MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • முதல்முறையாக டச்-ஸ்கிரீன் மேக்புக், கேமராவுடன் ஏர்பாட்ஸ்: மார்க்கெட்டைத் தெறிக்கவிட வரும் ஆப்பிள் 'அல்ட்ரா'!

முதல்முறையாக டச்-ஸ்கிரீன் மேக்புக், கேமராவுடன் ஏர்பாட்ஸ்: மார்க்கெட்டைத் தெறிக்கவிட வரும் ஆப்பிள் 'அல்ட்ரா'!

iPhone மடிக்கக்கூடிய ஐபோன், கேமராவுடன் கூடிய ஏர்பாட்ஸ் மற்றும் டச் ஸ்கிரீன் மேக்புக் என ஆப்பிள் நிறுவனத்தின் புதிய 'அல்ட்ரா' சீரிஸ் சாதனங்கள் பற்றிய முழு விவரங்கள்!

2 Min read
Author : Suresh Manthiram
Published : Mar 09 2026, 10:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
iPhone
Image Credit : Gemini

iPhone

ஸ்மார்ட்போன் மற்றும் கேஜெட் சந்தையில் பிரீமியம் சாதனங்களுக்கு எப்போதுமே ஆப்பிள் (Apple) நிறுவனம்தான் ராஜா. ஐபோன் 17e உட்பட பல புதிய மாடல்களை சமீபத்தில் அறிமுகம் செய்த ஆப்பிள், இப்போது தனது அடுத்தகட்ட மாஸ்டர் பிளானை கையில் எடுத்துள்ளது. புதிய மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை விரும்புபவர்களுக்காகவே பிரத்யேகமாக 'அல்ட்ரா' (Ultra) என்ற புதிய கேட்டகிரியில் பல பிரீமியம் சாதனங்களை அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
புதிய 'அல்ட்ரா' (Ultra) லைன்-அப்: அப்படி என்ன ஸ்பெஷல்?
Image Credit : Getty

புதிய 'அல்ட்ரா' (Ultra) லைன்-அப்: அப்படி என்ன ஸ்பெஷல்?

ப்ளூம்பெர்க் (Bloomberg) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு 'அல்ட்ரா' என்ற புதிய பெயரின்கீழ் குறைந்தது மூன்று அதிநவீன (High-end) தயாரிப்புகளை வெளியிடவுள்ளது. தற்போது சந்தையில் உள்ள ஃபிளாக்ஷிப் மாடல்களை விட இவை தொழில்நுட்பத்திலும், விலையிலும் பல மடங்கு ஒரு படி மேலே இருக்கும் எனத் தெரிகிறது.

பணத்தை ஒரு பொருட்டாகப் பார்க்காமல், சிறந்த மற்றும் மேம்பட்ட வன்பொருள் (Hardware) மற்றும் அம்சங்களை எதிர்பார்க்கும் உயர்தர வாடிக்கையாளர்களைக் குறிவைத்தே ஆப்பிள் இந்த 'அல்ட்ரா' யுக்தியைக் கையில் எடுத்துள்ளது.

35
எதிர்பார்ப்பை எகிறவைக்கும் மடிக்கக்கூடிய ஐபோன் (Foldable iPhone)
Image Credit : Apple

எதிர்பார்ப்பை எகிறவைக்கும் மடிக்கக்கூடிய ஐபோன் (Foldable iPhone)

ஆப்பிள் ரசிகர்களின் பல ஆண்டு கால காத்திருப்பான 'மடிக்கக்கூடிய ஐபோன்' (Foldable iPhone) இந்த அல்ட்ரா வரிசையில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல ஆண்ட்ராய்டு நிறுவனங்கள் ஏற்கனவே ஃபோல்டபிள் போன்களை வெளியிட்டுள்ள நிலையில், ஆப்பிள் தனது முதல் மடிக்கக்கூடிய ஐபோனை பெரிய அளவிலான உட்புற டிஸ்ப்ளேவுடன் (Internal Display) அறிமுகம் செய்யவுள்ளது. இது திறக்கப்படும்போது ஒரு சிறிய டேப்லெட் போலச் செயல்படும் என டெக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

45
கண்களைக் கொண்ட ஏர்பாட்ஸ் அல்ட்ரா (AirPods Ultra)
Image Credit : social media

கண்களைக் கொண்ட ஏர்பாட்ஸ் அல்ட்ரா (AirPods Ultra)

சாதாரண இயர்பட்ஸ்களைத் தாண்டி, 'ஏர்பாட்ஸ் அல்ட்ரா' (AirPods Ultra) என்ற பெயரில் அதிநவீன சென்சார்களுடன் கூடிய புதிய இயர்பட்ஸ்களையும் ஆப்பிள் அறிமுகம் செய்யவுள்ளது. இதில் உள்ள மிகப்பெரிய சிறப்பம்சம் என்னவென்றால், இதில் 'கம்ப்யூட்டர் விஷன் கேமராக்கள்' (Computer vision cameras) பொருத்தப்பட்டிருக்கும்.

இவை சுற்றியுள்ள காட்சிகளை உள்வாங்கி, அந்தத் தகவல்களை ஆப்பிளின் வாய்ஸ் அசிஸ்டென்ட்டான 'சிரி'க்கு (Siri) அனுப்பும். இதன் மூலம், 'சிரி' உங்கள் சூழலைத் துல்லியமாகப் புரிந்துகொண்டு அதற்கேற்ப பதிலளிக்கும். இதன் விலை வழக்கமான ஏர்பாட்ஸ்களை விட சற்று அதிகமாகவே இருக்கும்.

55
டச் ஸ்கிரீன் வசதியுடன் மேக்புக் அல்ட்ரா (MacBook Ultra)
Image Credit : ‍X

டச் ஸ்கிரீன் வசதியுடன் மேக்புக் அல்ட்ரா (MacBook Ultra)

ஆப்பிளின் மேக் (Mac) சாதனங்களில் இதுவரை டச் ஸ்கிரீன் (Touchscreen) வசதி வழங்கப்பட்டதில்லை. ஆனால், அந்த வரலாற்றை மாற்றி எழுத வருகிறது 'மேக்புக் அல்ட்ரா' (MacBook Ultra).

இந்த புதிய மேக்புக் அல்ட்ரா மாடல், டச் ஸ்கிரீன் வசதியுடன் கூடிய OLED டிஸ்ப்ளேவுடன் வரவிருக்கிறது. இந்த OLED தொழில்நுட்பம் திரையின் வண்ணத் துல்லியத்தையும் (Color quality), பிரகாசத்தையும் (Brightness) பல மடங்கு அதிகரிக்கும். ஆப்பிளின் இந்த புதிய 'அல்ட்ரா' சீரிஸ் தொழில்நுட்ப உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை!

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்நுட்பம்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
மணிக்கு 120 கி.மீ வேகத்தில் சீறிப்பாயும் முரசு புயல்: இன்சார்ட் செயற்கைக்கோள் அனுப்பிய பயங்கர படம்!
Recommended image2
8,000mAh பேட்டரி, 50MP கேமரா: விவோ Y32 4G-யை விட 5G மாடலில் என்னவெல்லாம் ஸ்பெஷல்?
Recommended image3
வெறும் 9.99 மி.மீ தடிமன், 21 நாட்கள் பேட்டரி பேக்கப்: 150+ ஸ்போர்ட்ஸ் மோட்ஸ் உடன் ஷாவ்மீ ஸ்மார்ட் பேண்ட் 11 அறிமுகம்!
Related Stories
Recommended image1
iPhone-க்கே டஃப் கொடுக்குமா? பட்ஜெட் விலையில் 3x ஜூம் மற்றும் AI வசதிகளுடன் களமிறங்கிய Tecno-வின் புது வரவு!
Recommended image2
iPhone 17e வந்தாச்சு! கம்மி விலையில் 'ப்ரோ' லெவல் அம்சங்கள் - இனி எல்லோரும் ஐபோன் வாங்கலாம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved