Apple iphone: 'ஐபோன் 15' ரூ.30,000க்கு வாங்கலாம்; பாதிக்கு பாதி தள்ளுபடி; செம ஆபர்!
ஆப்பிள் ஐபோன் 15 மாடலுக்கு ப்ளிப்கார்ட்டில் பாதிக்கு பாதி தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

Apple iphone: 'ஐபோன் 15' ரூ.30,000க்கு வாங்கலாம்; பாதிக்கு பாதி தள்ளுபடி; செம ஆபர்!
வாழ்க்கையில ஒரு முறையாவது ஐபோன் பயன்படுத்த வேண்டும் என்பது பெரும்பாலானோரின் கனவாக உள்ளது. ஆனால் அதன் விலை அதிகமாக இருப்பதால் பலர் இந்த ஆசையை மறந்து விடுகின்றனர். இந்நிலையில், ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஆசையில் இருப்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ் வந்துள்ளது. அதாவது ஐபோன் 15 மாடலுக்கு ப்ளிப்கார்ட்டில் அதிரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் புதிய மாடலை கொண்டு வர தயாராகி வருகின்றன. இதனால் ஐபோன் 15 மாடலுக்கு போட்டி போட்டு தள்ளுபடி அறிவிக்கப்படுகிறது. அதாவது ப்ளிப்கார்ட் விற்பனை தளத்தில் ஐபோன் 15 மாடலை ரூ.30,000க்கு வாங்க முடியும். அது எப்படி என்று விரிவாக பார்க்கலாம். ஐபோன் 15 256GBஸ்டோரேஜ் வேரியன்ட் விலை ரூ.79,900 ஆகும்.
ஐபோன் 15
இந்த போனுக்கு ப்ளிப்கார்ட்டில் 12 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதாவது மொத்தமாக ரூ.9,901 விலை குறைப்பு செய்யப்படுகிறது. இதன்மூலம் இந்த போனின் விலை ரூ.69,999 ஆக குறைகிறது. இருப்பினும், அதை இன்னும் மலிவு விலையில் வழங்கக்கூடிய கூடுதல் வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் உள்ளன.
வங்கி சலுகைகள்: தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கிரெடிட்/டெபிட் கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் கூடுதல் தள்ளுபடிகளைப் பெறலாம், இதன் மூலம் இறுதி விலை இன்னும் குறைகிறது.
பட்டன் மொபைல் விலையில் ஸ்மார்ட் போன்: வெறும் ரூ.6000க்குள் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்
ஐபோன்களுக்கு ஆபர்
எக்ஸ்சேஞ்ச் சலுகை: உங்கள் பழைய ஸ்மார்ட்போனை டிரேட் செய்தால் பிளிப்கார்ட் ரூ.39,150 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸை வழங்குகிறது. உங்கள் பழைய சாதனம் அதிகபட்ச எக்ஸ்சேஞ்ச் மதிப்புக்கு தகுதி பெற்றால், ஐபோன் 15ன் விலை ரூ.30,849 ஆகக் குறைகிறது.
தகுதியான வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகை உள்பட அனைத்து சலுகைகளுக்கும் பிறகு ஐபோன் 15 மாடலின் இறுதி விலை ரூ.30,000 ஆக குறைகிறது. இதன்மூலம் வெறும் ரூ.30,000க்கு உங்களால் ஐபோன் 15 போனை வாங்க முடியும்.
ஐபோன்களுக்கு விலை குறைப்பு
இது மட்டுமின்றி ப்ளிப்கார்ட்டில் ஆப்பிள் ஐபோன் 15 மாடல் 128 ஜிபி ஸ்டோரேஜிக்கு 14% தள்ளுபடி அளிக்கப்படுகிறது. அதாவது ரூ.69,900 என்ற விலை கொண்ட இந்த போனை இப்போது ரூ.59,999க்கு வாங்கிக் கொள்ள முடியும்.
மேலும் ஆக்சிஸ் வங்கி கார்டு மூலம் இந்த போனை வாங்கினால் 5% கேஷ்பேக் கிடைக்கும். மேலும் ஹெச்டிஎப்சி வங்கி கார்டு மூலம் இந்த போனை வாங்கும்போது 10% வரை கூடுதல் தள்ளுபடியை பெறலாம். இதன் மூலம் ஐபோன் 15 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை இன்னும் குறைகிறது.
யாரும் தர முடியாத ஆஃபர்; Motorola Edge 50 Ultra விலை ரொம்ப கம்மி!