- Home
- டெக்னாலஜி
- பிஎஸ்என்எல் பயனர்களுக்கு குட் நியூஸ்; மார்ச் 2026 வரை ரீசார்ஜ் அவசியமில்லை; 'சூப்பர்' பிளான்!
பிஎஸ்என்எல் பயனர்களுக்கு குட் நியூஸ்; மார்ச் 2026 வரை ரீசார்ஜ் அவசியமில்லை; 'சூப்பர்' பிளான்!
BSNL Recharge Plan: மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், ஓராண்டுக்கான சூப்பர் ரீசார்ஜ் பிளானை செயல்படுத்தி வருகிறது. இந்த பிளானின் சிறப்பம்சங்கள் என்ன? எனபது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் பயனர்களுக்கு குட் நியூஸ்; மார்ச் 2026 வரை ரீசார்ஜ் அவசியமில்லை; 'சூப்பர்' பிளான்!
இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா ஆகிய தனியார் நிறுவனங்கள் தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகின்றன. இதில் ஜியோ, ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் 3ஜி, 4ஜி என்பதையும் தாண்டி 5ஜி சேவை வரை வந்து விட்டன. ஆனால் அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் இன்னும் 3ஜி சேவயை தான் வழங்கி வருகிறது.
ஆனாலும் தனியார் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியதால் அங்கு இருந்து ஏராளமான வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் பக்கம் சாய்ந்தனர். இதற்கு பிஎஸ்என்எல் மலிவு விலையில் குறைந்த கட்டணம் வழங்கி வருவதே காரணமாகும். பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 4ஜி சேவயை கொண்டு வர உள்ள நிலையில், மேலும் பல வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் பயனர்கள் ஆவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் ரீசார்ஜ் பிளான்
இந்நிலையில், பிஎஸ்என்எல் வழங்கி வரும் ஒரு சூப்பரான ரீசார்ஜ் பிளான் குறித்து விரிவாக பார்க்கலாம். அதாவது பிஎஸ்என்எல் ரூ.1,999 என்ற விலையில் ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 12 மாதங்கள் அல்லது ஓராண்டு ஆகும். இந்தத் திட்டம் அனைத்து உள்ளூர் மற்றும் எஸ்டிடி நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற இலவச அழைப்பை வழங்குகிறது. இது நீண்ட கால நன்மைகளை விரும்பும் பயனர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது.
இந்த திட்டத்தின்படி உங்களுக்கு மொத்தமாக 600ஜிபி டேட்டா கிடைக்கும். நீங்கள் இந்த டேட்டாவை மொத்தமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது ஆண்டு முழுவதும் வைத்து பயன்படுத்தாலம். ஏனெனில் தினசரி டேட்டா வரம்பு என்று ஏதும் இல்லை. மேலும், இந்தத் திட்டம் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் வழங்குகிறது. அடிக்கடி ரீசார்ஜ் செய்வதைத் தவிர்க்க விரும்புவோருக்கு, ரூ.1,999 திட்டம் உங்கள் பணத்தை சேமிக்க மிகச்சிறந்த வழியாகும்.
மே 5 முதல் வாட்ஸ்அப் வேலை செய்யாது.. உங்க மொபைல் லிஸ்டில் இருக்கா?
பிஎஸ்என்எல் பட்ஜெட் பிளான்கள்
முழு ஆண்டு செல்லுபடியாகும் காலம், வரம்பற்ற அழைப்பு மற்றும் நெகிழ்வான 600 ஜிபி டேட்டா தொகுப்புடன், இந்த ரீசார்ஜ் திட்டம் மலிவு விலையில் உங்களுக்கு ஏராளமான நன்மைகளை வாரி வழங்குகிறது. பிஎஸ்என்எலை ஒப்பிடும்போது ஜியோ நிறுவனத்தின் இதே ஆண்டு திட்டம் அதிகமான விலையில் அமைந்துள்ளது.
அதாவது ஜியோ ரூ.3,599 விலையில் 365 நாள் வேலிடிட்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டதின்படி மொத்தமாக 912.5 ஜிபி டேட்டா மொத்தமாக கிடைக்கும். தினமும் 2.5 ஜிபி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். அன்லிமிடெட் கால்ஸ் வசதியும், தினமும் 100 எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியும் கிடைக்கும். இது தவிர ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளைட் இலவச அணுகலை பெற முடியும்.
பிஎஸ்என்எல் vs ஜியோ
பிஎஸ்என்எல் ஆண்டு திட்டத்தை ஒப்பிடும்போது ஜியோ பிளானின் விலை மிக அதிகமாக உள்ளது. கூடுதலாக 300 ஜிபி டேட்டாவை வழங்கினாலும் விலை என்பது அதிகம் தான். 5ஜி அன்லிமெட் இணைய சேவை வழங்குவது தான் இந்த திட்டத்தின் ஒரே நன்மை. ஆகவே ஓராண்டில் மலிவு விலையில் நீங்கள் ரீசார்ஜ் செய்ய விரும்பினால் பிஎஸ்என்எல் ஆண்டு திட்டத்தை தயங்காமல் தேர்வு செய்யுங்கள்.
நடுத்தர மக்களுக்கு ஜாக்பாட்; ரூ.11,700க்கு ஐபோன் வாங்கலாம்; நம்ப முடியாத தள்ளுபடி!