MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • தானே தன் கண்ணைக் குத்திய கதை! உருவாக்கிய ஏஐ-யே அமேசான் ஊழியரின் வேலையைப் பறித்த சோகம்!

தானே தன் கண்ணைக் குத்திய கதை! உருவாக்கிய ஏஐ-யே அமேசான் ஊழியரின் வேலையைப் பறித்த சோகம்!

Amazon 11 ஆண்டுகள் அமேசானில் பணியாற்றிய பெண் ஊழியர் ஏஐ காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டார். வைரலாகும் லிங்க்ட்இன் பதிவு மற்றும் முழு விவரம் உள்ளே. வேலையைப் பறித்த சோகம்!

1 Min read
Author : Suresh Manthiram
Published : Jan 31 2026, 08:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Amazon அமேசானில் மீண்டும் பணிநீக்க நடவடிக்கை
Image Credit : Gemini

Amazon அமேசானில் மீண்டும் பணிநீக்க நடவடிக்கை

உலகையே ஆட்டிப்படைக்கும் அமேசான் நிறுவனம், மீண்டும் ஒரு மாபெரும் பணிநீக்க நடவடிக்கையை (Layoff) கையில் எடுத்துள்ளது. அமெரிக்காவில் உள்ள அலுவலகங்களில் சுமார் 16,000 ஊழியர்கள் ஒரே நேரத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் பல ஆண்டுகளாக நிறுவனத்திற்காக உழைத்தவர்களும் அடக்கம் என்பது தான் சோகமான விஷயம்.

25
11 வருட உழைப்பு.. இறுதியில் மிஞ்சியது ஏமாற்றம்
Image Credit : Social Media

11 வருட உழைப்பு.. இறுதியில் மிஞ்சியது ஏமாற்றம்

அமேசானில் 11 ஆண்டுகளாகப் பணியாற்றிய ஒரு பெண் ஊழியர், தனது லிங்க்ட்இன் (LinkedIn) பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நான் 11 ஆண்டுகளாக இந்த நிறுவனத்திற்காக உண்மையாக உழைத்தேன். பல பதவி உயர்வுகளைப் பெற்றேன். ஆனால், இறுதியில் என்னை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். இது எனக்கு இரண்டாவது முறை நடக்கும் பணிநீக்கம்," என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Related image1
ஆப்பிள் வெறியர்களுக்கு அடுத்த ஷாக்! iPhone 16 விலை இவ்வளவு கம்மியா? : Amazon Offer!
Related image2
Flipkart-க்கு போட்டியாக Amazon: ₹50,990-க்கு iPhone 15 கிடைக்குது! iPhone 16e-க்கு போகாம, இந்த டீலை தூக்கலாமா?
35
தன்னையே அழித்த தொழில்நுட்பம்
Image Credit : Gemini

தன்னையே அழித்த தொழில்நுட்பம்

மிகவும் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், அவர் எந்த வேலையை எளிமையாக்க (Simplify) மற்றும் மேம்படுத்த (Optimize) பல ஆண்டுகளாகப் பாடுபட்டாரோ, அதே வேலையை இப்போது 'செயற்கை நுண்ணறிவு' (AI) செய்யத் தொடங்கிவிட்டது. தான் உருவாக்கிய சிஸ்டமே தனக்கு எதிரியாக மாறி, தனது வேலையைப் பறித்துவிட்டதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

45
ஏஐ காரணமா? அல்லது செலவுக் குறைப்பா?
Image Credit : gemini

ஏஐ காரணமா? அல்லது செலவுக் குறைப்பா?

நிக் பிளம் (Nick Plumb) என்ற மற்றொரு ஊழியர், "இது செயல்திறன் குறைவு அல்லது ஏஐ காரணமல்ல; நிறுவனங்கள் அதிக சம்பளம் வாங்கும் அனுபவமிக்க ஊழியர்களை நீக்கிவிட்டு, செலவைக் குறைக்க (Cost-cutting) நாடகமாடுகின்றன," என்று குற்றம் சாட்டியுள்ளார். ஏஐ என்பதை ஒரு காரணமாகச் சொல்லி, அனுபவம் வாய்ந்தவர்களைத் துரத்துவதே நிறுவனங்களின் புதிய உத்தியாக மாறிவிட்டது என்ற விவாதம் தற்போது சூடுபிடித்துள்ளது.

55
அமேசான் தரப்பு விளக்கம்
Image Credit : freepic

அமேசான் தரப்பு விளக்கம்

இதுகுறித்து அமேசான் தரப்பில் கூறுகையில், "நிர்வாக அடுக்குகளைக் குறைக்கவும் (Reducing Management Layers), விரைவாக முடிவெடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு 90 நாட்கள் அவகாசம் மற்றும் புதிய வேலை தேட உதவிகள் வழங்கப்படும்," என்று தெரிவித்துள்ளது. ஆனால், இந்த விளக்கம் வேலையிழந்தவர்களின் வலிக்க மருந்தாக அமையுமா என்பது சந்தேகமே.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்நுட்பம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
விலையும் கம்மி, தரமும் மாஸ்! ஐபோன் 16 பக்கம் மக்கள் சாய்வது ஏன்? ரகசியம் இதோ!
Recommended image2
ஒல்லிக்குச்சி உடம்பு, ஆனா உள்ளே பெரிய பவர்! ரியல்மி 16 5G சும்மா அதிருதுல்ல!
Recommended image3
வேலண்டைன்ஸ் டே கொண்டாட்டத்திற்கு ஆப்பு? உங்கள் ரகசியங்கள் லீக் ஆனதா? பம்பிள், டின்டர் பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி
Related Stories
Recommended image1
ஆப்பிள் வெறியர்களுக்கு அடுத்த ஷாக்! iPhone 16 விலை இவ்வளவு கம்மியா? : Amazon Offer!
Recommended image2
Flipkart-க்கு போட்டியாக Amazon: ₹50,990-க்கு iPhone 15 கிடைக்குது! iPhone 16e-க்கு போகாம, இந்த டீலை தூக்கலாமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved