MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினாரா சுதர்ஷன்? ‘டெக் சூப்பர்ஸ்டார்’ மீது மனைவி பரபரப்பு புகார்

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினாரா சுதர்ஷன்? ‘டெக் சூப்பர்ஸ்டார்’ மீது மனைவி பரபரப்பு புகார்

திருமணமான ஒரு வருடத்தில் யூடியூபர் சுதர்சன் மற்றும் அவரது பெற்றோர் மீது மனைவி விமலாதேவி வரதட்சணை கொடுமை புகார் அளித்துள்ளார். 30 பவுன் நகை மற்றும் ரூ. 5 லட்சம் கொடுத்தும், மேலும் 20 பவுன் நகை கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Jul 05 2025, 03:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தமிழகத்தை உலுக்கிய ரிதன்யா மரணம்
Image Credit : Asianet News

தமிழகத்தை உலுக்கிய ரிதன்யா மரணம்

திருப்பூரில் இளம்பெண் ரிதன்யா தற்கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான 77 நாட்களில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ரிதன்யாவின் தற்கொலைக்கு முக்கிய காரணமாக வரதட்சணை கொடுமை மற்றும் கணவர் கவின் குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோரால் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாக ரிதன்யாவின் வாட்ஸ் அப் ஆடியோ மெசேஜ் அனைவரையும் அதிர்ச்சி அடையசெய்துள்ளது.

 500 பவுன் நகை கேட்டு துன்புறுத்தப்பட்டதாகவும், தனது தற்கொலைக்கு இவர்கள் மூவரும் காரணம் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பவத்தையடுத்து ரிதன்யாவின் கணவர், மாமனார், மாமியார் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மறைவதற்குள் அடுத்ததாக பிரபல யூடியூப்பர் மீது வரதட்சனை கொடுமை தொடர்பாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

25
யூடியூப்பர் மீது வரதட்சனை புகார்
Image Credit : google

யூடியூப்பர் மீது வரதட்சனை புகார்

நாளுக்கு நாள் மாறி வரும் நவீன காலத்தில் படித்த படிப்பிற்கு சரியான சம்பளம் கிடைக்காத நிலையில், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவைகளில் வீடியோக்களை பதிவு செய்து பல லட்சம் சம்பாதிக்கும் நிலை தான் தற்போது உருவாகியுள்ளது. அந்த வகையில் மொபைல், டிவி, லேப்டாப் உள்ளிட்ட பொருட்களின் தரத்தை பற்றி வீடியோவாக வெளியிட்டு வருபவர் சுதர்சன், 

இவர் யூடியூப்பில் பதிவு செய்யும் வீடியோக்கள் சில மணி நேரங்களில் பல லட்சம் பார்வையாளர்களை கடந்து செல்லும். அப்படி யூடியூப்பில் பிரபலமாக இருக்கும் சுதர்சன் மற்றும் அவர் பெற்றோர் மீது தேனி மகளிர் போலிசில் வரதட்சனை புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சுதர்சன் மற்றும் அவரது குடும்பத்தை கைது செய்ய போலீசார் களம் இறங்கியுள்ளனர்.

Related Articles

Related image1
4 கிராம் தங்கம், கட்டில், மெத்தை பிரோவோடு 70 ஆயிரத்திற்கு சீர்வரிசை.! கோயிலில் திருமணம்- விண்ணப்பிப்பது எப்படி.?
Related image2
ரிதன்யா கணவருக்கு கொடுக்கப்பட்ட வரதட்சணைகள்! 300 பவுன் நகைகள், வால்வோ கார்! வைரலாகும் போட்டோஸ்!
35
வரதட்சனை கேட்டு கொடுமை படுத்தியதாக புகார்
Image Credit : google

வரதட்சனை கேட்டு கொடுமை படுத்தியதாக புகார்

சுதர்சன் மீது அவர் மனைவி கொடுத்துள்ள புகாரில், பாதிக்கப்பட்ட விமலாதேவி என்பவர் MBBS படித்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் டாக்டராக கடந்த 4 வருடங்களுக்கு முன்பு வேலை பார்த்து வந்தபோது சுதர்சன் என்பவர் அறிமுகமாகி இருவரும் காதலித்து பெரியோர்கள் சம்மதத்தின் பேரில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் மதுரை வளையாபதி திருமண மண்டபத்தில் வைத்து திருமணம் நடைப்பெற்றதாகவும்

திருமணத்தின் போது விமலா தேவியின் பெற்றோர் 30 பவுன் தங்கநகையும், ரூ. 5,00,000/-ம் ரொக்கம் மற்றும் ரூ. 2,00,000/-ம் மதிப்பான சீர்வரிசை பொருட்களும் கொடுத்து நடத்தியுள்ளனர். திருமணத்தின் போது சுதர்சன் you tube Channel-ல் Technical Boss ஆக வேலை பார்த்ததாகவும் அதன் பின் Tech Super star Channel' நடத்தியும் வந்துள்ளார்.

45
20 பவுன் நகை வேண்டும்
Image Credit : google

20 பவுன் நகை வேண்டும்

அப்போது வீடு சொந்தமாக வீடு கட்டும் போது விமலா தேவியிடம் 30 பவுன் நகையை பெற்றுக்கொண்டதாகவும் வீடுகட்டி புது வீட்டிற்கு குடிபோனதாகவும் அதன் பின் வீட்டுக்கடனை அடைக்க முடியவில்லை என்றும் எனவே சீர்வரிசை பொருட்கள் போதாது என்றும் டாக்டருக்கு படிச்சு என்ன சம்பாதிச்சு என்கொடுக்கிறாய், ஒன்னுக்கும் பத்தல, என்றும் மேலும் 20 பவுன் நகைகொண்டுவந்தால் தான் பெண்ணை வீட்டில் வைத்து கொள்வம் என்று கூறி விமலாதேவியை சுதர்சனின் பெற்றோர்கள் அசிங்கமாக பேசியதாகவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

55
கொலை மிரட்டல்- போலீசார் வழக்கு பதிவு
Image Credit : google

கொலை மிரட்டல்- போலீசார் வழக்கு பதிவு

இதனையடுத்து 30.04.2025-ம் தேதி வீரபாண்டி கோவில் அருகில் வைத்து இருதரப்பினரும் பேச்சுவார்த்தையின் போது விமலா தேவி மற்றும் குழந்தையையும் அழைத்துச்செல்வது சம்மந்தமாக பேச்சுவார்த்தை நடந்த போது சுதர்சன் மற்றும் அனைவரும் ஒன்று சேர்ந்து 10,00,000/-ம் பணத்தையும் பெற்றுக்கொண்டு வாதியின் 30 பவுன் நகையை விற்று மேலும் 20 பவுன் நகை கொண்டு வந்தால் வாழமுடியும் என்று அசிங்கமாக பேசி கொலைமிரட்டல் விடுத்ததாக அந்த புகார் மனுவில் தெரிவித்துளார். இதனையடுத்து சுதர்சன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
காவல்
குற்றம்
திருமணம்
காவல் நிலையம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!
Recommended image2
26 வயது அபிராமி இருந்த அந்த கோலம்! நேரில் பார்த்த கணவருக்கு நடந்த அதிர்ச்சி.! போலீஸ் விசாரணையில் பகீர்!
Recommended image3
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!
Related Stories
Recommended image1
4 கிராம் தங்கம், கட்டில், மெத்தை பிரோவோடு 70 ஆயிரத்திற்கு சீர்வரிசை.! கோயிலில் திருமணம்- விண்ணப்பிப்பது எப்படி.?
Recommended image2
ரிதன்யா கணவருக்கு கொடுக்கப்பட்ட வரதட்சணைகள்! 300 பவுன் நகைகள், வால்வோ கார்! வைரலாகும் போட்டோஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved