MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • TN School Reopen: வானிலை மையம் கொடுத்த ரிப்போர்ட்! பள்ளிகள் திறப்பு ஒருவாரம் தள்ளிப்போகிறது? அறிவிப்பு வெளியாகிறது!

TN School Reopen: வானிலை மையம் கொடுத்த ரிப்போர்ட்! பள்ளிகள் திறப்பு ஒருவாரம் தள்ளிப்போகிறது? அறிவிப்பு வெளியாகிறது!

School Reopen: தமிழகத்தில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதால், ஜூன் 1 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதுகுறித்து வானிலை மையத்தின் அறிக்கையை பெற்று, முதலமைச்சர் தலைமையில் அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

1 Min read
Author : vinoth kumar
Published : May 26 2026, 01:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
வாட்டி வதைக்கும் கோடை வெயில்
Image Credit : ANI

வாட்டி வதைக்கும் கோடை வெயில்

தமிழகம் முழுவதும் கோடை வெயில் மட்டுமின்றி வெப்ப அலை கடுமையாக வீசி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் மத்தியில் தொடங்கிய வெயிலின் தாக்கம் தற்போது உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 100 டிகிரி தாண்டி வெயில் சுட்டெரித்து வருகிறது. வெளியில் செல்வதற்கு பயந்து பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். வரும் நாட்களிலும் ஜூன் முதல் அல்லது 2ம் வாரம் வரை வெயில் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க கோரிக்கை
Image Credit : our own

பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க கோரிக்கை

இந்நிலையில் தமிழகத்தில் கோடை விடுமுறை நிறைவடைந்ததைத் தொடர்ந்து வரும் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் தற்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான வெப்ப அலை வீசி வரும் சூழலில், மாணவர்களின் உடல்நலன் குறித்த அச்சம் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தனியார் பள்ளிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

Related Articles

Related image1
Government Employee Salary: மே மாதம் சம்பளம் தள்ளிப்போகிறதா? அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அதிர்ச்சி.. என்ன காரணம்?
Related image2
Power Cut in Tamilnadu: போட்டு பொளக்கும் கத்திரி வெயில்! மே 27ம் தேதி தமிழகம் முழுவதும் மின்தடை அறிவிப்பு!
34
முதலமைச்சர் விஜய்யுடன் ஆலோசனை
Image Credit : Google

முதலமைச்சர் விஜய்யுடன் ஆலோசனை

அந்த வகையில் வெயிலின் தாக்கம் தொடர்பாக அறிவியல் பூர்வமாக கருத்துகளை வானிலை ஆய்வு மையத்திடம் இருந்து கேட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வானிலை மையம் தங்களின் அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்திருந்தது. வானிலை மைய அறிக்கை அடிப்படையில் பள்ளிகள் திறப்பை தள்ளி வைப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் முதலமைச்சர் விஜய்யுடன் ஆலோசனை ஈடுபட்டுள்ளனர்.

44
பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறது
Image Credit : Google

பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறது

இந்த ஆலோசனைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது பள்ளி திறப்பு ஒருவாரத்திற்கு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளி மாணவர்
பள்ளிக் கல்வித் துறை
தமிழ்நாடு
வெப்ப அலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Udhayanidhi Stalin : பயிர்க்கடன் தள்ளுபடியில் ஸ்கேம் பண்ணிருக்காங்க... முதல்வர் விஜய்யின் TVK அரசை கிழித்தெடுத்த உதயநிதி!
Recommended image2
Now Playing
தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்த இ.பி.எஸ் அணி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ-க்கள்!
Recommended image3
Now Playing
மே மாதம் சம்பளம் தள்ளிப்போகிறதா? அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அதிர்ச்சி.. என்ன காரணம்?
Related Stories
Recommended image1
Government Employee Salary: மே மாதம் சம்பளம் தள்ளிப்போகிறதா? அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அதிர்ச்சி.. என்ன காரணம்?
Recommended image2
Power Cut in Tamilnadu: போட்டு பொளக்கும் கத்திரி வெயில்! மே 27ம் தேதி தமிழகம் முழுவதும் மின்தடை அறிவிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved