- Home
- டெக்னாலஜி
- டெக் டிப்ஸ்
- OTP Facts: OTP எதுக்கு வருது? இந்த 6 டிஜிட் நம்பரோட உண்மையான வேலை என்ன தெரியுமா?
OTP Facts: OTP எதுக்கு வருது? இந்த 6 டிஜிட் நம்பரோட உண்மையான வேலை என்ன தெரியுமா?
OTP Facts : நாம் இன்டர்நெட் பேங்கிங், ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது அல்லது ஒரு செயலியில் லாகின் செய்யும்போது, நம் மொபைலுக்கு ஒரு OTP வரும். ஆனால், அது ஏன் வருகிறது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
17

Image Credit : AI Image
OTP என்றால் என்ன?
OTP-யின் முழுப்பெயர் One-Time Password. இது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய, குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் ஒரு ரகசிய குறியீடு. பொதுவாக இது 4, 6 அல்லது 8 இலக்கங்களில் SMS, இ-மெயில் அல்லது ஆத்தென்டிகேட்டர் ஆப் மூலம் அனுப்பப்படும்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்
27
Image Credit : Gemini AI
OTP ஏன் வருகிறது?
உங்கள் அடையாளத்தை உறுதி செய்யவும், உங்கள் கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்கவுமே OTP அனுப்பப்படுகிறது. ஒருவேளை உங்கள் பாஸ்வேர்டு யாருக்காவது தெரிந்தாலும், OTP இல்லாமல் அவர்களால் உங்கள் கணக்கில் நுழைய முடியாது. இதனால்தான் வங்கிகள், UPI ஆப்கள், இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் OTP-ஐப் பயன்படுத்துகின்றன.
37
Image Credit : Gemini AI
OTP எப்படி வேலை செய்கிறது?
வங்கி கணக்கில் லாகின் செய்வது, ஆன்லைன் பேமெண்ட், புதிய பாஸ்வேர்டு உருவாக்குவது போன்ற முக்கிய வேலைகளைச் செய்யும்போது, சிஸ்டம் ஒரு பிரத்யேக OTP-ஐ உருவாக்கி, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது இ-மெயிலுக்கு அனுப்பும். நீங்கள் சரியான OTP-ஐ உள்ளிட்டால் மட்டுமே, அந்தச் செயல்முறை நிறைவடையும்.
47
Image Credit : Gemini AI
OTP-க்கு ஏன் நேரக் கட்டுப்பாடு?
பாதுகாப்பு காரணங்களுக்காகவே OTP சில நிமிடங்களில் காலாவதியாகிவிடும். ஒருவேளை OTP நீண்ட நேரம் செல்லுபடியானால், அதை வேறு யாராவது தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதனால்தான் பெரும்பாலான OTP-கள் 30 விநாடிகள் முதல் 10 நிமிடங்களுக்குள் காலாவதியாகிவிடும்.
57
Image Credit : Gemini AI
OTP-ஐ யாருடனும் பகிர வேண்டாம்!
வங்கி மற்றும் சைபர் பாதுகாப்பு ஏஜென்சிகள் எப்போதும் OTP-ஐ யாருடனும் பகிர வேண்டாம் என்று எச்சரிக்கின்றன. உங்கள் OTP-ஐத் தெரிந்துகொண்டால், உங்கள் வங்கிக் கணக்கு, UPI, இ-மெயில் அல்லது சமூக ஊடகக் கணக்கை ஹேக் செய்ய முடியும். சைபர் திருடர்கள் தங்களை வங்கி அதிகாரி, CBI அதிகாரி, அரசு ஊழியர் என்று கூறி OTP-ஐக் கேட்பார்கள். எனவே யாரிடமும் கொடுக்காதீர்கள்.
67
Image Credit : Gemini AI
OTP மட்டும் போதுமா?
OTP ஒரு வலுவான பாதுகாப்பு அம்சம்தான், ஆனால் அது மட்டுமே எல்லாவிதமான சைபர் தாக்குதல்களையும் தடுத்துவிடாது. எனவே, வலுவான பாஸ்வேர்டு, இரண்டு அடுக்கு பாதுகாப்பு (Two-Factor Authentication), அதிகாரப்பூர்வ செயலிகளைப் பயன்படுத்துதல் மற்றும் விழிப்புணர்வும் அவசியம்.
77
Image Credit : Gemini AI
இந்தியாவில் OTP தொடர்பான சில முக்கிய புள்ளிவிவரங்கள்...
- இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 5.5 பில்லியன் (550 கோடி) OTP SMS அனுப்பப்படுகின்றன. இது இந்தியாவை உலகின் மிகப்பெரிய OTP சந்தையாக மாற்றியுள்ளது.
- இந்தியாவில் உள்ள சுமார் 90% வங்கிகள் மற்றும் ஃபின்டெக் நிறுவனங்கள், SMS OTP-ஐ தங்களின் இயல்புநிலை பாதுகாப்பு அம்சமாக (Two-Factor Authentication) பயன்படுத்துகின்றன.
- இந்தியாவின் நியோபேங்குகள், டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்கள் மாதத்திற்கு 200 கோடிக்கும் அதிகமான OTP-களை அனுப்புகின்றன.
- இந்தியாவில் நடக்கும் சைபர் மோசடி வழக்குகளில், OTP தொடர்பான மோசடிகளே அதிகம். மொத்த வழக்குகளில் 25%-க்கும் அதிகமானவை OTP ஸ்கேம்கள் தான்.
Latest Videos

