MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • எதுக்கு இவ்வளவு அவசரப்படுறீங்க இபிஎஸ்! முதல்வராக இருந்த நீங்களே இப்படி பண்ணலாமா? கடுப்பாகும் அமைச்சர் ரகுபதி!

எதுக்கு இவ்வளவு அவசரப்படுறீங்க இபிஎஸ்! முதல்வராக இருந்த நீங்களே இப்படி பண்ணலாமா? கடுப்பாகும் அமைச்சர் ரகுபதி!

திருமயம் பகுதியில் கனிமவளக் கொள்ளை தொடர்பாக புகார் அளித்த அதிமுக பிரமுகர் ஜெபகர் அலி லாரி மோதி உயிரிழந்த சம்பவம் கொலையா விபத்தா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

2 Min read
vinoth kumar
Published : Jan 20 2025, 12:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Pudukkottai Jagabar Ali Murder

Pudukkottai Jagabar Ali Murder

புதுக்கோட்டை மாவட்டம் வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அதிமுக பிரமுகரான ஜெபகர் அலி. திருமயம் பகுதியில் தொடர்ந்து கனிம வள கொள்ளை நடப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு ஆதாரங்களடன் தொடர்ந்து பல முறை புகார் அளித்து வந்துள்ளார். இதன் காரணமாக ஜெபகர் அலிக்கு கனிம வள கொள்ளையர்களால் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிவாசலில் தொழுகை முடித்து வீடு திரும்பியவர் மீது டிப்பர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலையே உயிரிழந்தார். இந்த சம்பவம் முதலில் விபத்து என கூறப்பட்டு வந்த நிலையில் கல்குவாரியை சேர்ந்தவர்கள் திட்டமிட்டு கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் கனிமவளக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து,  மிக மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது திமுக அரசு என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். 

26
Edappadi Palanisamy

Edappadi Palanisamy

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் திருமயம் தெற்கு ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளரும், முன்னாள் அஇஅதிமுக ஒன்றிய குழு உறுப்பினர், புதுக்கோட்டை மாவட்ட அமைச்சூர் கபடி கழக செயலாளரும், சமூக ஆர்வலருமான  ஜெபகர் அலி அவர்கள் சமூக விரோதிகளால் லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது

36
AIADMK

AIADMK

கனிமவளக் கொள்ளை தொடர்பாக, திருமயம் வட்டாட்சியரைச் சந்தித்து புகார் செய்து, 15 நாட்களுக்கும் மேலாக ஆகியும், மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும், மாவட்ட ஆட்சியரிடமே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது அவரைப் சமூக விரோதிகள் லாரி ஏற்று படுகொலை செய்திருக்கிறார்கள் என்ற செய்தி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்தக் கொலைக் குற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள், கனிமவளக் கொள்ளையர்களை விட்டுவிட்டு, லாரி டிரைவர் உள்ளிட்டவர்களை மட்டும் கைது செய்து வழக்கை திசை திருப்பி வருகிறது இந்த விடியா அரசு.

46
DMK Government

DMK Government

கனிமவளக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து,  மிக மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது திமுக அரசு. ஜெகபர் அலி அவர்கள் இறப்புக்கு நீதி வேண்டும். கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகளும் அவரது மரணத்திற்குப் பொறுப்பு. உரிய விசாரணை நடத்தி, அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அடிப்படை புரிதல் கூட இல்லாமல் இவ்வாறு அவதூறு பரப்பலாமா? என அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார். 

56
Minister Ragupathy

Minister Ragupathy

இதுதொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: புதுக்கோட்டை அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெபகர் அலி உயிரிழந்த சம்பவத்தில் முதல் கட்டமாக லாரி டிரைவர் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  தீவிரமான விசாரணை நடந்து வருகிறது. விரைவில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். சம்பவம் நடந்து சில மணி நேரங்களிலேயே சந்தேகத்திற்கிடமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் எடப்பாடி ஏன் இத்தனை அவசரப்படுகிறார் என்று புரியவில்லை. 

66
Edappadi Palanisamy Vs Ragupathy

Edappadi Palanisamy Vs Ragupathy

லாரி ஓட்டிச்சென்ற லாரி டிரைவரை கைது செய்தது வழக்கை திசை திருப்பும் செயலா? முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அடிப்படை புரிதல் கூட இல்லாமல் இவ்வாறு அவதூறு பரப்பலாமா? தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தையே டிவியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று சொன்னவர்தானே என்று கடந்து போக வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ளார். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அதிமுக
திமுக
Latest Videos
Recommended Stories
Recommended image1
தைலாபுரத்துக்கே மோடி நேரில் அதிரடி விசிட்..! அப்பா- மகனை கைப்பிடித்து சேர்த்து வைக்க பக்கா ஸ்கெட்ச்..!
Recommended image2
பிரதமர் மோடியை தீர்த்துக் கட்டினால் தமிழகம் நன்றாக இருக்கும்..! திமுக தலைவரின் பேச்சால் சர்ச்சை!
Recommended image3
குத்துப்பாட்டு, கவர்ச்சி இருந்தால் தான் சினிமாவா? திருமாவளவன் பரபரப்பு பேச்சு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved