- Home
- டெக்னாலஜி
- பிஎஸ்என்எல் 5G சேவை ரூ.61,000 கோடி செலவில் விரிவாக்கம்! ஏர்டெல், ஜியோவுக்கு புதிய தலைவலி!
பிஎஸ்என்எல் 5G சேவை ரூ.61,000 கோடி செலவில் விரிவாக்கம்! ஏர்டெல், ஜியோவுக்கு புதிய தலைவலி!
பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ரூ.61,000 கோடிக்கு 5G அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 2025-ல் 5G சேவைகளைத் தொடங்கவும், ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்குப் போட்டியாகவும் இருக்கும்.

BSNL 5G
பிஎஸ்என்எல் 5G சேவை:
அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL) தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து (DoT) ரூ.61,000 கோடிக்கு 5G அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளது. இந்த ஒதுக்கீடு பிஎஸ்என்எல் 5G சேவைகளை நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் விரிவாக்க வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
BSNL 5G service
5ஜி சேவை விரிவாக்கம்:
தி எகனாமிக் டைம்ஸ் அறிக்கையின்படி , பிஎஸ்என்எல் தற்போது 700 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 3300 மெகா ஹெர்ட்ஸ் உள்ளிட்ட பிரீமியம் 5ஜி ஸ்பெக்ட்ரம் பேண்டுகளைக் கொண்டுள்ளது. இவை அதிவேக இணைப்பை வழங்குவதற்கு முக்கியமானவை. பிஎஸ்என்எல் 2025ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் டெல்லியில் தனது 5ஜி சேவைகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. இப்போது பல நகரங்களில் டவர்கள் அமைப்பது உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகிறது.
BSNL 4G Network
பிஎஸ்என்எல் 4G நெட்வொர்க்:
5G சேவைகளை அறிமுகப்படுத்துவது BSNL நிறுவனம் மீண்டும் வளர்ச்சிப் பாதையில் இயங்க வைப்பதற்கான முக்கிய உத்தி ஆகும். பிஎஸ்என்எல் இப்போது 4G நெட்வொர்க்கையும் விரிவுபடுத்தி வருகிறது. இதற்கு சமீபத்தில் அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட ரூ.6,000 கோடி உதவியாக உள்ளது. இந்த வகையில் பல ஆண்டுகளாக பிஎஸ்என்எல் கிட்டத்தட்ட ரூ.3.22 லட்சம் கோடி நிதி உதவியைப் பெற்றுள்ளது.
BSNL vs Jio vs Airtel
போட்டியை அதிகரிக்கும் பிஎஸ்என்எல்:
தற்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மறுமலர்ச்சிக்கான 5ஜி திட்டம் வெற்றி பெற்றால், அது முகேஷ் அம்பானியின் ஜியோ மற்றும் சுனில் மிட்டலின் ஏர்டெல் நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக மாறும்.
BSNL Profit
18 ஆண்டுகளுக்குப் பிறகு லாபம்:
பொதுத்ததுறை நிறுவனமான பிஎஸ்என்எல் 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் ரூ.262 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் 55 லட்சம் பயனர்களைப் புதிதாகச் சேர்த்துள்ளதாக தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா வியாழக்கிழமை மாநிலங்களவையில் தெரிவித்தார்.
BSNL News
அமைச்சர் அளித்த பதில்:
கேள்வி நேரத்தின்போது துணைக் கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, பிஎஸ்என்எல் நிறுவனத்தை மீண்டும் லாபத்திற்குக் கொண்டு வரவும் அதன் வாடிக்கையாளர் தளத்தை மேம்படுத்தவும் முயற்சிகள் நடந்து வருவதாகக் கூறினார்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.