MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • பிஎஸ்என்எல் சிம் வச்சிருக்கீங்களா?; 'இந்த' சேவையை நிறுத்தும் BSNL; முழு விவரம்!

பிஎஸ்என்எல் சிம் வச்சிருக்கீங்களா?; 'இந்த' சேவையை நிறுத்தும் BSNL; முழு விவரம்!

பிஎஸ்என்எல் சிம்மை நாடு முழுவதும் பல மில்லியன் மக்கள் பயன்படுத்தும் நிலையில், ஜனவரி 15ம் தேதி முதல் ஒரு சேவையை நிறுத்த பிஎஸ்என்எல் முடிவு செய்துள்ளது. எது என்ன? என்பது குறித்து பார்ப்போம். 

2 Min read
Author : Rayar r
| Updated : Jan 13 2025, 09:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
BSNL Network

BSNL Network

பிஎஸ்என்எல் 4ஜி 

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 4ஜி, 5ஜி என சென்றிருக்கும் நிலையில், மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் இன்னும் 3ஜி சேவயை தான் வழங்கி வருகிறது. நாங்கள் எப்போது தான் 4ஜி சேவையை பெறுவது என பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் ஏங்கித் தவித்து வரும் நிலையில், 4ஜி சேவையை கொண்டு வரும் பணியில் பிஎஸ்என்எல் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

பிஎஸ்என்எல்லின் 4ஜி சேவை வரும் மார்ச் மாதத்துக்குள் வழங்கப்படும் என்றும் இந்த ஆண்டு இறுதிக்குள் 4ஜி சேவை நாடு முழுவதும் முழுமையாக கொண்டு வரப்படும் எனவும் பிஎஸ்என்எல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 4ஜி நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதற்காக இந்தியாவின் பல்வேறு இடங்களில் டவர்களை நிறுவி வருகிறது.
 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
BSNL SIM

BSNL SIM

3ஜி சேவை துண்டிப்பு 

இந்நிலையில், ஜனவரி 15ம் தேதி முதல் 3ஜி சேவையை நிறுத்த பிஎஸ்என்எல் முடிவு செய்துள்ளது. அதாவது  4ஜி நெட்வொர்க்கை கொண்டு வருவதற்காக பீகார் மாநிலம் பாட்னாவில் 3ஜி சேவையை பிஎஸ்என்எல் நிறுத்த உள்ளது. முதற்கட்டமாக பீகாரின் முங்கர், ககாரியா, பெகுசராய், கதிஹார் மற்றும் மோதிஹாரி ஆகிய இடங்களில் 3G நெட்வொர்க்கை நிறுத்தியுள்ளது.

பிஎஸ்என்எல் அட்டகாசமான 90 நாள் வேலிடிட்டி திட்டம்: ஒரு நாளைக்கு ரூ.1 தான்

34
BSNL Recharge Plans

BSNL Recharge Plans

முதலில் எங்கு சேவை துண்டிக்கப்படும்?

இதன் காரணமாக பிஎஸ்என்எல் 3ஜி சிம் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு காலிங் வசதி மட்டுமே கிடைக்கும். டேட்டா வசதி கிடைக்காது. 4ஜி நெட்வொர்க்கை முழுமையாக மேம்படுத்துவதற்காக பெரும்பாலான மாவட்டங்களில் 3ஜி நெட்வொர்க் துண்டிக்கப்பட்டுள்ளது. 

ஜனவரி 15 முதல் பாட்னா மற்றும் பிற நகரங்களில் 3ஜி நெட்வொர்க் துண்டிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. 3ஜி சேவை வேலை செய்வதை நிறுத்தினால் இணையம் எப்படி இயங்கும் என்ற கேள்வி உங்கள் மனதில் தோன்றலாம். 

44
BSNL New Plans

BSNL New Plans

4ஜி சிம் கார்டு எப்படி பெறுவது?

3G நெட்வொர்க் வேலை செய்வதை நிறுத்தினால், புதிய 4G சிம் உங்களுக்கு கிடைக்கும். பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகிலுள்ள வாடிக்கையாளர் சேவை மையம் அல்லது பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு சென்று பழைய 3ஜி சிம் கார்டுகளை கொடுத்து விட்டு புதிய 4ஜி சிம் கார்டுகளை பெற்றுக்கொள்ளலாம். 

இதற்காக வாடிக்கையாளர்கள் தங்களது புகைப்பட அடையாள அட்டையை மையத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். 2017ஆம் ஆண்டுக்கு முன் வழங்கப்பட்ட சிம் மாற்றப்பட்டு வருகின்றன. இதற்கு எந்த கட்டணமும் விதிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. 

புதிய ஐபோன் SE 4 வெற லெவல்ல இருக்கும்! ஆனா, விலையும் எகிறப் போகுதாம்!

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Safety Gadgets: தனியாக பயணிக்கும் பெண்களுக்கு டிஜிட்டல் அரண்: டாப் 4 பாதுகாப்பு கேட்ஜெட்டுகள் இதோ!
Recommended image2
Amazon Tablet Offers : ரூ.16,999க்கு OnePlus Pad.. iPad முதல் Xiaomi Pad வரை செம்ம ஆஃபர்.. அதிரடி விலை குறைப்பு
Recommended image3
Honor Robot Phone: தானாக சுழலும் கேமராவுடன் ஹானர் ரோபோட் போன்! இனி கேமராமேன் தேவையில்லை! செம மாஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved