- Home
- டெக்னாலஜி
- BSNL: பிஎஸ்என்எல் ஹோலி ஆபர்! ஒத்த ரூபா கூட இல்லாமல் 1 மாத வேலிட்டி இலவசம்! பயனர்கள் குஷி!
BSNL: பிஎஸ்என்எல் ஹோலி ஆபர்! ஒத்த ரூபா கூட இல்லாமல் 1 மாத வேலிட்டி இலவசம்! பயனர்கள் குஷி!
ஹோலி பண்டிகையையொட்டி பிஎஸ்என்எல் அதிரடி ஆபர் ஒன்றை வழங்கியுள்ளது. அனைவரும் பயன்படுத்தும் ரீசார்ஜ் பிளானில் ஒரு மாதம் வேலிட்டி இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

BSNL Holi Offer: இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சேவை வழங்கி வந்தாலும், மத்திய அரசின் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்டுக்கு (பிஎஸ்என்எல்) நாளுக்கு நாள் மவுசு அதிகரித்து வருகிறது. பிஎஸ்என்எல் குறைந்த விலையில் திட்டங்களை செயல்படுத்தி வருவதே இதற்கு காரணமாகும்.
பிஎஸ்என்எல் ஹோலி ஆபர்
இந்நிலையில், இந்தியாவில் ஹோலி பண்டிகை நெருங்கி வருவதால் பிஎஸ்என்எல் அதிரடியாக ஹோலி ஆபர் ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.2,399 ரீசார்ஜ் திட்டத்துடன் கூடுதலாக 30 நாட்கள் வேலிடிட்டியை கூடுதலாக வழங்குகிறது. முன்பு, இந்த ரூ.2,399 திட்டம் 395 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தை வழங்கியது. ஆனால் இப்போது வேலிட்டி காலம் மொத்தம் 425 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக கூடுதலாக ஒரு பைசா கூட செலுத்த வேண்டியதில்லை.
Honor Earbuds Open: புதிய AI இயர்பட்ஸ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா?
பிஎஸ்என்எல் ரீசார்ஜ் பிளான்கள்
பிஎஸ்என்எல்லின் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் இந்தியா முழுவதும் வரம்பற்ற அழைப்பு, டெல்லி மற்றும் மும்பையில் உள்ள எம்டிஎன்எல் நெட்வொர்க்கில் இலவச தேசிய ரோமிங் மற்றும் இலவச அழைப்பு ஆகியவை அடங்கும். இந்தத் திட்டத்தின் மூலம் பயனர்கள் தினமும் 2 ஜிபி அதிவேக டேட்டா மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ் வசதிகளை பெற முடியும்.
உங்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா என மொத்தமாக 850 ஜிபி டேட்டா கிடைக்கும். இது மட்டுமின்றி பிஎஸ்என்எல் அனைத்து மொபைல் பயனர்களுக்கும் பிஐடிவிக்கு இலவச சந்தாவை வழங்குகிறது. இதன்மூலம் 350க்கும் மேற்பட்ட லைவ் சேனல்கள், பல்வேறு முன்னணி ஓடிடி தளங்களையும் இலவசமாக பார்த்து ரசிக்க முடியும். ரூ.2,399 விலையில் இப்படி ஒரு சலுகை கொண்ட பிளானை ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடோபோன் ஐடியாவில் நினைத்துக் கூட பார்க்க முடியாது.
பிஎஸ்என்எல் 4ஜி
பிஎஸ்என்எல் அதன் 4ஜி நெட்வொர்க் உள்கட்டமைப்பை மேம்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் முதல் பாதியில் நாடு முழுவதும் 100,000 புதிய 4ஜி டவர்களை நிறுவ திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே 65,000 க்கும் மேற்பட்ட 4ஜி மொபைல் டவர்கள் செயல்பாட்டுக்கு வந்து விட்டன. மீதமுள்ள 4ஜி டவர்கள் வரும் மாதங்களில்செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பயனர்களுக்கு அதிவேக சிறந்த இணையத்தை உறுதியளிக்கிறது.