MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழகத்தில் மழை குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த வானிலை மையம்!

தமிழகத்தில் மழை குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த வானிலை மையம்!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால், தமிழகத்தில் பல மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. 

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 27 2025, 03:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
 தென்மேற்கு பருவமழை
Image Credit : our own

தென்மேற்கு பருவமழை

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து அம்மாநிலத்தை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

24
கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு
Image Credit : Google

கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு

அதேபோல் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Related Articles

Related image1
அடுத்த 3 நேரத்தில் நீலகிரி முதல் தேனி வரை! இந்த 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
Related image2
ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் மின்தடையா? எந்தெந்த பகுதிகளில் எத்தனை மணிநேரம்!
34
ஜூன் 29 முதல் ஜூலை 03ம் தேதி வரை
Image Credit : Google

ஜூன் 29 முதல் ஜூலை 03ம் தேதி வரை

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு

இன்று முதல் ஜூலை 01ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஒரிரு இடங்களில் சற்று உயரக்கூடும்.

44
சென்னை வானிலை முன்னறிவிப்பு
Image Credit : our own

சென்னை வானிலை முன்னறிவிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39°செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மழை செய்திகள்
தமிழ்நாடு மழை
கனமழை
கோயம்புத்தூர்
தமிழ்நாடு வானிலை அறிக்கை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மீனவர் வாழ்வில் ஒளி வீசும்! - கன்னியாகுமரியில் விஜய் கொடுத்த அதிரடி வாக்குறுதிகள் | TVK Vijay Speech
Recommended image2
Now Playing
கன்னியாகுமரியில் "சைக்கிளில்" வந்து விஜய் அதிரடி வேட்டை! திகைத்துப்போன தொண்டர்கள் ! | TVK Vijay
Recommended image3
Now Playing
வெற்றி உறுதி...களத்தில் இறங்கிட்டோம்! - கன்னியாகுமரியில் விஜய் ஆவேச பேச்சு | TVK Vijay Speech
Related Stories
Recommended image1
அடுத்த 3 நேரத்தில் நீலகிரி முதல் தேனி வரை! இந்த 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
Recommended image2
ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் மின்தடையா? எந்தெந்த பகுதிகளில் எத்தனை மணிநேரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved