- Home
- டெக்னாலஜி
- BSNL PLAN: பிஎஸ்என்எல் தரமான சம்பவம்; வெறும் 87 ரூபாய்க்கு டேட்டா மழை; அட்டகாசமான பிளான்!
BSNL PLAN: பிஎஸ்என்எல் தரமான சம்பவம்; வெறும் 87 ரூபாய்க்கு டேட்டா மழை; அட்டகாசமான பிளான்!
பிஎஸ்என்எல் ரூ.87க்கு பல்க் டேட்டா வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் தொடர்பான மற்றும் ரூ.200க்கு கீழ் உள்ள பிஎஸ்என்எல் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

BSNL PLAN: பிஎஸ்என்எல் தரமான சம்பவம்; வெறும் 87 ரூபாய்க்கு டேட்டா மழை; அட்டகாசமான பிளான்!
இந்தியாவில் மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) மலிவு விலையில் ரீசார்ஜ் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஜியோ, ஏர்டெல், வோடோபோன்ஐடியா ஆகிய தனியார் நிறுவனங்கள் 4ஜி, 5ஜி சேவை என்று சென்று விட்ட நிலையில், இன்னும் 4ஜி சேவையே தொடங்காத நிலையிலும் பிஎஸ்என்எல் பக்கம் ஏராளமான வாடிக்கையாளர்கள் சாய்ந்து வருகின்றனர்.
பிஎஸ்என்எல் ரீசார்ஜ் பிளான்கள்
இதற்கு முக்கிய காரணம் பிஎஸ்என்எல் குறைந்த விலையில் திட்டங்களை செயல்படுத்தி வருவதே ஆகும். இதெபோல் 4ஜி சேவையை நாடு முழுவதும் கொண்டு வரும் பணியிலும் பிஎஸ்என்எல் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக அனைத்து கிராமங்கள், நகரங்களில் பிஎஸ்என்எல் 4ஜி டவர்களை நடும் பணியில் அதிவேகமாக ஈடுபட்டு வருகிறது.
மறுபக்கம் தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாடிக்கையாளர்களை ஈர்க்க மலிவு விலை திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில், பிஎஸ்என்எல் 2 மலிவு விலை ரீசார்ஜ் பிளான்களை கொண்டு வந்துள்ளது. இந்த ரீசார்ஜ் திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் பல நன்மைகளை பெற முடியும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
BSNL: பயனர்கள் தலையில் இடியை இறக்கிய பிஎஸ்என்எல்; 3 முக்கியமான பிளான்கள் நிறுத்தம்!
பிஎஸ்என்எல் பட்ஜெட் திட்டஙக்ள்
பிஎஸ்என்எல் ரூ.87 பிளான்
பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.87 ரீசார்ஜ் திட்டம் 14 நாட்கள் செல்லுபடியாகும். ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டா வசதியுடன் கிடைக்கிறது. நீங்கள் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் பேக்குகளையும் பெறுவீர்கள். இந்த பேக் one97 கம்யூனிகேஷன்ஸ் வழங்கும் ஹார்ட் மொபைல் கேம்ஸ் சேவையுடன் கிடைக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ.118 பிளான்
பிஎஸ்என்எல் ரூ.118 விலையில் மற்றொரு மலிவான ரீசார்ஜ் திட்டத்தைக் கொண்டுள்ளது. இந்த ரீசார்ஜ் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 20 நாட்கள் செல்லுபடியாகும். உள்ளூர் மற்றும் ரோமிங் நெட்வொர்க்கில் வரம்பற்ற குரல் அழைப்பு வசதியுடன். இந்த ரீசார்ஜ் திட்டத்தில் ஒரு நாளைக்கு 0.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் PRBT ஐ இலவசமாக வழங்குகிறது.
பிஎஸ்என்எல் 4ஜி சேவை
பிஎஸ்என்எல் ரூ.199 திட்டம்
பிஎஸ்என்எல்லின் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் மலிவு விலையில் பல்வேறு சலுகைகளுடன் தங்கள் சிம்மை செயலில் வைத்திருக்க விரும்பும் பயனர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாகும். குறிப்பிட்டுள்ளபடி, இந்த திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் 30 நாட்கள் செல்லுபடியாகும்.
மேலும், பயனர்கள் இந்த திட்டத்துடன் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் பெறுகிறார்கள். இந்த திட்டத்துடன் வேறு எந்த சலுகைகளும் இணைக்கப்படவில்லை. இது பிஎஸ்என்எல் திட்ட வவுச்சர் என்பதை நினைவில் கொள்ளவும். இந்த திட்டம் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சலுகைகளுக்கு போட்டியாக உள்ளது.