- Home
- டெக்னாலஜி
- தினமும் 2GB டேட்டா.. 50 நாள் வேலிடிட்டி.. ரூ.347க்கு ஆஃபர்களை அள்ளிக்கொடுத்த பிஎஸ்என்எல்
தினமும் 2GB டேட்டா.. 50 நாள் வேலிடிட்டி.. ரூ.347க்கு ஆஃபர்களை அள்ளிக்கொடுத்த பிஎஸ்என்எல்
பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.347 விலையில் புதிய ரீசார்ஜ் பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது. அடிக்கடி ரீசார்ஜ் செய்வதைத் தவிர்க்க விரும்பும் பயனர்களுக்கு இது ஒரு சிறந்த மற்றும் சிக்கனமான தேர்வாகும்.

347 ரூபாய் ரீசார்ஜ்
அரசு தொலைத்தொடர்பு நிறுவனம் பிஎஸ்என்எல், தனது பயனர்களுக்கு மிகவும் சிக்கனமான மற்றும் நீண்ட கால செல்லுபடிவாய்ப்புள்ள புதிய ரீசார்ஜ் பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது. தொடர்ந்து ரீசார்ஜ் செய்ய வேண்டிய சிரமம் இல்லாமல் நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த விரும்புபவர்களுக்கு இந்த பிளான் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ரூ.347 விலையில் அறிமுகமான இந்த பிளானில், தினமும் 2ஜிபி டேட்டா, வரம்பில்லா காலிங் மற்றும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் வசதி கிடைக்கிறது. பிளான் செல்லுபடிகாலம் 50 நாட்கள் என்பதால், ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் ஒரு மாதத்திற்கும் மேலாக தடங்கலின்றி பயன்படுத்தலாம்.
பிஎஸ்என்எல் ரீசார்ஜ் பிளான்
பிஎஸ்என்எல் அதிகாரப்பூர்வ X (Twitter) கணக்கின் மூலம் இந்த பிளான் அறிவிக்கப்பட்டுள்ளது. தினசரி 2ஜிபி ஹைஸ்பீட் டேட்டா கிடைக்கும். தினசரி டேட்டா முடிந்த பிறகு டேட்டா வேகம் 80kbps ஆக குறையும். வரம்பில்லா வாய் அழைப்பு வசதியுடன் தினசரி 100 SMS வழங்கப்படுகிறது. அடிக்கடி ரீசார்ஜ் செய்வதை தவிர்க்க விரும்பும் பயனர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக உள்ளது. குறிப்பாக வேலை, ஆன்லைன் பயிற்சி, சமூக ஊடக பயன்பாடு போன்றவற்றுக்கு நிறைய டேட்டா தேவைப்படுபவர்கள் இந்த திட்டத்தை குறைந்த விலையில் பயன்படுத்தலாம்.
குறைந்த விலையி பிளான்
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை ஒப்பிடும்போது, அதே அம்சங்கள் கொண்ட பிளான்களுக்கு அதிக விலை வசூலிக்கப்படும் சூழலில், பிஎஸ்என்எல் குறைந்த விலையில் அதிக பயன்களை வழங்குகிறது. இந்த ரூ.347 பிளான், அதிக டேட்டா பயன்படுத்தியும் சேமிப்பு யோசனையுடன் செயல்பட விரும்புபவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். பிஎஸ்என்எல் நெட்வோர்க் சிறப்பாக கிடைக்கும் பகுதிகளில் இது மிகவும் பயனுள்ள ஒன்றாகும்.
மொபைல் ரீசார்ஜ் ஆஃபர்
கடந்த சில ஆண்டுகளில் பிஎஸ்என்எல் தனது நெட்வொர்க் தரத்தை மேம்படுத்தி, பல நகரங்களில் 4G சேவையை வழங்கி வருகிறது. வேகமான டேட்டா, நல்ல அழைப்பு தரம், நம்பகமான சேவை ஆகியவற்றில் கவனம் செலுத்தும் நிறுவனமான பிஎஸ்என்எல் இந்த புதிய ரூ.347 பிளானின் மூலம் மேலும் புதிய பயனர்களை ஈர்க்க முயற்சிக்கிறது என்றும், 4G வசதி உள்ள இடங்களில் இந்த பிளான் பிஎஸ்என்எல்-க்கு மாற விரும்புபவர்களுக்கு சிறந்த காரணமாக இருக்கும் என்றும் கூறலாம்.