- Home
- Tamil Nadu News
- திருவள்ளூரில் பயங்கரம்! சினிமா பாணியில் நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞர் கொலை! அதிர வைக்கும் காரணம்?
திருவள்ளூரில் பயங்கரம்! சினிமா பாணியில் நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞர் கொலை! அதிர வைக்கும் காரணம்?
திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே இருளஞ்சேரியில் காந்திநகர் பகுதியில் நாட்டு வெடிகுண்டு தாக்குதலில் முகேஷ் என்ற இளைஞர் உயிரிழந்தார். தீபன், ஜாவித் ஆகிய இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டு வெடிகுண்டு வீச்சு
திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே இருளஞ்சேரியில் காந்திநகர் பகுதியில் முகேஷ், தீபன், ஜாவித் ஆகிய 3 பேரும் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு அங்கிருந்து தப்பித்தனர். இதில், நாட்டு வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தில் முகேஷ் என்ற இளைஞர் சம்பவ இடத்திலே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இரண்டு பேர் படுகாயம்
மேலும் தீபன் என்பவருக்கு கைகளும், ஜாவித்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு வலியால் அலறி துடித்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இரண்டு பேருக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை
தீபன் என்பவருடைய கை சேதம் அடைந்ததால் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்க அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்த முகேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மப்பேடு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழிக்கு பழி
முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த முகேஷ் வீடுகளுக்கு சிலிண்டர் போடும் வேலை செய்து வந்ததாகவும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆகாஷ் என்ற இளைஞரின் காதை வெட்டிய சம்பவத்திற்கு பழிக்கு பழியாக கொலை நடந்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.