- Home
- டெக்னாலஜி
- ரூ.25,000 தள்ளுபடியில் கிடைக்கும் கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் 5ஜி..! வேற சான்ஸ் கிடைக்காது..!
ரூ.25,000 தள்ளுபடியில் கிடைக்கும் கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் 5ஜி..! வேற சான்ஸ் கிடைக்காது..!
கூகுளின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் 5ஜி, தற்போது ரூ.25,000 தள்ளுபடியுடன் கிடைக்கிறது. சக்திவாய்ந்த டென்சர் G4 சிப்செட், சிறந்த கேமராக்கள் மற்றும் 7 வருட அப்டேட் உத்தரவாதத்துடன் வருகிறது.

கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் விலை
கூகுளின் பிரீமியம் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான Pixel 9 Pro XL 5G தற்போது மிகப்பெரிய தள்ளுபடியில் கிடைக்கிறது. ரூ.25,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது, குறைந்த விலையில் ஃபிளாக்ஷிப் அனுபவத்தை விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. 2024ல் அறிமுகமானபோது, இந்த போனுக்கு 7 ஆண்டுகள் பாதுகாப்பு மற்றும் ஓஎஸ் அப்டேட் வழங்கப்படும் என்று கூகுள் அறிவித்தது அதாவது 2031 வரை இது புதிய போன் போலவே செயல்படும்.
அம்சங்கள் மற்றும் செயல்திறன்
இந்த ஃபிளாக்ஷிப் போனில் 6.7-இன்ச் LTPO OLED டிஸ்ப்ளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு உள்ளது. பகுதியில், 50MP மெயின் சென்சார், 48MP அல்ட்ரா வைடு, 48MP டெலிஃபோட்டோ (5x ஜூம்) கேமரா என மூன்று பின்புற கேமராக்களும், 42MP முன்பக்க கேமராவும் உள்ளன. இதை இயக்குவது கூகுளின் சக்திவாய்ந்த டென்சர் G4 சிப்செட், மேலும் 5060mAh பேட்டரியுடன் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் கிடைக்கிறது.
கூகுள் பிக்சல் 5ஜி போன்
இந்த பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் தற்போது சந்தையில் iPhone 16 Plus, Samsung Galaxy S25, Galaxy Z Flip 6, Nothing Phone 3, மற்றும் Motorola Razr 60 Ultra போன்ற பிரீமியம் ஸ்மார்ட்போன்களுடன் நேரடி போட்டியில் உள்ளது. சக்திவாய்ந்த சிப்செட், நீண்டகால அப்டேட்கள், மற்றும் சிறந்த கேமரா அமைப்புடன் கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் 5ஜி ஒரு முழுமையான ஸ்மார்ட்போன் அனுபவத்தை வழங்குகிறது.
பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் தள்ளுபடி
இந்த போனின் அறிமுக விலை ரூ.1,24,999. ஆனால் தற்போது அமேசானில் ரூ.99,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, ரூ.25,000 தள்ளுபடி கிடைக்கிறது. மேலும், சில வங்கிக் கார்டுகளைப் பயன்படுத்தி ரூ.1,500 வரை கூடுதல் தள்ளுபடி பெறலாம். வாங்குவதற்கு முன், எந்த வங்கிகள் இந்த சலுகையில் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை சரிபார்ப்பது முக்கியம்.