- Home
- டெக்னாலஜி
- ஐபோன் பிரியர்களுக்கு ஷாக்.. இனி இஷ்டத்துக்கு ஐபோன் வாங்க முடியாது.. ஆப்பிள் போட்ட அதிரடி ரூல்ஸ்!
ஐபோன் பிரியர்களுக்கு ஷாக்.. இனி இஷ்டத்துக்கு ஐபோன் வாங்க முடியாது.. ஆப்பிள் போட்ட அதிரடி ரூல்ஸ்!
Apple iPhone: இந்தியாவில் ஐபோன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. இனி ஒரு நபர் அதிகபட்சம் இரண்டு போன்கள் மட்டுமே வாங்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன்கள் வாங்க புதிய கட்டுப்பாடுகள்
ஐபோன்களுக்கு எப்போதுமே மவுசு அதிகம். இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்குப் புதிய கட்டுப்பாட்டைக் கொண்டு வந்துள்ளது. இதனால், ஒரே நேரத்தில் மூன்று அல்லது நான்கு போன்கள் வாங்கலாம் என்று நினைத்தவர்களுக்கு இது பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மார்க்கெட்டில் ஐபோன் வாங்குவதற்கு இந்த புதிய வரம்பு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய விதியின்படி, வாடிக்கையாளர்கள் எந்த ஐபோன் மாடலாக இருந்தாலும் அதிகபட்சம் இரண்டு போன்கள் மட்டுமே வாங்க முடியும். ஆன்லைனில் மூன்று ஐபோன்களை ஆர்டர் செய்ய முயற்சித்தால், சிஸ்டம் அதை ஏற்றுக்கொள்ளாது. அதாவது, ஒரே நேரத்தில் மூன்று போன்களை ஆர்டர் செய்ய முடியாது.
எதுக்கு இந்த புதிய ரூல்ஸ்?
நிறுவனத்தின் விதிகளின்படி, வாடிக்கையாளர்கள் ஒரே மாடலில் இரண்டு ஐபோன்களை ஆர்டர் செய்யலாம்; அல்லது தங்களுக்குப் பிடித்த இரண்டு வெவ்வேறு மாடல்களையும் தேர்ந்தெடுக்கலாம். அக்டோபர் 23-ஆம் தேதி அதாவது நாளை ஐபோன் டியோ மாடலின் அதிகாரப்பூர்வ விற்பனை தொடங்க இருக்கும் நிலையில், அதற்கு முன்பாகவே ஆப்பிள் நிறுவனம் இந்த புதிய விதியை அமல்படுத்தியுள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், இந்த ஐபோன் டியோ தான் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஃபோல்டபிள் அதாவது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆகும்.
இது பண்டிகை காலம் என்பதால், இயல்பாகவே ஐபோன்களுக்கு டிமாண்ட் அதிகமாக இருக்கும். அந்த டிமாண்டுக்கு ஏற்ப போன்களை சப்ளை செய்வது கடினம். இதைச் சாதகமாக பயன்படுத்தி சிலர் பிளாக் மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்க வாய்ப்புள்ளது. அதுமட்டுமில்லாமல், திடீரென ஸ்டாக் காலியாவதை தடுக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த விதியானது புதிதாக வந்த பிரீமியம் போன்களுக்கு மட்டும் அல்லாமல், கடைகளில் கிடைக்கும் பழைய மற்றும் புதிய என எல்லா ஐபோன் மாடல்களுக்கும் பொருந்தும்.
கட்டுப்பாடுகள் எந்தெந்த மாடல்களுக்கு பொருந்தும்?
இந்தக் கட்டுப்பாடு ஐபோன் டியோ, ஐபோன் 18 ப்ரோ, ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் என எல்லாப் போன்களுக்கும் பொருந்தும். வாடிக்கையாளர்கள் ஐபோன் டியோ மாடலில் இரண்டு போன்களை ஆர்டர் செய்யலாம்; அல்லது ஒரு ஐபோன் டியோ மற்றும் ஒரு ஐபோன் 18 ப்ரோ வாங்கலாம். ஐபோன் 17 உட்பட மற்ற மாடல்களுக்கும் இதே விதிதான். மூன்றாவதாக ஒரு போனை வாங்க நினைத்தால் அது முடியாது. ஒவ்வொரு வாடிக்கையாளரும் அதிகபட்சம் இரண்டு ஐபோன்கள் மட்டுமே வாங்க முடியும்.
ஒரே முகவரியில் பல போன்கள்
இந்த புதிய வரம்பு தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்லாமல், சிறு வணிகர்கள் அல்லது ரீடெய்லர்கள் ஒரே கணக்கிலிருந்து அல்லது ஒரே முகவரியிலிருந்து மொத்தமாக ஐபோன்களை வாங்கி விற்கும் முறையைக் கட்டுப்படுத்தவும் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ரீடெய்லர்கள் மூலமாக உண்மையான சில்லறை வாடிக்கையாளர்களுக்கு போன்கள் சென்றடைவதை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும். மேலும், ஒரே கிரெடிட் கார்டு அல்லது ஒரே டெலிவரி முகவரியைக் கொண்டு மீண்டும் மீண்டும் போன்களை வாங்குவதைத் தவிர்க்கவும் கணினி ரீதியான கடுமையான கண்காணிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.








