BSNL: ரூ.200 கூட இல்லை! 1 மாசம் அன்லிமிடெட் கால்ஸ் + டேட்டா! பிஎஸ்என்எல் பிளான்!
பிஎஸ்என்எல் மலிவு விலையில் 1 மாத வேலிட்டி கொண்ட பிளானை கொண்டு வந்துள்ளது. இந்த பிளானின் முழு விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

BSNL Affordable price Plan: தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை அதிகரித்ததிலிருந்து, பெரும்பாலான பயனர்கள் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் பக்கம் திரும்பி வருகின்றனர். BSNL ரீசார்ஜ் திட்டங்கள் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை விட மிகவும் மலிவானவை. அதனால்தான் பெரும்பாலான பயனர்கள் BSNL திட்டங்களைப் பயன்படுத்துகின்றனர்.
BSNL Recharge Plan
பிஎஸ்என்எல் மலிவு விலை திட்டங்கள்
பிஎஸ்என்எல் அதன் மலிவு மற்றும் நீண்ட செல்லுபடியாகும் திட்டங்களால் பயனர்களின் இதயங்களை தொடர்ந்து வென்று வருகிறது. நீங்கள் ஒரு BSNL வாடிக்கையாளராக இருந்து உங்களுக்காக ஒரு மலிவான திட்டத்தைத் தேடுகிறீர்கள் என்றால், இன்று நாங்கள் உங்களுக்காக ஒரு சிறந்த திட்டத்தைக் கொண்டு வந்துள்ளோம். அதாவது BSNL நிறுவனம் தனது பயனர்களுக்கு ஒரு மலிவு விலை ரீசார்ஜ் திட்டம் குறித்த அறிவிப்பை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. ரூ.200க்கும் குறைவான விலை கொண்ட இந்த திட்டம் குறித்து பார்ப்போம்.
BSNL Budget Plan
BSNL-ன் ரூ.187 திட்டம்
BSNL-இன் இந்த ரூ.187 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாகும். இந்த திட்டத்தில் அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் நன்மைகளை பெற முடியும். மேலும் தினமும் 1.5 ஜிபி டேட்டா உங்களுக்கு கிடைக்கும். இது மிகவும் மலிவான மாதாந்திர திட்டமாகும். மற்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏர்டெல், ஜியோ, வோடோபோன் ஐடியா என எதுவும் இவ்வளவு குறைந்த விலையில் மாதாந்திர திட்டஙக்ளை வழங்கவில்லை.
பிஎஸ்என்எல் 4ஜி
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு போட்டியாக 4ஜி சேவையை முழுமையாக கொண்டு வரும் பணியில் பிஎஸ்என்எல் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன் 4G நெட்வொர்க்கை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இன்னும் சில மாதங்களில் 1,00,000 புதிய 4G மொபைல் டவர்களை அமைக்க ஒரு லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளது.
BSNL 4G Service
வாடிக்கையாளர்களை தக்க வைக்க தீவிரம்
பிஎஸ்என்எல் 4G சேவை இப்போது 75,000க்கும் மேற்பட்ட இடங்களில் செயல்பட்டு வருவதாக அந்நிறுவனம் சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல் மலிவு விலையில் திட்டங்களை வழங்கி வந்தாலும் இன்டர்நெட் ஸ்பீடு அதிகம் இல்லாததால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். நாட்டின் சில நகரங்களில் பிஎஸ்என்எல் 4ஜி நெட்வொர்க் கிடைத்தாலும் அது இன்னும் மற்ற இடங்களில் முழுமை பெறவில்லை. ஆகையால் வாடிக்கையாளர்களை தக்க வைக்கவும், புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கவும் பிஎஸ்என்எல் முயற்சி எடுத்து வருகிறது.