- Home
- Tamil Nadu News
- ரெட்டை இலைக்காரி நான்..பாழா போனா சீமானுக்கு ஓட்டு போட்டுட்டேன்... இனி விஜய்க்கு மட்டும் தான்.. அதிர வைத்த பெண்
ரெட்டை இலைக்காரி நான்..பாழா போனா சீமானுக்கு ஓட்டு போட்டுட்டேன்... இனி விஜய்க்கு மட்டும் தான்.. அதிர வைத்த பெண்
TVK Vijay : நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி மீது அதிருப்தி அடைந்த கரூர் பெண் ஒருவர், தனது வாக்கு இனி விஜய்க்குத்தான் என்று உறுதியாகக் கூறியுள்ளார்.

தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் தேர்தல் பணியில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக ஆகிய கட்சிகள் போட்டி போடுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை கடந்த அரை நூற்றாண்டு காலமாக திமுக - அதிமுக ஆகிய கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி அமைத்து வருகிறது.
தமிழகத்தின் இரு பெரும் தலைவர்களான கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழக அரசியல் களம் மாறியுள்ளது. அந்த வகையில் திமுக தலைவராக ஸ்டாலினும், அதிமுக தலைவராக எடப்பாடி பழனிசாமியும் களத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் இந்த கட்சிகளுக்கு டப் கொடுக்கும் வகையில் திரைத்துறையில் இருந்து அரசியல் களத்தில் இறங்கியுள்ளார் விஜய், விஜய் செல்லும் இடமெங்கும் கொத்து கொத்தாக கூட்டமானது கூடி வருகிறது. கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சியில் தனது பிரச்சாரத்தை தொடங்கிய விஜய், அரியலூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் தனது மக்கள் சந்திப்பை நடத்தினார். இதனை தொடர்ந்து இன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார்.
அந்த வகையில் கரூரில் விஜய்யை வரவேற்க ஆயிரகணக்கான மக்கள் கூடி வருகிறார்கள். கரூரில் பெண் ஒருவர் கூறுகையில், அரசிடமிருந்து தற்போது வரை எந்தவித சலுகையையும் பெறவில்லை, தனக்கு 56 வயது ஆகிறது. தற்போது வரை இரட்டை இலைக்கு தான் ஓட்டு போட்டு வந்தேன்.
ஜெயலலிதா மறைந்த பிறகு இரட்டை இலையை விட்டுவிட்டஏன். போன முறை பாழா போனா சீமானுக்கு ஓட்டு போட்டு விட்டேன். இப்படி பேசுவான் இப்படி பண்ணுவான் எனத் தெரிந்து இருந்தால் ஓட்டு போட்டு இருக்க மாட்டேன். என் வாக்கு வீணாகி இருந்தால் கூட பரவாயில்லை
தம்பி விஜய் வரவேண்டும், நல்லது செய்ய வேண்டும், மக்கள் எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும். செந்தில் பாலாஜி ஒரு பெரிய தலைவராக இருந்தாலும் கரூரில் விஜய் தாராளமாக வெற்றி பெறுவார். ஒவ்வொரு ஆண்டும் ஓம் சக்திக்கு சென்று வருகிறேன் தளபதி வெற்றி பெற வேண்டுபென பால்குடம் எடுத்துவதாக அந்த பெண் தெரிவித்தார்