- Home
- Tamil Nadu News
- காதல் கணவன் கூட பார்க்காமல் இதற்காக தான் கொலை செய்தேன்! ஷர்மிளா கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்
காதல் கணவன் கூட பார்க்காமல் இதற்காக தான் கொலை செய்தேன்! ஷர்மிளா கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்
Tiruvannamalai Crime: திருவண்ணாமலையில், லாரி ஓட்டுநரான கணவரின் நடத்தையில் சந்தேகப்பட்ட மனைவி, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் தனது கள்ளக்காதல் அம்பலமானதால் தாயுடன் சேர்ந்து கணவரை கொலை செய்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த இடையன்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜய்(27), லாரி டிரைவர். இவரது மனைவி ஷர்மிளா(25). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஹன்சிகா(4) என்ற மகளும், ஆஜீஸ்(3) என்ற மகனும் உள்ளனர். விஜய் லாரி ஓட்டுநர் என்பதால் வெளியூர்களுக்கு சென்று விட்டு 10 முதல் 15 நாட்கள் சென்றுவிட்டு வீட்டிற்கு வருவது வழக்கம்.
இந்நிலையில் விஜய்க்கு, மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 19ம் தேதி இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது விஜய், ஷர்மிளாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை கண்ட ஷர்மிளாவின் தாயார் ராணிபாத்திமா விஜய்யை கண்டித்துள்ளார்.
இந்நிலையில் விஜய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக ஷர்மிளா அக்கம்பக்கம் மற்றும் விஜய்யின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் இதனை விஜயின் உறவினர்கள் நம்பவில்லை. சாவில் சந்தேகம் இருப்பதாக சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் ஷர்மிளா, ராணிபாத்திமாவிடம் நடத்திய விசாரணையில் விஜய்யை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இருவரும் போலீசில் அளித்த வாக்குமூலத்தில்: விஜய்யின் நண்பர் சேத்துப்பட்டு அடுத்த அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த வாலிபர். இவரும் லாரி ஓட்டுநர். இவர் விஜய்யின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது ஷர்மிளாவுக்கும், அந்த வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. விஜய் வீட்டில் இல்லாத நேரத்தில் சென்று வந்துள்ளார். இவர்கள் இருவரும் காதலர் போல் ஒன்றாக சேர்ந்து பல இடங்களுக்கு சென்று ஜாலியாக ஊர் சுற்றியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் ரீல்ஸ்கள் மற்றும் போட்டோவை எடுத்துள்ளனர். இதை ஷர்மிளா இன்ஸ்டாவில் பதிவிட்டு வந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விஜய், ஷர்மிளாவை அடித்து உதைத்து கண்டித்துள்ளார்.
இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஷர்மிளா, ராணிபாத்திமா இருவரும் சேர்ந்து விஜய்யை உருட்டுக்கட்டையாலும், கம்பியாலும் தாக்கியுள்ளனர். மேலும் அவரது கழுத்தை கயிற்றால் கட்டி, ஜன்னல் கம்பியில் இறுக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் தூக்குபோட்டு கொண்டதாக நாடகமாடியுள்ளனர். ஷர்மிளாவுக்கு மேலும் பலருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

