வாடிக்கையாளர்களுக்கு விபூதி அடித்த ஏர்டெல்.. பயனர்கள் ஷாக்.!
ஏர்டெல்லின் இந்த புதிய பிளான் கூடுதல் டேட்டா மற்றும் நீண்ட வேலிடிட்டியை வழங்கினாலும், குறைந்த பயன்பாட்டாளர்களுக்கு இது ஒரு மறைமுக விலை உயர்வாக கருதப்படுகிறது.

ஏர்டெல் ரீசார்ஜ் பிளான்
ஏர்டெல் நிறுவனத்தின் குறைந்த விலை ரூ.189 ரீசார்ஜ் பிளான் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அந்த பிளானை பயன்படுத்தி வந்த பிரீபெய்ட் பயனர்கள் இனி குறைந்தபட்சம் ரூ.199 பிளானை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நிறுவனங்கள் விலை உயர்த்த "மறைமுகமாக" செலவை அதிகரிக்கும் வழியை இதன் மூலம் கடைப்பிடித்து வருகிறது. அதாவது, மலிவான பிளான்களை நீக்கி விட்டு, அடுத்த விலை உயர்ந்த பிளான்களை மட்டும் வைத்திருக்கின்றன.
ரூ.189 பிளான்
முந்தைய ரூ.189 பிளானில் 1GB டேட்டா, அன்லிமிடெட் கால், 300 SMS, மற்றும் 21 நாட்கள் வலிடிட்டி இருந்தது. குறைந்த டேட்டா பயன்பாட்டாளர்கள் அதிகமாக பயன்படுத்திய திட்டமிது. ஆனால், ஏர்டெல் தற்போது இந்த பிளானை தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து நீக்கியுள்ளது. இதனால் குறைந்த விலையில் ரீசார்ஜ் தேடுபவர்கள் தற்போது ரூ.199 பிளானை தேர்வு செய்ய வேண்டியுள்ளது.
புதிய ரூ.199 பிளான்
ரூ.10 கூடுதலாக செலவழித்தால், இந்த புதிய பிளான் 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வொய்ஸ் கால், மற்றும் 100 SMS தினசரி வழங்குகிறது. முக்கியமாக, இதன் வலிடிட்டி 28 நாட்கள், அதாவது முந்தைய பிளானைவிட 7 நாட்கள் அதிகம். எனவே, சிறிய விலை உயர்வுடன் கூடுதல் டேட்டா மற்றும் நீண்ட கால பயன்பாடு கிடைக்கும்.
ஏர்டெல் பிளான் அப்டேட்
மொத்தத்தில், ஏர்டெல் ரூ.189 பிளானை நிறுத்தியதால், பயனர்கள் இனி ரூ.199 பிளானைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ரூ.10 கூடுதலாக செலவாகினாலும், கூடுதல் டேட்டா மற்றும் நீண்ட வலிடிட்டி கிடைப்பதால் சிலருக்கு இது நன்மையாக இருக்கலாம். ஆனால் குறைந்த பயன்பாட்டாளர்களுக்கு இது அதிர்ச்சி தான் என சொல்லலாம்.