- Home
- Tamil Nadu News
- பாட்டி சொன்ன அந்த வார்த்தை! ஆத்திரத்தில் கழுத்தை நெறித்து கொன்று பலாத்காரம் செய்த பேரன்! நடந்தது என்ன?
பாட்டி சொன்ன அந்த வார்த்தை! ஆத்திரத்தில் கழுத்தை நெறித்து கொன்று பலாத்காரம் செய்த பேரன்! நடந்தது என்ன?
சேலம் மாவட்டத்தில் பணத்திற்காக 74 வயது மூதாட்டியை அவரது பேரன் கழுத்தை நெரித்து கொலை செய்து பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூதாட்டி மரணத்தில் சந்தேகம்
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள தெசவிளக்கு தெற்கு கிராமம் சின்னபிள்ளையூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் மனைவி சின்னப்பிள்ளை (74). இவர் அதே பகுதியில் கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 20ம் தேதி தனது வீட்டில் கீழே விழுந்து இறந்து விட்டதாக கூறி உறவினர்கள் உடலை அடக்கம் செய்ய முயன்றனர். அப்போது அக்கம் பக்கத்தினர் சாவில் சந்தேகம் இருப்பதாக கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தாரமங்கலம் காவல்துறையினர் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பேரன் பிரகாஷ் கைது
சின்னப்பிள்ளையின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மருத்துவ பிரேத பரிசோதனை அறிக்கையில் மூதாட்டி கழுத்தை நெரித்து பலாத்காரம் செய்து கொன்றுள்ளதாக வெளியான தகவலை அடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன்படி மூதாட்டியின் மகள் வழி பேரனான பிரகாஷ் (31) என்பவரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் கொலையாளி பிரகாஷ் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் கடந்த 20ம் தேதி அன்று மதியம் மிகுந்த கஞ்சா போதையில் இருந்த பிரகாஷ் வழக்கம் போல் அப்பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் விளையாடுவது வழக்கம். சம்பவத்தன்றும் சூதாட சென்ற பிரகாஷ் சூதாட்டத்தில் பணம் 3000 ரூபாயை இழந்துள்ளார். பணத்தை இழந்த விரக்தியில் அருகில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்ற பிரகாஷ் பாட்டியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.
பேரன் பரபரப்பு வாக்குமூலம்
அப்போது பாட்டி சின்னப்பிள்ளை உனக்கு எதுக்குடா பணம் கொடுக்கணும்? நீயே குடித்துவிட்டு பொண்டாட்டி பிள்ளைகளை தாய் வீட்டுக்கு அனுப்பிவிட்டு ஊதாரியாக திரிபவன். உனக்கு கொடுக்க என்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் மூதாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றுள்ளார். அப்போது கதறிய மூதாட்டி வீட்டில் பணம் இருக்கும் இடத்தை கூறியுள்ளார்.
மூதாட்டி பலாத்காரம்
அதன் பிறகு வீட்டிலிருந்த பணம் 5000 ரூபாயை எடுத்துக்கொண்டு மயக்க நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மூதாட்டியை பலாத்காரம் செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார் என்பது குற்றவாளியின் வாக்குமூலத்தின் மூலமாக காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மூதாட்டி இறந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு மருத்துவ பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் கொலையாளியை பிடித்த காவல்துறையினர், பாட்டியை பேரனே பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.