TNPSC Group 4 Exam Result: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான முக்கிய தகவல்!
TNPSC Group 4 Exam Result: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வாணையத்தின் ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு தேதி அறிவிக்கப்படும்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 30ம் தேதி வெளியாகி, ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் பிப்ரவரி 28ம் தேதி வரை பெறப்பட்டது. 8,932 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு ஜூன் 9ம் தேதி நடைபெற்றது.
அதன்படி கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், தனி உதவியாளர், கிளார்க் என பல பணிகளுக்கு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், தமிழகம் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் மொத்தம் 15.8 லட்சம் பேர் குரூப் 4 தேர்வை எழுதியுள்ளனர்.
இதையும் படிங்க: School Holiday: ஹேப்பி நியூஸ்! நவம்பர் 7ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை! வெளியான சூப்பர் அறிவிப்பு!
குரூப் 4 தேர்வுகளை பொறுத்த வரை நேர்முகத்தேர்வு இல்லை. இந்த எழுத்து தேர்வில் உரிய கட் ஆஃப் மதிப்பெண்ணை பெற்றால் ஆவண சரிபார்ப்புக்கு பின் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கப்படும். ஆனால் கட் ஆஃப் மதிப்பெண்ணை டிஎன்பிஎஸ்சி இன்னும் அறிவிக்கவில்லை.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி-யின் புதிய தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் பொறுப்பேற்ற பிறகு தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் இருக்கும் கால தாமதத்தை குறைப்போம் என உறுதியளித்தார். அதன்படி குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இதையும் படிங்க: November Month School Holiday: நவம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா? வெளியான தகவல்!
இந்நிலையில் தேர்வர்கள் குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, வரும் 28-ம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் நிர்வாகிகள் ஆலோசித்து தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து முடிவெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டம் முடிவடைந்த சில தினங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.