- Home
- டெக்னாலஜி
- தனியா பேசி போர் அடிக்குதா? இனி நண்பர்களுடன் சேர்ந்து அதகளம் பண்ணலாம்.. ChatGPT-ல் வந்தாச்சு புது வசதி!
தனியா பேசி போர் அடிக்குதா? இனி நண்பர்களுடன் சேர்ந்து அதகளம் பண்ணலாம்.. ChatGPT-ல் வந்தாச்சு புது வசதி!
ChatGPT ChatGPT-ல் குரூப் சாட் வசதி அறிமுகம்! இனி 20 நண்பர்களுடன் இணைந்து AI-யுடன் பேசலாம். இந்த புதிய வசதியை பயன்படுத்துவது எப்படி? முழு விவரம் உள்ளே.

ChatGPT தனி ஆளாகப் பேசியது போதும்.. இனி டீம் ஒர்க் தான்! ChatGPT-ல் கலக்கல் அப்டேட்!
இன்று பள்ளி மாணவர்கள் முதல் மென்பொருள் பொறியாளர்கள் வரை பலருக்கும் அசைன்மென்ட் மற்றும் ப்ராஜெக்ட்களை முடிப்பதற்கு ChatGPT ஒரு முக்கிய கருவியாக மாறிவிட்டது. இதுவரை, நாம் தனித்தனியாகத்தான் (Individual Chat) இந்த AI உடன் பேசிக்கொண்டிருந்தோம். ஒரே ப்ராஜெக்டில் வேலை செய்தாலும், ஒவ்வொருவரும் தனித்தனியாகக் கேள்விகள் கேட்க வேண்டியிருந்தது. இந்தக் குறையைப் போக்க, OpenAI நிறுவனம் தற்போது 'Group Chats' என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
அனைவருக்கும் இலவசம்!
இந்த குரூப் சாட் வசதியானது கட்டணம் செலுத்தும் சந்தாதாரர்களுக்கு மட்டுமல்லாமல், இலவசமாகப் பயன்படுத்தும் (Free Subscribers) அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் உள்ள நண்பர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் மெசேஜ் அனுப்பலாம், ஆனால் ChatGPT அளிக்கும் பதில்களுக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் (Rate limits) இருக்கும் என்று OpenAI தெரிவித்துள்ளது.
குரூப் சாட் எதற்காக? இதன் ஸ்பெஷல் என்ன?
நண்பர்களுடன் சேர்ந்து ஒரு சுற்றுலா செல்ல திட்டமிடுவதற்கோ அல்லது அலுவலக ப்ராஜெக்ட் வேலைகளைச் செய்வதற்கோ இந்த வசதி மிகவும் உதவியாக இருக்கும். அனைவரும் ஒரே சாட்டில் இருப்பதால், ஒருவருக்கொருவர் விவாதித்துக் கொண்டே AI-யிடம் கேள்விகள் கேட்கலாம்.
இதற்குப் பதிலளிக்க GPT5.1 Auto என்ற புதிய மாடல் பயன்படுத்தப்படுகிறது. இது பயனர்களின் ஒவ்வொரு கேள்விக்கும் ஏற்ற மிகச்சிறந்த பதிலைத் தேர்வு செய்து வழங்கும் திறன் கொண்டது.
குரூப் சாட் உருவாக்குவது எப்படி? (Step-by-Step Guide)
உங்கள் ChatGPT கணக்கில் குரூப் சாட் தொடங்குவது மிக எளிது:
1. ஏதேனும் ஒரு புதிய அல்லது பழைய சாட்டை ஓபன் செய்யவும்.
2. அதில் உள்ள 'People Icon' (மனிதர்கள் போன்ற குறி) ஐ கிளிக் செய்யவும்.
3. அதில் உங்கள் நண்பர்களை இன்வைட் (Invite) செய்யலாம்.
4. ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 20 உறுப்பினர்களை ஒரு குரூப்பில் சேர்க்கலாம்.
நீங்கள் இன்வைட் அனுப்பியதும், AI தானாகவே ஒரு தனி குரூப் சாட்டை உருவாக்கும். இதனால் உங்களின் தனிப்பட்ட உரையாடல்கள் (Private Chats) பாதிக்கப்படாது.
AI எப்போது பதில் சொல்லும்? தானாகவே மூக்கை நுழைக்குமா?
குரூப் சாட்டில் மனிதர்கள் எப்படி நடந்து கொள்வார்களோ, அதே போன்ற 'சமூகப் பண்புகளை' (Social Behaviours) ChatGPT-க்குக் கற்றுக் கொடுத்துள்ளதாக OpenAI கூறுகிறது.
• உரையாடலைக் கவனித்துக் கொண்டே இருக்கும் AI, தேவைப்படும்போது மட்டுமே தானாக முன்வந்து பதில் சொல்லும். மற்ற நேரங்களில் அமைதியாக இருக்கும்.
• உங்களுக்கு உடனடி பதில் தேவைப்பட்டால், "ChatGPT" என்று மென்ஷன் (Mention) செய்தும் கேட்கலாம்.
• மேலும், இது ஈமோஜிகள் (Emojis) மூலமாகவும் ரியாக்ட் செய்யும். பயனர்கள் கேட்டால், அவர்களின் ப்ரொபைல் படத்தைப் பயன்படுத்திப் படங்களையும் உருவாக்கிக் கொடுக்கும்.
இனி வாட்ஸ்அப் குரூப் போல, ChatGPT குரூப்பிலும் நண்பர்களுடன் சேர்ந்து கலக்கலாம்!
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

