மார்ட் டிவி
இன்றைய காலத்தில் குறைந்த விலையில் ஸ்மார்ட் டிவி வாங்க வேண்டும் என்றால், பலரும் முதலில் கவனம் செலுத்துவது Flipkart அல்லது Amazon போன்ற ஆன்லைன் தளங்கள்தான். குறிப்பாக ரூ.10,000-க்குள் 32 இன்ச் ஸ்மார்ட் டிவி தேடுபவர்களுக்கு, எந்த தளத்தில் குறைந்த விலை கிடைக்கிறது என்ற கேள்வி அதிகமாக வருகிறது. இதற்கான பதிலை தெரிந்து கொண்டால், தேவையில்லாத கூடுதல் செலவுகளை தவிர்க்க முடியும்.
தற்போதைய விலை தகவல்படி, Amazon-ல் VW பிராண்டின் 32 இன்ச் Android TV மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. இந்த டிவி சுமார் 55% தள்ளுபடியுடன் ரூ.7,699 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், குறைந்த பட்ஜெட்டில் Android TV வாங்க நினைப்பவர்களுக்கு Amazon ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம்.
32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.10000 கீழ்
அதே நேரத்தில், Flipkart-ல் BESTON நிறுவனத்தின் 32 இன்ச் Smart TV இன்னும் குறைந்த விலையில் கிடைக்கிறது. இதற்கு 59% தள்ளுபடி வழங்கப்பட்டது ரூ.7,359 என்ற விலைக்கு விற்கப்படுகிறது. இந்த டிவி 60Hz புதுப்பிப்பு விகிதம், 20W சவுண்ட் அவுட்புட் மற்றும் Netflix, Amazon Prime Video, Jio Hotstar போன்ற முக்கிய OTT ஆப்ஸ்களுக்கு ஆதரவு அளிக்கிறது. அதனால், குடும்பப் பயன்பாட்டுக்கு ஏற்ற மாடலாக இது பார்க்கப்படுகிறது.
இவை தவிர மற்ற பிராண்டுகளும் இரண்டு தளங்களிலும் போட்டி விலையில் கிடைக்கின்றன. Flipkart-ல் Thomson TV ரூ.8,499 விலையில் கிடைப்பதாகவும், Realme TV ரூ.10,499 விலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. Amazon-ல் Philips TV ரூ.10,999-க்கும், Kodak TV ரூ.8,499-க்கும் கிடைக்கிறது. எனவே வாங்குவதற்கு முன் விலை, பிராண்டு நம்பகத்தன்மை, வாரண்டி மற்றும் ரிவ்யூ ஆகியவற்றை ஒப்பிட்டு தேர்வு செய்வதே புத்திசாலித்தனமான முடிவு.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

