MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • சம்பள உயர்வுன்னு ஆசைப்பட்டு செக் பண்ணாதீங்க.. அக்கவுண்ட் காலியாகிடும்! அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்!

சம்பள உயர்வுன்னு ஆசைப்பட்டு செக் பண்ணாதீங்க.. அக்கவுண்ட் காலியாகிடும்! அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்!

WhatsApp Scam 8-வது ஊதியக் குழு சம்பள உயர்வு என்ற பெயரில் வாட்ஸ்அப்பில் வரும் APK ஃபைல்களைத் திறக்க வேண்டாம் என அரசு ஊழியர்களுக்கு I4C எச்சரிக்கை விடுத்துள்ளது.

2 Min read
Author : Suresh Manthiram
Published : Feb 16 2026, 07:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
WhatsApp Scam
Image Credit : Gemini

WhatsApp Scam

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்! 8-வது ஊதியக் குழு (8th Pay Commission) அமல்படுத்தப்பட்டால் சம்பளம் எவ்வளவு உயரும் என்று கணக்கிட்டுப் பார்க்க ஆசையா? உங்கள் ஆர்வத்தைப் பயன்படுத்திக் கொள்ள ஒரு பெரிய மோசடி கும்பல் காத்திருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் பாதுகாப் பிரிவான இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C), அரசு ஊழியர்களுக்குப் புதிய வகை வாட்ஸ்அப் மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

24
மோசடி நடப்பது எப்படி?
Image Credit : Getty

மோசடி நடப்பது எப்படி?

சைபர் குற்றவாளிகள் அரசு ஊழியர்களின் வாட்ஸ்அப் எண்களுக்கு ஒரு செய்தியை அனுப்புகிறார்கள். அதில், "8-வது ஊதியக் குழுவின் படி உங்கள் புதிய சம்பளத்தைக் கணக்கிட இந்தச் செயலியைப் (App) பதிவிறக்கம் செய்யுங்கள்" என்று கூறப்படுகிறது. அந்தச் செய்தியுடன் ஒரு APK ஃபைலும் (Android Package Kit) இணைக்கப்பட்டிருக்கும்.

• ஆசையோடு அந்த APK ஃபைலை கிளிக் செய்து இன்ஸ்டால் செய்தால், உங்கள் போன் ஹேக்கர்களின் கட்டுப்பாட்டிற்குச் சென்றுவிடும்.

• அடுத்த சில நிமிடங்களில், உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணம் முழுவதும் திருடப்படும் அபாயம் உள்ளது.

Related Articles

Related image1
10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! பிப்ரவரி 18ம் தேதிக்குள்.. அரசு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!
Related image2
மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்.. மார்ச் 16 வரை முக்கிய வாய்ப்பு!
34
I4C-ன் எச்சரிக்கை என்ன?
Image Credit : Asianet News

I4C-ன் எச்சரிக்கை என்ன?

சம்பளம், பென்ஷன் அல்லது ஊதியக் குழு தொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் அரசு வாட்ஸ்அப் மூலம் APK ஃபைலாக அனுப்பாது என்று I4C திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

• "Cyber Dost" என்ற தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் இந்த எச்சரிக்கையை I4C வெளியிட்டுள்ளது.

• தெரியாத எண்களில் இருந்து வரும் APK ஃபைல்களை ஒருபோதும் டவுன்லோட் செய்ய வேண்டாம்.

44
பாதுகாப்பாக இருப்பது எப்படி?
Image Credit : Meta AI

பாதுகாப்பாக இருப்பது எப்படி?

1. அதிகாரப்பூர்வ இணையதளம்: சம்பள உயர்வு தொடர்பான விவரங்களுக்கு https://8cpc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

2. Settings மாற்றம்: உங்கள் ஆண்ட்ராய்டு போனில் "Install from Unknown Sources" என்ற ஆப்ஷனை எப்போதுமே 'Disable' செய்து வைப்பது நல்லது. இது தெரியாத செயலிகள் தானாக இன்ஸ்டால் ஆவதைத் தடுக்கும்.

3. விழிப்புணர்வு: வாட்ஸ்அப், இமெயில் அல்லது எஸ்எம்எஸ் மூலம் வரும் சந்தேகத்திற்கிடமான லிங்க்குகளை கிளிக் செய்யாதீர்கள்.

தொழில்நுட்பம் வளர வளர, மோசடிகளும் புது வடிவம் பெறுகின்றன. விழிப்புடன் இருந்தால் மட்டுமே நம் பணத்தையும், தரவுகளையும் பாதுகாக்க முடியும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்நுட்பம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சூப்பர் ஆஃபர்.. ரூ.90,000-க்கும் குறைவான விலையில் ஐபோன் ஏர்.. வாங்க 5 காரணங்கள்!
Recommended image2
ரூ.7,000 இருந்தா போதும்.! சூப்பரான ஸ்மார்ட் போன் வாங்கலாம்.! செம லுக், செம கேமரா!
Recommended image3
Samsung 5G Phone: சாம்சங்கின் புதிய மாஸ்டர் பிளான்..! பட்ஜெட் ராஜாவாக களமிறங்கும் கேலக்ஸி F70e 5G
Related Stories
Recommended image1
10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! பிப்ரவரி 18ம் தேதிக்குள்.. அரசு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!
Recommended image2
மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்.. மார்ச் 16 வரை முக்கிய வாய்ப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved